2019ல் அறிமுகமான மாஸான 10 மோட்டார்சைக்கிள்கள் இதோ...

2019, இந்திய ஆட்டோமொபைல் துறையில் நிலவிவரும் மந்த நிலையை சிறிது குறைத்த வருடம் என்று தான் சொல்ல வேண்டும். இதன் காரணமாக இந்த வருடத்தில் பல புதிய வாகனங்கள் இந்திய சந்தையில் அறிமுகமாகின. அதிலும் குறிப்பாக புதிய மோட்டார்சைக்கிள்களின் அறிமுகம் 2019ஆம் ஆண்டில் அதிகமாகவே இருந்தது.

ஆட்டோமொபைல் துறையின் மந்த நிலையை சரியாக புரிந்து கொண்டு அனைத்து நிறுவனங்களும் பைக்குகளின் அறிமுகங்களில் சிறப்பாக செயல்பட்டதால் மோட்டார்சைக்கிள்களின் விற்பனை நிலவரம் கடந்த சில மாதங்களில் கணிசமாக உயர்ந்திருந்தது. அந்த வகையில் 2019ல் அறிமுகமாகி வாடிக்கையாளர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்த சில மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2019ல் அறிமுகமான மாஸான 10 மோட்டார்சைக்கிள்கள் இதோ...

ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200

வாடிக்கையாளர்கள் பெரிதும் எதிர்பாத்திருந்த ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 அட்வென்ஜெர் மாடல் பைக் இந்த வருடத்தின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹீரோ நிறுவனத்தின் இம்பல்ஸ் 150 பைக்கின் அட்வென்ஜர் வெர்சனாக அறிமுகமான இந்த பைக்கில் அனைத்தும் தொழிற்நுட்பங்களும் சரியாக பொருத்தப்பட்டுள்ளதாக பைக் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

2019ல் அறிமுகமான மாஸான 10 மோட்டார்சைக்கிள்கள் இதோ...

எடை குறைவாக மற்றும் மிகவும் சிறப்பான ட்யூன் செய்யப்பட்ட சஸ்பென்ஷன் அமைப்பை கொண்டுள்ளதால் இந்த பைக்கானது ஆப்-ரோட்டிற்கும் மிகவும் சவுகரியமாக இருக்கும். இதனால் ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை அன்றாட வேலைகள், அட்வென்ஜெர் என இரு விதமான செயல்பாட்டிற்கும் பயன்படுத்த முடியும். இதன் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.1 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2019ல் அறிமுகமான மாஸான 10 மோட்டார்சைக்கிள்கள் இதோ...

பஜாஜ் பல்சர் 125

பஜாஜ் நிறுவனத்தில் இருந்து 2019ல் மற்றுமொரு பல்சர் மாடலாக பல்சர் 125 பைக் அறிமுகமானது. சிறிய அளவில் எண்ட்ரீ லெவல் மாடலாக வெளியான இந்த பைக்கிற்கு இன்ஸ்சூரன்ஸ் தொகை, மாசு உமிழ்வு மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் அதிகமாக வழங்கப்பட்டிருந்தால் இதன் விலை சிறிது அதிகமாக நிர்ணயிக்கப்பட்டது.

2019ல் அறிமுகமான மாஸான 10 மோட்டார்சைக்கிள்கள் இதோ...

பல்சர் பைக்குகளுக்கே உண்டான டிசைனில் அறிமுகப்படுத்த இந்த பைக்கில் சிறிய அளவிலான 125சிசி என்ஜின் பொருத்தப்பட்டது. ரூ.66,618 விலையில் இந்திய எக்ஸ்ஷோரூமில் விற்பனை செய்யப்பட்டு வருகின்ற இந்த பைக் மற்ற பல்சர் பைக்குகள் போல மாதந்தோறும் குறிப்பிடத்தகுந்த வகையில் விற்பனை எண்ணிக்கையை பெற்றுவிடுகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகமான பல்சர் 125 மாடல் இதுவரை இந்திய சந்தையில் 53,000 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது.

