அசத்தலான ஐந்து விதமான நிறங்களில் அறிமுகமாகும் 2020 கவாஸாகி இசட்900 பைக்

இத்தாலியில் நடைபெற்று வரும் ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சியில் உலகில் உள்ள பல முன்னணி நிறுவனங்களும் தங்களது லேட்டஸ்ட் மாடல் பைக்குகளையும் விரைவில் வெளியிடவுள்ள பைக்குகளையும் வாடிக்கையாளர்களின் பார்வைக்காக அறிமுகம் செய்துள்ளன.

அசத்தலான ஐந்து விதமான நிறங்களில் அறிமுகமாகும் 2020 கவாஸாகி இசட்900 பைக்

அந்த வகையில் கவாஸாகி நிறுவனம் இந்தியாவில் 2020ல் அறிமுகப்படுத்தவுள்ள புதிய இசட்900 மாடலை புதிய தொழிற்நுட்பங்கள் மட்டும் யூரோ-5விற்கு இணக்கமான என்ஜினுடன் ஐக்மா கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த புதிய பைக் குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

அசத்தலான ஐந்து விதமான நிறங்களில் அறிமுகமாகும் 2020 கவாஸாகி இசட்900 பைக்

யூரோ-5விற்கு இணக்கமான என்ஜின் மட்டுமல்லாமல், எலக்ட்ரானிக்ஸ் ஷூட், கவாஸாகி ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் (கேஆர்டிசி) என அழைக்கப்படும் மூன்று நிலை ட்ராக்‌ஷன் கண்ட்ரோல், இரு பவர் மோட்களையும் இந்த இசட்900 பைக் தன்னுள் கொண்டுள்ளது. மேலும் சாலை, மழை, ஸ்போர்ட் மற்றும் மேனுவல் என்ற நான்கு விதமான ரைடிங் மோட்களும் இந்த பைக்கில் உள்ளன.

அசத்தலான ஐந்து விதமான நிறங்களில் அறிமுகமாகும் 2020 கவாஸாகி இசட்900 பைக்

வெளிப்புற தோற்றத்தில் மிக பெரிய மாற்றமாக எல்இடி லைட் புதுமையான வடிவில் 'முரட்டுத்தனமான Z சுகோமி ஸ்டைலிங்கின் அடுத்த கட்டம்' என்ற பெயரில் பொருத்தப்பட்டுள்ளது. இதனுடன் ப்ளூடூத் இணைப்புடன் கூடிய டிஎஃப்டி டேஸ் புதிய நிறத்தில் மாற்றப்பட்டுள்ளது.

அசத்தலான ஐந்து விதமான நிறங்களில் அறிமுகமாகும் 2020 கவாஸாகி இசட்900 பைக்

இந்த புதிய 2020 கவாஸாகி இசட்900 பைக், மெட்டாலிக் கிராஃபைட் க்ரே, மெட்டாலிக் ஸ்பார்க் ப்ளாக் மற்றும் பேர்ல் பிளிஸார்ட் வொய்ட், மெட்டாலிக் ஸ்பார்க் ப்ளாக் ப்ளஸ் கேண்டி லைம் க்ரீன், மெட்டாலிக் ஸ்பார்க் ப்ளாக் வித் மெட்டாலிக் பிளாட் ஸ்பார்க் ப்ளாக் போன்ற நிற தேர்வுகளில் விற்பனையாகவுள்ளது.

அசத்தலான ஐந்து விதமான நிறங்களில் அறிமுகமாகும் 2020 கவாஸாகி இசட்900 பைக்

மற்றப்படி பைக்கின் என்ஜின் அதே பெரிய அளவில் எந்தவொரு மாற்றமின்றி உள்ளது. ஆனால் இதன் என்ஜின் யூரோ-5விற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்டுள்ளதால் வெளியிடப்படும் ஆற்றல் அதிகமாக இருக்கும்.

Most Read:ஹீரோ எக்ஸ்பல்ஸ் பைக்கிற்கு பிரத்யேக 'ராலி கிட்' அறிமுகம்

அசத்தலான ஐந்து விதமான நிறங்களில் அறிமுகமாகும் 2020 கவாஸாகி இசட்900 பைக்

என்ஜின் யூரோ-5விற்கு இணக்கமாக மாற்றப்பட்டதை தவிர்த்து இயந்திர பாகங்கள் எதுவும் மாற்றப்பட்டதாக தெரியவில்லை. இந்த கவாஸாகி இசட்900 பைக்கில் உள்ள 948சிசி என்ஜின் நான்கு சிலிண்டர் அமைப்புகளுடன் அதிகப்பட்சமாக 9,500 ஆர்பிஎம்மில் 124 பிஎச்பி பவரையும் 7,700 ஆர்பிஎம்மில் 98.9 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

Most Read:மிக பெரிய டிஸ்க் ப்ரேக்குடன் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 1.ஆர் கான்செப்ட் அறிமுகம்...

அசத்தலான ஐந்து விதமான நிறங்களில் அறிமுகமாகும் 2020 கவாஸாகி இசட்900 பைக்

இதன் கெர்ப் எடை 212 கிலோவாகவும் இருக்கையின் உயரம் 820 மிமீ ஆகவும் உள்ளது. இந்த வருடத்தின் இறுதியில் ஐரோப்பாவில் அறிமுகமாகவுள்ள இந்த புதிய கவாஸாகி இசட்900 பைக்கை இந்தியாவில் 2020ஆம் ஆண்டின் முதல் பாதியில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
New 2020 Kawasaki Z900 Unveiled at EICMA 2019 With More Technology
Story first published: Wednesday, November 6, 2019, 19:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X