பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருக்கும் அட்டகாசமான விஷயங்கள்!

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நேற்று பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டடுவிட்டது. இன்னும் இரண்டு மாதங்களில் சந்தைக்கு வர இருக்கிறது. அற்புதமான டிசைனுடன் மார்க்கெட்டில் உள்ள அனைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களைவிட மிகச் சிறந்த தேர்வாக பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கும். இந்த ஸ்கூட்டரின் முக்கிய சிறப்பு அம்சங்களை இந்த செய்தியில் உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருக்கும் அட்டகாசமான விஷயங்கள்!

01. ஸ்டீல் பாடி

எலெக்ட்ரிக் வாகனங்களின் பயண தூரத்தை அதிகரிக்கும் வண்ணம் அதிக எடை கொண்ட பாகங்களுக்கு பதிலாக, அதே தரத்திலான பாகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பெரும்பாலும் ஃபைபர் பிளாஸ்டிக் பேனல்கள் பயன்படுத்துவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் உலோகத் தகடுகள் கொண்ட உடல் பாகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இது நிச்சயம் நீடித்த உழைப்பையும், அதிக உறுதித்தன்மையையும் பெற்றிருக்கும்.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருக்கும் அட்டகாசமான விஷயங்கள்!

02. முன்புற சஸ்பென்ஷன்

முன்புறத்தில் சிங்கிள் சைடு சஸ்பென்ஷன், அதாவது ஒரு பக்கத்தில் உள்ள ஷாக் அப்சார்பர் மூலமாக தாங்கும் அமைப்பை பெற்றிருக்கிறது. பழைய பஜாஜ் சேத்தக் கியர் ஸ்கூட்டரில் உள்ளது போன்றே, இந்த சிறப்புமிக்க ஒற்றை புற தாங்கு அமைப்புடைய காயில் ஸ்பிரிங் ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. பின்புறத்திலும் மோனோ ஷாக் அப்சார்பர்தான் வழங்கப்பட்டுள்ளது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருக்கும் அட்டகாசமான விஷயங்கள்!

03. அலாய் வீல்கள்

பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் கவர்ச்சிகரமான தோற்றத்தை வழங்கும் 12 அங்குல மல்டி ஸ்போக் அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது ஸ்கூட்டரின் வசீகரத்தை எங்கோ கொண்டு செல்கிறது. இந்த கருப்பு வண்ண அலாய் வீல்களின் ரிம்களில் சிவப்பு வண்ண பெயிண்ட் கொடுக்கப்ப்டடு இருப்பதம் கவர்ச்சியை கூட்டுகிறது.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருக்கும் அட்டகாசமான விஷயங்கள்!

04. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம்

பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரின் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுமட்டுமின்றி, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் நிரந்தர பாதுகாப்பு தொழில்நுட்பமாக இந்த ஸ்கூட்டரில் வழங்கப்படும். இது நிச்சயம் அதிக பாதுகாப்பு நிறைந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக இருக்கும்.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருக்கும் அட்டகாசமான விஷயங்கள்!

05. இன்டர்நெட் வசதி

பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் வட்ட வடிவிலான மிக அழகான டிஜிட்டல் திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் இ-சிம் கார்டுடன் வர இருப்பதால் நேரடி இணைய வசதி மூலமாக பல்வேறு தொழில்நுட்ப வசதிகளையும், தகவல்களையும் ஸ்மார்ட்ஃபோன் மூலமாக பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஸ்கூட்டர் இருக்கும் இடத்தை ஸ்மார்ட்ஃபோன் மூலமாக எளிதாக தெரிந்து கொள்வதற்கும், திருடு போவதை தவிர்ப்பதற்கும் இது முக்கிய வசதியை அளிக்கும். பேட்டரியில் சார்ஜ் அளவு, ஓடிய தூரம் உள்ளிட்ட இதர பல்வேறு தகவல்களையும் பெற முடியும்.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருக்கும் அட்டகாசமான விஷயங்கள்!

06. மின்மோட்டார்

பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரில் 4kW மின் மோட்டார் பயன்படுத்தப்பட இருக்கிறது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். ஈக்கோ மற்றும் ஸ்போர்ட் என்ற இருவிதமான டிரைவிங் மோடுகளுடன் வருகிறது. ஈக்கோ மோடில் வைத்து ஓட்டும்போது 95 கிமீ தூரம் பயணிப்பதற்கான வாய்ப்பையும், ஸ்போர்ட் மோடில் வைத்து ஓட்டும்போது 85 கிமீ தூரம் ஓட்டுவதற்கான வாய்ப்பையும் இதன் லித்தியம் அயான் பேட்டரி வழங்கும்.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருக்கும் அட்டகாசமான விஷயங்கள்!

07. ரிவர்ஸ் வசதி

புதிய பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் மின் மோட்டார் பின்புறமாக ஸ்கூட்டரை நகர்த்துவதற்கான ரிவர்ஸ் அசிஸ்ட் வசதியுடன் வர இருக்கிறது. இதன்மூலமாக, பெண்கள் மற்றும் வயதானவர்கள் எளிதாக இந்த ஸ்கூட்டரை பின்புறமாக நகர்த்துவதற்கான வாய்ப்பை பெற முடியும்.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருக்கும் அட்டகாசமான விஷயங்கள்!

08. எல்இடி விளக்குகள்

புதிய பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி இன்டிகேட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. மேலும், ஹெட்லைட் ஹவுசிங், இண்டிகேட்டர்கள் டிசைன் பாரம்பரியத்தையும், நவீன டிசைன் அம்சங்களையும் குழைத்து எடுத்தது போன்று மிக நேர்த்தியாக செய்துள்ளனர்.

பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் இருக்கும் அட்டகாசமான விஷயங்கள்!

09. புதிய பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் இடையிலான விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜனவரி மாதத்திலிருந்து விற்பனை துவங்கப்பட இருக்கிறது. முதலில் புனே நகரிலும், இதையடுத்து பெங்களூரிலும் விற்பனை செய்யப்பட இருக்கிறது. பஜாஜ் நிறுவனத்தின் புரோபைக்கிங் பிரிமீயம் ஷோரூம்கள் வாயிலாக விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Here’s everything that you should know about the Bajaj Chetak electric scooter.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X