2019ல் அறிமுகமான மாஸான 10 மோட்டார்சைக்கிள்கள் இதோ...

கேடிஎம் ஆர்சி 125 ஏபிஎஸ்

பஜாஜ் உடன் கூட்டணியில் உள்ள கேடிஎம் நிறுவனமும் பிரபலமான 125 மாடலுக்கு ஆர்சி வெர்சனை இந்த வருடத்தில் அறிமுகப்படுத்தியிருந்தது. கேடிஎம் 125 ட்யூக்கின் தரத்திற்கு இணையாக அறிமுகமான இந்த பைக் விற்பனையிலும் 125 ட்யூக்குடன் இணைந்து சிறப்பாகவே விற்பனையை பெற்றுள்ளது.

2019ல் அறிமுகமான மாஸான 10 மோட்டார்சைக்கிள்கள் இதோ...

கேடிஎம் ஆர்சி 125 பைக்கானது இந்த வருடத்தில் சராசரியாக மாதத்திற்கு 2500 யூனிட் என்ற எண்ணிக்கை பதிவு செய்துள்ளது. ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த கேடிஎம் நிறுவனத்தின் டயர் 3 மற்றும் டயர்4 டவுன்களில் ப்ரீமியம் பைக் தயாரிப்பாளர்களால் உருவானது. கேடிஎம் ஆர்சி 125 பைக் இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.1.47 லட்சத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2019ல் அறிமுகமான மாஸான 10 மோட்டார்சைக்கிள்கள் இதோ...

யமஹா எம்டி-15

யமஹா ஒய்இசட்எஃப்-ஆர்15 மோட்டார்சைக்கிளின் மறுஉருவாக்கமாக எம்டி-15 ஸ்ட்ரீட்-ஃபைட்டர் அறிமுகமானது. ஆர்15 பைக்கின் தயாரிப்பு அடிப்படையில் இந்த பைக் உருவாகி இருந்தாலும் தனக்கென கூர்மையான டிசைன் அமைப்பு, ரைடிங் ஸ்டான்ஸ் வசதி மற்றும் என்ஜினின் தரம் உள்ளிட்டவற்றை கொண்டிருந்தது.

2019ல் அறிமுகமான மாஸான 10 மோட்டார்சைக்கிள்கள் இதோ...

இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள டெல்டா பாக்ஸ் ரைடிங் டைனாமிக்ஸிற்கும் ஸ்போர்ட்டியான பயணங்களுக்கும் ஏற்றதாக உள்ளது. ஆர்15 பைக்கின் மறுஉருவாக்க மாடலாக இருந்தாலும் எம்டி-15 பைக்கின் விலை ஆர்15-ஐ விட ரூ.10,000 அளவில் குறைவாக உள்ளது. யமஹா நிறுவனம் இந்த வருடத்தில் இந்த பைக்கின் 25,000 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

2019ல் அறிமுகமான மாஸான 10 மோட்டார்சைக்கிள்கள் இதோ...

அடுத்த ஆண்டிற்கு 40,000 யூனிட்களை இலக்காக வைத்துள்ளது. மேலும் இந்நிறுவனம் எம்டி-15 பைக்கை பிஎஸ்6 தரத்திற்கு மாற்றும் பணியிலும் ஈடுப்பட்டு வருகிறது. எம்டி-15 பைக்கின் பிஎஸ்6 மாடல் 2020 பிப்ரவரியில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கின் இந்திய அறிமுகம் குறித்து விரிவாக தெரிந்துகொள்ள கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

2019ல் அறிமுகமான மாஸான 10 மோட்டார்சைக்கிள்கள் இதோ...

ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் 125& ஹீரோ பிளஷர்+ 110

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 2019ஆம் வருடத்தில் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 மற்றும் பிளஷர்+ மாடல் ஸ்கூட்டர்கள் மூலம் தன்னை அப்டேட் செய்து கொண்டது. இதில் மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர் டெஸ்டினி 125-ன் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

2019ல் அறிமுகமான மாஸான 10 மோட்டார்சைக்கிள்கள் இதோ...

