பச்சை வண்ணத்தில் கலக்கலாக வரும் புதிய பஜாஜ் டோமினார் 400!

கவாஸாகி பைக்குகளை பிரதிபலிக்கும் விசேஷ பச்சை வண்ணத்தில் புதிய பஜாஜ் டோமினார் 400 பைக் வர இருப்பது தெரிய வந்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பச்சை வண்ணத்தில் கலக்கலாக வரும் புதிய பஜாஜ் டோமினார் 400!

வடிவமைப்பில் சிறிய மாறுதல்களுடன் கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட புதிய பஜாஜ் டோமினார் 400 பைக் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த புதிய டோமினார் பைக்கின் படங்கள் தொடர்ந்து இணையதளங்களில் வெளியாகி வருகின்றன.

பச்சை வண்ணத்தில் கலக்கலாக வரும் புதிய பஜாஜ் டோமினார் 400!

இந்த நிலையில், புதிய டோமினார் பைக்கின் புதிய படங்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் கவனிக்கத்தக்க விஷயமே, கவாஸாகி பைக்குகள் போன்றே விசேஷ கிளி பச்சை வண்ணத்தில் புதிய டோமினார் பைக் வர இருப்பது பைக் ஆர்வலர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பச்சை வண்ணத்தில் கலக்கலாக வரும் புதிய பஜாஜ் டோமினார் 400!

வடிவில் சிறியதாக திருத்தி அமைக்கப்பட்ட ஹெட்லைட் அமைப்பு, புதிய பாடி டீக்கெல் ஸ்டிக்கர்கள், ஃபோர்ஜ்டு அலுமினியத்தாலான ரியர் வியூ மிரர்கள் தாங்கிகள், டோமினார் பெயரை குறிக்கும் வகையில் இருக்கும் D எழுத்து பொறிக்கப்பட்ட இருக்கை என பல்வேறு மாறுதல்களை பெற்றிருக்கிறது.

பச்சை வண்ணத்தில் கலக்கலாக வரும் புதிய பஜாஜ் டோமினார் 400!

புதிய டோமினார் 400 பைக்கின் டிசைனில் பெரிய மாறுதல்கள் செய்யப்படவில்லை. ஆனால், இரட்டை பேரல் புகைப்போக்கி அமைப்பு பொருத்தப்பட்டு இருக்கிறது.

பச்சை வண்ணத்தில் கலக்கலாக வரும் புதிய பஜாஜ் டோமினார் 400!

இது ஸ்போர்ட்ஸ் க்ரூஸர் ரகத்தை சேர்ந்த மாடல் என்பதால், இந்த பைக்கில் எல்சிடி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பெட்ரோல் டேங்கில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கியர் பொசிஷன் இன்டிகேட்டர், ட்ரிப் மீட்டர், இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பது போன்ற பல தகவல்களை இந்த மீட்டர் கன்சோல் மூலமாக தெரிந்து கொள்ள முடியும்.

பச்சை வண்ணத்தில் கலக்கலாக வரும் புதிய பஜாஜ் டோமினார் 400!

இந்த பைக்கின் எஞ்சினில் மாற்றங்களும் இல்லை. இந்த பைக்கில் 373.3 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் தக்க வைக்கப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 35 பிஎச்பி பவரையும், 34 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

பச்சை வண்ணத்தில் கலக்கலாக வரும் புதிய பஜாஜ் டோமினார் 400!

புதிய மாடலில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகள் கொண்ட முன்புற சஸ்பென்ஷனும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கின் முன்புறத்தில் 320 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் வருகிறது.

பச்சை வண்ணத்தில் கலக்கலாக வரும் புதிய பஜாஜ் டோமினார் 400!

புதிய பஜாஜ் டோமினார் 400 பைக் மாடலானது கேடிஎம் ட்யூக் 390, ஹோண்டா சிபி300ஆர் மற்றும் ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 போன்ற மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

பச்சை வண்ணத்தில் கலக்கலாக வரும் புதிய பஜாஜ் டோமினார் 400!

கொசுறுத் தகவல்:

கவாஸாகி பைக்குகளில் இடம்பெறும் கிளி பச்சை வண்ணம் வாடிக்கையாளர் மத்தியில் பிரபலமானது. கவாஸாகி நிறுவனத்துடன் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கூட்டணி அமைந்து செயல்பட்டது. அந்த நினைப்பில் இந்த வண்ணத்தை பஜாஜ் ஆட்டோ சேர்த்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. கடந்த 2017ம் ஆண்டு பஜாஜ் ஆட்டோ நிறுவனத்துடனான கூட்டணியை கவாஸாகி முறித்துக் கொண்டு தனியாக இந்தியாவில் வர்த்தகத்தை செய்து வருகிறது.

Images Source: Overdrive

Most Read Articles
English summary
Bajaj Auto India is all set to introduce their new 2019 Dominar 400 in India. Ahead of its launch, fresh images of the 2019 Bajaj Dominar 400 has surfaced online. The images showcase the new Dominar 400 in a new green paint scheme.
Story first published: Tuesday, March 5, 2019, 15:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X