புக்கிங்கில் அசத்தும் புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக்

பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கிற்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது பெனெல்லி நிறுவனத்திற்கு உற்சாகத்தை அளித்துள்ளது.

புக்கிங்கில் அசத்தும் புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக்

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிள் மற்றும் ஜாவா பைக் மார்க்கெட்டை குறிவைத்து பெனெல்லி இம்பீரியல் 400 பைக் களமிறக்கப்பட்டது. பாரம்பரிய டிசைன் அம்சங்கள் மற்றும் நவீனத் தொழில்நுட்ப அம்சங்களுடன் இந்த பைக் வந்ததையடுத்து, வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

புக்கிங்கில் அசத்தும் புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக்

கடந்த அக்டோபர் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட இந்த புதிய பைக்கிற்கு செப்டம்பர் மாதமே முன்பதிவு துவங்கப்பட்டது. ஆன்லைனிலும், டீலர்களிலும் ரூ.4,000 முன்பணத்துடன் இந்த பைக்கிற்கு முன்பதிவு ஏற்கப்பட்டு வருகிறது.

புக்கிங்கில் அசத்தும் புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக்

இந்த நிலையில், அறிமுகம் செய்யப்பட்டு ஒன்றரை மாதங்களில் இதுவரை 4,000 பேர் புதிய பெனெல்லி இம்பீரியர் 400 பைக்கை முன்பதிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்த புதிய பைக் மூலமாக மிக அதிக எண்ணிக்கையில் முன்பதிவு பெற்றிருப்பது பெனெல்லி நிறுவனத்தின் வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வழங்கும்.

புக்கிங்கில் அசத்தும் புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக்

இந்த பைக்கில் வட்ட வடிவிலான ஹெட்லைட் அமைப்பு, க்ரோம் பூச்சுடன் கூடிய சைடு மிரர்கள், வலிமையான பெட்ரோல் பேங்க், இரட்டை இருக்கை அமைப்பு, ஸ்போக்ஸ் சக்கரங்கள், அகலமான பின்சக்கர டயர் என தோற்றத்தில் வசீகரமாக இருக்கிறது.

புக்கிங்கில் அசத்தும் புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக்

இந்த பைக்கில் சிங்கிள் சிலிண்டருடன் கூடிய 373.5 சிசி ஏர்கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்தை பெற்றிருக்கும் இந்த எஞ்சின் அதிகபட்சமாக 21 பிஎஸ் பவரையும், 29 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் உள்ளது. பிஎஸ்-6 மாடல் குறித்த தகவல் இதுவரை இல்லை.

MOST READ: 1,600 தொழிலாளர்களுக்கு வலுக்கட்டாயமாக ஓய்வளித்து வீட்டிற்கு அனுப்பும் டாடா மோட்டார்ஸ்..

புக்கிங்கில் அசத்தும் புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக்

இந்த பைக்கின் இரண்டு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கிறது. போட்டியாளர்களை விட இது நிச்சயம் பாதுகாப்பில் சிறந்த தேர்வாக இருக்கும்.

MOST READ: சும்மா கத விடாதீங்க பாஸ்.. இந்த பைக் விலை 62 லட்சமா..? லக்சூரி க்ரூஸர் இறக்குமதி செய்யப்பட்ட கதை!

புக்கிங்கில் அசத்தும் புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக்

புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கிற்கு ரூ1.69 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும், பாதுகாப்பு மற்றும் இதர அம்சங்கள் அடிப்படையில் இந்த விலைக்கான மதிப்பை வழங்குகிறது.

MOST READ: ஓடும் பேருந்தின் கியரை மாற்றி விளையாடிய சிறுவன்... டிரைவருக்கு கிடைத்த தண்டனை என்ன தெரியுமா..?

புக்கிங்கில் அசத்தும் புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக்

புதிய பெனெல்லி 400 பைக்கிற்கு மூன்று ஆண்டுகள் அல்லது வரம்பு இல்லாத கிலோமீட்டர் தூரத்திற்கான வாரண்டி நிரந்தரமாக கொடுக்கப்படுகிறது. இந்த பைக்கில் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு கட்டமில்லா சர்வீஸ் திட்டம் மற்றும் ஆண்டு பராமரிப்புத் திட்டங்களும் வழங்கப்படுகின்றன.

Source: Bikewale

Most Read Articles

மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli has received over 4000 bookings for its retro styled Imperiale 400 bike in India.
Story first published: Monday, December 2, 2019, 18:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X