ஹீரோ பிளஷர்+ ஸ்கூட்டர் பெரிய 110சிசி என்ஜின், புதிய டிசைன் அமைப்பு மற்றும் இளமையான வடிவமைப்பை பெற்றுள்ளது. மொத்தமாக இளம் பெண்களை கவரும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேஸ்ட்ரோ எட்ஜ் 125 ஸ்கூட்டர் சவுகரியமாக பயணம் மேற்கொள்ள நினைப்போரை மனதில் வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

2019ல் அறிமுகமான மாஸான 10 மோட்டார்சைக்கிள்கள் இதோ...

ஹோண்டா ஆக்டிவா 125 பிஎஸ்6

சுசுகி ஆக்ஸஸ் 125 போன்ற பிரபலமான ஸ்கூட்டர்கள் உள்ள பிரிவில் ஹோண்டா நிறுவனத்தில் இருந்து அறிமுகமான ஸ்கூட்டர் தான் ஆக்டிவா 125. இந்த ஸ்கூட்டர் கடந்த மாதத்தில் இந்திய சந்தையில் பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்ட முதல் ஸ்கூட்டராக அறிமுகமானது. அப்டேட்டால் ஸ்கூட்டரின் என்ஜின் ஃப்யூல்-இன்ஜெக்‌ஷனுக்கு அப்டேட் செய்யப்பட்டது மட்டுமில்லாமல் உட்புற பாகங்கள் குறைந்த உராய்விற்கு ஏற்ற விதத்தில் ஒழுங்கமைக்கப்பட்டன.

2019ல் அறிமுகமான மாஸான 10 மோட்டார்சைக்கிள்கள் இதோ...

ஆக்டிவா 125 ஸ்கூட்டரின் இந்த பிஎஸ்6 வெர்சன் அறிமுகத்தால் சந்தையில் 125சிசி ஸ்கூட்டர்களின் விற்பனையும் சிறிதளவு அதிகரித்தது. இந்த பிஎஸ்6 ஸ்கூட்டர் அதன் முந்தைய மாடலை விட 13 சதவீதம் அதிக எரிபொருள் திறன் கொண்டது. இதனால் இந்த பிஎஸ்6 பைக் மற்றும் எஸ்பி125 பிஎஸ்6 மாடல்கள் அவற்றின் அறிமுக நாளில் இருந்து சுமார் 60,000 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன.

2019ல் அறிமுகமான மாஸான 10 மோட்டார்சைக்கிள்கள் இதோ...

பெனெல்லி இம்பீரியல் 400

எண்ட்ரீ-லெவல் மாடர்ன்-கிளாசிக் பிரிவில் ராயல் எண்ட்பீல்டு பைக்குகளுக்கு போட்டியாக பெனெல்லி நிறுவனத்தில் இருந்து இம்பீரியல் 400 பைக் 2019ஆம் வருடத்தின் துவத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 2017ஆம் ஆண்டில் இருந்தே இந்தியாவில் அறிமுகமாக காத்து கொண்டிருந்த இந்த பைக் ஒரு வழியாக 2019ல் அறிமுகமானது.

2019ல் அறிமுகமான மாஸான 10 மோட்டார்சைக்கிள்கள் இதோ...

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பாகங்கள் மூலம் பெனெல்லி நிறுவனம் மிகவும் மலிவாக இந்த 400 மாடல் பைக்கை தயாரித்துள்ளது. இருப்பினும் இந்த பைக்கில் உள்ள ரெட்ரோ ஸ்டைலிங், எளிமையான என்ஜின் மற்றும் எளிதான ரைடிங் டைனாமிக்ஸ் போன்ற அம்சங்களால் வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. ரூ.1.69 லட்சத்தில் இருந்து இம்பீரியல் 400 பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2019ல் அறிமுகமான மாஸான 10 மோட்டார்சைக்கிள்கள் இதோ...

