புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக் அறிமுகம்... ராயல் என்ஃபீல்டுக்கு அடுத்த நெருக்கடி

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெனெல்லி இம்பீரியல் 400 பைக் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் க்ளாசிக் 350 பைக்கிற்கு போட்டியாக வந்திருக்கும் இந்த புதிய மாடலின் விலை, சிறப்பம்சங்கள் உள்ளிட்ட தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக் அறிமுகம்... ராயல் என்ஃபீல்டுக்கு அடுத்த நெருக்கடி

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மற்றும் ஜாவா ஆகிய பாரம்பரிய டிசைன் அம்சங்கள் பொருந்திய மாடல்களுக்கு நிகரான பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது. மேலும், 1950களில் உற்பத்தி செய்யப்பட்ட பெனெல்லி மோட்டோ-பி பைக்குகளின் டிசைன் அம்சங்களும் இந்த பைக்கில் கையாளப்பட்டுள்ளன.

புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக் அறிமுகம்... ராயல் என்ஃபீல்டுக்கு அடுத்த நெருக்கடி

இது பாரம்பரிய பைக் மாடல் என்பதை காட்டும் விதத்தில், வட்ட வடிவிலான க்ரில் அமைப்பு, க்ரோம் பூச்சுடன் கூடிய பளபளப்பான சைடு மிரர்கள், இண்டிகேட்டர்கள், சக்கரங்கள், கைப்பிடிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கில் ஸ்போக்ஸ் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக் அறிமுகம்... ராயல் என்ஃபீல்டுக்கு அடுத்த நெருக்கடி

இந்த பைக்கில் ஸ்பிளிட் வகை இருக்கைகள், பாரம்பரியத்தை போற்றும் சைலென்சர் குழாய், முன்புறத்தில் 19 அங்குல சக்கரம், பின்புறத்தில் 18 அங்குல சக்கரம் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. இந்த பைக்கில் முன்புறத்தில் 2 பிஸ்டன் ஃப்ளோட்டிங் வகை காலிபர்கள் கொண்ட 300 மிமீ சிங்கிள் டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளன. டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் முக்கிய பாதுகாப்பு வசதியாக உள்ளது.

புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக் அறிமுகம்... ராயல் என்ஃபீல்டுக்கு அடுத்த நெருக்கடி

இந்த பைக் 205 கிலோ எடை கொண்டது. 12 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் உள்ளது. இந்த பைக்கின் க்ரவுண்ட் கிளியரன்ஸ் 165 மிமீ ஆக உள்ளது. தரையிலிருந்து இருக்கை உயரம் 780 மிமீ என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

MOST READ:இந்தியாவில் ஃபோக்ஸ்வேகன் பஸாத் கார் விற்பனை நிறுத்தம்

புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக் அறிமுகம்... ராயல் என்ஃபீல்டுக்கு அடுத்த நெருக்கடி

இந்த பைக்கில் இருக்கும் ஒற்றை சிலிண்டர் அமைப்புடைய 374 சிசி எஞ்சின் 21 எச்பி பவரையும், 29 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சக்கரங்கள், டயர்கள், பிரேக் சிஸ்டம், எலெக்ட்ரிக்கல் சிஸ்டம் ஆகியவை இந்திய சப்ளையர்களிடமிருந்து பெறப்படுகின்றன.

MOST READ:சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீசார் செக்வே ஸ்கூட்டரில் ரோந்து!

புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக் அறிமுகம்... ராயல் என்ஃபீல்டுக்கு அடுத்த நெருக்கடி

புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக் சிவப்பு, கருப்பு மற்றும் சில்வர் ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும். இந்த பைக் பாரம்பரிய மோட்டார்சைக்கிள் பிரியர்களை கவரும் வகையில் இருக்கும்.

MOST READ:இந்த ஆண்டிற்கு பின் மின்சார வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்படும்... அமலுக்கு வருகிறது அதிரடி திட்டம்

புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக் அறிமுகம்... ராயல் என்ஃபீல்டுக்கு அடுத்த நெருக்கடி

புதிய பெனெல்லி இம்பீரியல் 400 பைக்கிற்கு ரூ.1.69 லட்சம் (எக்ஸ்ஷோரூம், இந்தியா) விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கிற்கு மூன்று ஆண்டுகள் வரை வரம்பில்லா கிலோமீட்டருக்கான வாரண்டி வழங்கப்படுகின்றது. கூடுதலாக இரண்டு ஆண்டுகளுக்கு கட்டணமில்லா இலவச பராமரிப்பு சேவையையும் பெனெல்லி வழங்க உள்ளது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #பெனெல்லி #benelli
English summary
Benelli has launched all new retro styled Imperiale 400 motorcycles in India and costs Rs 1.69 lakh (ex-showroom, India).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X