எம்வி அகுஸ்ட்டாவின் புதிய பைக் விற்பனைக்கு அறிமுகம்: தயவு செஞ்சி விலைய தெரிஞ்சிக்க முயற்சிக்காதீங்க!

மிக மிக அதிக விலைக் கொண்ட டூரிங் ரக பைக்கை எம்வி அகுஸ்ட்டா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: தயவு செஞ்சி இதோட விலைய மட்டும் தெரிஞ்சிக்க முயற்சி பண்ணாதீங்க!

கைனடிக் நிறுவனத்தின்கீழ் இயங்கி வரும் எம்வி அகுஸ்ட்டா நிறுவனம், பிரிமியம் ரகத்திலான இருசக்கர வாகனங்களைத் தயாரித்து வருகின்றது.

இந்நிறுவனம், இந்தியாவில் தனது ஆதிக்கத்தைப் பலப்படுத்தும் விதமாக, அதன் முக்கிய தயாரிப்புகள் சிலவற்றை தொடர்ச்சியாக களமிறக்கி வருகின்றது.

எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: தயவு செஞ்சி இதோட விலைய மட்டும் தெரிஞ்சிக்க முயற்சி பண்ணாதீங்க!

அந்தவகையில், இன்று (வியாழன் கிழமை) அதன் புத்தம் புதிய டூரிங் ரகத்திலான டூரிஷ்மோ வெலாஸ் 800 மாடல் பைக்கை எம்வி அகுஸ்ட்டா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த பைக், இதுவரை இந்தியாவில் அறிமுகமான டூரர் ரக மோட்டார்சைக்கிள் கொண்டிராத விலையில் அறிமுகமாகியுள்ளது. அந்த வகையில், எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 பைக்கிற்கு ரூ. 18.99 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: தயவு செஞ்சி இதோட விலைய மட்டும் தெரிஞ்சிக்க முயற்சி பண்ணாதீங்க!

இருப்பினும், முதல் மூன்று வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த பைக்கை ரூ. 16.99 லட்சம் என்ற விலையில் விற்பனைச் செய்ய அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

இந்த தொகையை வைத்து, மலிவு விலையில் களமிறங்கியுள்ள ஹூண்டாய் வெனியூ மற்றும் ரெனோ ட்ரைபர் ஆகிய கார்களின் நான்கு யூனிட்டுகளை வாங்க முடியும்.

எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: தயவு செஞ்சி இதோட விலைய மட்டும் தெரிஞ்சிக்க முயற்சி பண்ணாதீங்க!

மேற்கூறிய அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இந்த பைக் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

மேலும், இந்த புதிய பைக்கின் அறிமுகத்தோடு, அந்நிறுவனம் மும்பை நவி பகுதியில் தொடங்கப்பட்டுள்ள புத்தம் புதிய டீலர்ஷிப் ஷோரூமையும் திறந்து வைத்துள்ளது.

எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: தயவு செஞ்சி இதோட விலைய மட்டும் தெரிஞ்சிக்க முயற்சி பண்ணாதீங்க!

தற்போது அறிமுகமாகியுள்ள இந்த எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 பைக், இந்தியாவின் அட்வென்சர் டூரிங் செக்மெண்டில் களமிறங்கியுள்ளது. இந்த பைக்கின் டிசைன் தாத்பரியங்கள் எஃப்3 சூப்பர் ஸ்போர்ட் மாடலில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பைக்கின் முகப்பு பகுதியைப் பார்த்தாலே அது நமக்கு தெரிந்துவிடும்.

எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: தயவு செஞ்சி இதோட விலைய மட்டும் தெரிஞ்சிக்க முயற்சி பண்ணாதீங்க!

மேலும், பைக்கில் நீண்ட தூரம் பயணத்தை மேற்கொள்வதற்கு ஏதுவான பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற்றிருக்கின்றது. அதில், ஒன்றாக சற்று உயர்த்தப்பட்ட ஹேண்டில்பார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இத்துடன், செதுக்கப்பட்ட ப்யூவல் டேங்க், ஸ்பிளிட் செய்யப்பட்ட இருக்கை மற்றும் வின்ட் ஸ்கிரீன் உள்ளிட்டவை இதில் இடம்பெற்றுள்ளது.

எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: தயவு செஞ்சி இதோட விலைய மட்டும் தெரிஞ்சிக்க முயற்சி பண்ணாதீங்க!

மேலும், கூடுதலாக எல்இடி டெயில் லேம்ப், க்னக்கிள் குவார்ட் மற்றும் நீண்ட தூர பயணத்திற்கு ஏதுவான சஸ்பென்ஷன் உள்ளிட்டவை நிறுவப்பட்டுள்ளது.