சுசுகி ஜிக்ஸெர் எஸ்எஃப்250

இந்திய சந்தையில் ஜிக்ஸெர்155 மாடலின் மூலம் கொடிக்கட்டி பறந்து வந்த சுசுகி நிறுவனம் ஜிக்ஸெர் மாடலின் வரவேற்பை குவார்ட்டர்-லிட்டர் பிரிவிலும் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டதே ஜிக்ஸெர் எஸ்எஃப்250. சக்தி வாய்ந்த என்ஜினை பெற்றிருந்த இந்த பைக் தனது பிரிவில் உள்ள மற்ற பைக்குகளுடன் போட்டியிடுவதற்காக கவர்ச்சிகரமான விலையை கொண்டிருந்தது.

2019ல் அறிமுகமான மாஸான 10 மோட்டார்சைக்கிள்கள் இதோ...

லிக்யூடு-கூலிங் என்ஜினை பெறுவதற்காக சுசுகி நிறுவனத்தின் ஆயில் கூலிங் சிஸ்ட்த்தில் இந்த பைக் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜிக்ஸெர் 250 மாடலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஜிக்ஸெர் எஸ்எஃப்250 பைக் இதுவரை இந்தியாவில் 4000 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு வரும் இந்த மாடலை ஜப்பான் மற்றும் லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் சுசுகி நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.

2019ல் அறிமுகமான மாஸான 10 மோட்டார்சைக்கிள்கள் இதோ...

ரிவோல்ட் ஆர்வி 400 எலக்ட்ரிக் பைக்

2019ஆம் வருடத்தில் முதன்முறையாக இந்திய சந்தையில் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அத்தகைய எலக்ட்ரிக் பைக்குகளில் ஒன்று தான் ரிவோல்ட் ஆர்வி 400. குர்கானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரிவோல்ட் நிறுவனத்தில் இருந்து அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஆர்வி 400 பைக்குடன் அதே நாளில் ஆர்வி 300 மாடலும் வெளியானது.

2019ல் அறிமுகமான மாஸான 10 மோட்டார்சைக்கிள்கள் இதோ...

இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்குகளான இவற்றை ரிவோல்ட் நிறுவனம் 125- 150சிசி பைக்குகளின் பிரிவில் நிலை நிறுத்தியுள்ளது. மாற்றத்தக்க பேட்டரியை கொண்ட இந்த ஆர்வி 400 எலக்ட்ரிக் பைக் சிங்கிள் சார்ஜில் 156 கிமீ வரை இயங்கக்கூடியது. இந்த பைக்கின் அதிகப்பட்ச வேகம் 85kmph ஆகும். ஆர்வி 400 பைக் பேஸ், ப்ரீமியம் என இரு வேரியண்ட்களை கொண்டுள்ளது.

2019ல் அறிமுகமான மாஸான 10 மோட்டார்சைக்கிள்கள் இதோ...

கேடிஎம் 790 ட்யூக்

கடந்த செப்டம்பர் மாதம் ட்யூக் 790 மாடலை கேடிஎம் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. இந்நாள் வரை இந்நிறுவனத்தின் தனித்துவமான மாடலாக விளங்கி வருகின்ற ட்யூக் 790 பைக் ரூ.8.64 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அறிமுகமான மாதத்திலேயே 40 யூனிட் ட்யூக் 790 பைக்குகளை விற்பனை செய்திருந்த கேடிஎம் நிறுவனம் இந்த டிசம்பர் மாதத்திற்கு சிபியூ முறையில் இந்தியாவில் 100 யூனிட்களை மட்டும் இறக்குமதி செய்துள்ளது.

2019ல் அறிமுகமான மாஸான 10 மோட்டார்சைக்கிள்கள் இதோ...

