புதிய ஏப்ரிலியா ஜிபிஆர் 250 பைக் அறிமுகம்... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு!

இந்தியாவின் பிரிமீயம் இருசக்கர வாகன மார்க்கெட்டில் இத்தாலியை சேர்ந்த ஏப்ரிலியா நிறுவனத்தின் பைக், ஸ்கூட்டர் மாடல்களுக்கு தனி வாடிக்கையாளர் வட்டம் உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் வர்த்தகத்தை ஸ்திரப்படுத்தும் விதத்தில், குறைவான சிசி திறன் கொண்ட பிரிமீயம் பைக் மாடல்களை அறிமுகப்படுத்த ஏப்ரிலியா திட்டமிட்டுள்ளது.

புதிய ஏப்ரிலியா ஜிபிஆர் 250 பைக் அறிமுகம்... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு!

கடந்த ஆண்டு ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிக்கு வைக்கப்பட்ட ஆர்எஸ்150 மற்றும் டூவோனோ 150 ஆகிய மாடல்களை விரைவில் இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு ஏப்ரிலியா திட்டமிட்டுள்ளதாக அண்மையில் செய்தி வெளியிட்டு இருந்தோம். இந்த நிலையில், அண்மையில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஏப்ரிலியா ஜிபிஆர் 250 ஸ்போர்ட்ஸ் பைக் மாடலும் இந்தியாவில் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

புதிய ஏப்ரிலியா ஜிபிஆர் 250 பைக் அறிமுகம்... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு!

ஏப்ரிலியா நிறுவனத்தின் உலக பிரபல்யமான ஆர்எஸ்வி4 சூப்பர் பைக்கின் டிசைன் தாத்பரியங்களுடன் புதிய ஜிபிஆர் 250 பைக் மாடலானது வடிவமைக்கப்பட்டுள்ளது. முழுமையான ஃபேரிங் பேனல்களுடன் ஒரு சூப்பர் பைக்கிற்கு உரிய அம்சங்களை இந்த பைக் பெற்றிருக்கிறது.

புதிய ஏப்ரிலியா ஜிபிஆர் 250 பைக் அறிமுகம்... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு!

இந்த பைக்கில் இருக்கும் சிங்கிள் சிலிண்டர் அமைப்புடைய 249 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 26.5 பிஎஸ் பவரையும், 22 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய ஏப்ரிலியா ஜிபிஆர் 250 பைக் அறிமுகம்... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு!

இந்த பைக் 150 கிலோ கெர்ப் எடை கொண்டது. முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளுடன் சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டுள்ளது.

புதிய ஏப்ரிலியா ஜிபிஆர் 250 பைக் அறிமுகம்... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு!

அதேபோன்று, முன்புறத்தில் ரேடியல் காலிபருடன் 300 மிமீ டிஸ்க பிரேக்கும், பின்புறத்தில் டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் முன்புறத்தில் 100/80-R17 டயரும், பின்புறத்தில் 130/70-R17 டயரும் உள்ளன.

புதிய ஏப்ரிலியா ஜிபிஆர் 250 பைக் அறிமுகம்... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு!

க்ளிப் ஆன் வகை ஹேண்டில்பார், சற்று பின்னோக்கி தள்ளி இருக்கும் ஃபுட்பெக்குகள், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இந்த பைக் 1,950 மிமீ நீளமும், 770 மிமீ அகலமும், 1,100 மிமீ உயரமும் பெற்றுள்ளது. இதன் வீல் பேஸ் 1,350 மிமீ ஆக உள்ளது.

புதிய ஏப்ரிலியா ஜிபிஆர் 250 பைக் அறிமுகம்... இந்தியாவிலும் அறிமுகமாக வாய்ப்பு!

புதிய ஏப்ரிலியா ஜிபிஆர் 250 பைக் மாடலானது ரூ.2.20 லட்சம் விலையில் எதிர்பார்க்கலாம். ஹோண்டா சிபிஆர்250ஆர், சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆ்ர்310 பைக் மாடல்களுடன் போட்டி போடும்.

Source: Newmotor

Most Read Articles
மேலும்... #அப்ரிலியா #aprilia
English summary
Italian premium two wheeler maker, Aprilia has unveiled the all new GPR 250 sports bike in China recently and its expected to come to Indian shore also sometime later.
Story first published: Tuesday, September 24, 2019, 11:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X