இத்துடன், பைக்கின் உறுதியான கட்டமைப்பிற்காக ட்ரெல்லிஸ் ஃபிரேம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது பைக்கிற்கான இலகுவான எடையைக் கொடுப்பதுடன் அதிக வேகத்திற்கு எந்தவொரு தடையும் வழங்காமல் பயணிக்க உதவும்.

எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: தயவு செஞ்சி இதோட விலைய மட்டும் தெரிஞ்சிக்க முயற்சி பண்ணாதீங்க!

இந்த பைக்கில் அதீத திறனை வெளிப்படுத்தும் வகையில், 798 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த 3 சிலிண்டர் அமைப்புடைய எஞ்ஜின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 83 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது.

எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: தயவு செஞ்சி இதோட விலைய மட்டும் தெரிஞ்சிக்க முயற்சி பண்ணாதீங்க!

இத்துடன், இந்த எஞ்ஜினில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் உச்சபட்சமாக மணிக்கு 230 கிமீ என்ற வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டுள்ளது. மேலும், இந்த எஞ்ஜினில் சிறப்பு அம்சமாக ஸ்லிப்பர் க்ளட்ச் மற்றும் 8 நிலைகளுடன் கூடிய டிராக்சன் கன்ட்ரோல் குயிக் ஷிஃப்டர் ஆகியவை காணப்படுகின்றது.

எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: தயவு செஞ்சி இதோட விலைய மட்டும் தெரிஞ்சிக்க முயற்சி பண்ணாதீங்க!

தொடர்ந்து, சஸ்பென்ஷன் அமைப்பைப் பற்றி பார்ப்போமேயானால், பைக்கின் முன்பக்கத்திற்கு மர்ஸோச்சி அப்சைட் டவுன் ஃபோர்க் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, பின் பக்கத்தில் மோனோசாக் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சஸ்பென்ஷன் ப்ரீலோட், ரீபவுண்ட் மற்றும் கம்ப்ரஸ்ஸன் அட்ஜெஸ்ட்மெண்ட் திறன் கொண்டவையாக இருக்கின்றன.

எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: தயவு செஞ்சி இதோட விலைய மட்டும் தெரிஞ்சிக்க முயற்சி பண்ணாதீங்க!

மேலும், சிறப்பான பிரேக்கிங் வசதிக்காக டூரிஷ்மோ வெலாஸ் 800 பைக்கின் முன் பக்க வீலுக்கு 4 பாட் காலிபர்கள் கொண்ட 320 மிமீ அளவுகொண்ட டிஸ்க்கும், பின் பக்க வீலுக்கு 220 மிமீ அளவுகொண்ட டிஸ்க்கும் வழங்கப்பட்டுள்ளது.

எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: தயவு செஞ்சி இதோட விலைய மட்டும் தெரிஞ்சிக்க முயற்சி பண்ணாதீங்க!

இந்த பைக்கில் 17 இன்சிலான அலாய் வீல் காணப்படுகின்றது. அதன் முன் வீலில் 120/70 என்ற அளவு கொண்ட டயரும், பின் பக்கத்தில் 190/55 அளவினாலான டயர்கள் இணைக்கப்பட்டுள்ளன.

இவை கரடு முரடான சாலைகளில் சுலபமாக பயணிக்கும் வகையிலான அமைப்பப் பெற்றிருக்கின்றது.

எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: தயவு செஞ்சி இதோட விலைய மட்டும் தெரிஞ்சிக்க முயற்சி பண்ணாதீங்க!

இந்த பைக் சிவப்பு, நீலம் மற்றும் க்ரே ஆகிய மூன்று வண்ணங்களில் விற்பனைக்கு கிடைக்கின்றது. அதேசமயம், இந்த பைக்கில் ஒரு வேரியண்ட் மட்டும்தான் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஆனால், சர்வதேச சந்தையில், ஸ்டாண்டர்டு, லஸ்ஸோ, லஸ்ஸி எஸ்சிஎஸ் மற்றும் ஆர்சி எஸ்சிஎஸ் ஆகிய நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

எம்வி அகுஸ்ட்டா டூரிஷ்மோ வெலாஸ் 800 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்: தயவு செஞ்சி இதோட விலைய மட்டும் தெரிஞ்சிக்க முயற்சி பண்ணாதீங்க!

எம்வி அகுஸ்ட்டா நிறுவனத்தின் இந்த புத்தம் புதிய டூரிஷ்மோ வெலாஸ் 800 பைக் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் டுகாட்டி மல்டிஸ்ட்ரடா 950 மற்றும் டிரையம்ப் டைகர் 800 எக்ஆர்எக்ஸ் மாடல்களுடன் போட்டியிட இருக்கின்றது.

Most Read Articles
English summary
MV Agusta Turismo Veloce 800 Adventure Launched With Most Expensive Price. Read In Tamil.
Story first published: Thursday, August 29, 2019, 16:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X