இந்த மாடலின் பிஎஸ்6 வெர்சனும் தயாரிக்கப்பட்டு வருகிறது. 799சிசி ட்வின் லிக்யூடு-கூல்டு என்ஜின் மற்றும் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸை இந்த பைக்கில் கேடிஎம் நிறுவனம் பொருத்தியுள்ளது. மேலும் இந்நிறுவனம் அடுத்த ஆண்டில் இந்த மாடலை விட திறன் மிகுந்த 1290 சூப்பர் ட்யூக் பைக்கை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

2019ம் ஆண்டு அறிமுகமான 10 மோட்டார்சைக்கிள்கள் பற்றிய தகவல்களை பார்த்தோம். இனி 2019ம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் குறித்த தகவல்களை பார்க்கலாம்.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

மாருதி சுசுகி எஸ்-பிரெஸ்ஸோ

இந்தியா சந்தையில் கார்களின் விற்பனையில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வரும் மாருதி சுசுகி நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகமான மாடல் தான் எஸ்-பிரெஸ்ஸோ. எண்ட்ரீ-லெவல் தயாரிப்பாக அறிமுகமான இந்த கார் மாருதியின் ஆல் டைம் பெஸ்ட் காரான ஆல்டோ ஹேட்ச்பேக்கிற்கு மேலே நிலைநிறுத்தப்பட்டது.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

கிட்டத்தட்ட எஸ்யூவி-ன் வடிவமைப்பில் வெளியான இந்த காரில் அதிகளவில் க்ரவுண்ட் கிளியரென்ஸை மாருதி நிறுவனம் வழங்கியிருந்தது. மேலும் இந்த காரில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 1.0 லிட்டர் பெட்ரோல் என்ஜினை இந்நிறுவனம் வழங்கியிருந்தது. எஸ்-பிரெஸ்ஸோ மாடல் தனது பிரிவில் உள்ள ரெனால்ட் க்விட் உடன் விற்பனையில் போட்டியிட்டு வருகிறது.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

மஹிந்திரா எக்ஸ்யூவி300

எக்ஸ்யூவி300 காரானது மஹிந்திரா&மஹிந்திரா நிறுவனத்தில் இருந்து சப்-4 மீட்டர் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் அறிமுகமான மாடலாகும். இந்த காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரு என்ஜின் தேர்வுகளையும் மஹிந்திரா நிறுவனம் வழங்கியுள்ளது. ஷார்ப் ஸ்டைலிங் பாகங்கள் மற்றும் அப்டேட்டான தொழிற்நுட்பங்களை கொண்டுள்ள இந்த எக்ஸ்யூவி300 காரானது இந்திய எக்ஸ்ஷோருமில் ரூ. 8.30 - 12.69 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

மேலும் மஹிந்திரா நிறுவனம் இந்த மாடலை பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாகவும் அப்டேட் செய்து வருகிறது. இதில் இந்த காரின் பிஎஸ்6 மாற்றப்பட்ட பெட்ரோல் வேரியண்ட் மட்டும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த புதிய பிஎஸ்6 காரில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து அறிய கீழேயுள்ள லிங்கை அழுத்தவும்.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

ஹூண்டாய் வென்யூ

இந்திய சந்தையில் தற்சமயம் மிகவும் சிறப்பாக விற்பனையாகி வரும் சப்-4 மீட்டர் காம்பெக்ட் எஸ்யூவிகளில் ஹூண்டாய் நிறுவனத்தின் வென்யூ மாடலும் ஒன்று. இந்நிறுவனத்தில் இருந்து பல சிறப்பம்சங்களுடன் அறிமுகமான முதல் காம்பெக்ட் எஸ்யூவி மாடலாகவும் வென்யூ விளங்குகிறது.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

இந்திய ட்ரைவிங் நிலைக்கு ஏற்றவாறு மூன்று சக்தி வாய்ந்த என்ஜின் தேர்வுகள் வென்யூ எஸ்யூவியில் வழங்கப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ரூ.6.5 லட்சத்தில் இருந்து ரூ.11.11 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வரும் இந்த கார் இந்தியன் கார் ஆப் தி இயர் 2020 விருதையும் பெற்றுள்ளது. இந்த விருது வழங்கப்பட்ட நிகழ்ச்சி குறித்து விரிவாக தெரிந்து கொள்ள கீழேயுள்ள லிங்கை பயன்படுத்தவும்.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

ரெனால்ட் ட்ரைபர்

சப்-4 மீட்டர் காம்பெக்ட் எம்பிவி பிரிவில் ரெனால்ட் நிறுவனத்தில் இருந்து அறிமுகமான மாடல் ட்ரைபர். பல தொழிற்நுட்ப தேர்வுகளில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டதால் வாடிக்கையாளர்கள் பலரும் எம்பிவி பிரிவு கார்களுக்கு மாற ஆரம்பித்தனர்.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

இதனால் இந்த கார் அறிமுகமான புதியதில் தனது பிரிவில் உள்ள டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மற்றும் மாருதி சுசுகி எர்டிகா மாடல்களை விற்பனையில் முந்தி இருந்தது. இதன் விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.4.95 லட்சத்தில் இருந்து ரூ.6.63 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் விலையும் இந்த காரின் விற்பனைக்கு முக்கிய காரணமாக உள்ளது.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ்

க்ராண்ட் ஐ10 மாடலின் அடுத்த தலைமுறை மாடலாக நியோஸ் என்கிற பெயரில் இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹேட்பேக்கிற்கே உண்டான மாடர்ன் மற்றும் ஸ்டைலிஷ் டிசைன் அமைப்பில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டது.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

இருப்பினும் இந்த நியோஸ் மாடல் எண்ட்ரீ-லெவல் மற்றும் ப்ரீமியம் ஹேட்ச்பேக்கிறகு மத்தியில் நிலை நிறுத்தப்பட்டது. 1.2 லிட்டர் கொள்ளவு கொண்ட பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளில் விற்பனையாகிவரும் இந்த காரின் விலை ரூ.5.00- ரூ.7.99 லட்சமாக உள்ளது.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

டொயோட்டா க்ளான்ஸா

டொயோட்டா- மாருதி சுசுகி நிறுவனங்களின் கூட்டணியினால் மாருதி பலேனோவின் மறு உருவாக்கமாக டொயோட்டா க்ளான்ஸா அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் பலேனோவிற்கு கிடைத்த வரவேற்பு கிட்டத்தட்ட கிளான்ஸா மாடலுக்கும் கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

ஹூண்டாய் எலைட் ஐ20 மாடலின் விற்பனையை முந்திய இந்த கார் பலேனோவின் மறு உருவாக்கம் என்பதால், பலேனோவின் என்ஜின் தேர்வை அப்படியே பெற்றிருந்தது. தற்சமயம் ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் சிறந்த முறையில் விற்பனையாகும் இரண்டாவது மாடலாக உள்ள டொயோட்டா க்ளான்ஸா மாடல் இந்தியாவில் ரூ.6.98- ரூ.8.90 லட்சத்தில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

கியா செல்டோஸ்

2019ல் இந்திய சந்தையில் கால் பதித்த இரு நிறுவனங்களில் ஒன்றான கியா மோட்டார்ஸின் முதல் இந்திய அறிமுக மாடல் செல்டோஸ் எஸ்யூவி ஆகும். கம்பீரமான தோற்றம், சக்தி வாய்ந்த என்ஜினை கொண்டுள்ளதால் கடந்த மாத எஸ்யூவி கார்களின் விற்பனையில் முதலிடத்தை பிடித்துள்ளது.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

10.25 இன்ச் அளவில் மிக பெரிய தொடுத்திரை இன்போடெயின் சிஸ்டம், 7 இன்ச் இன்ஸ்ட்ரூமெண்ட் கண்சோல் போன்றவற்றை கொண்ட இந்த காரில் பெட்ரோல், டீசல் மற்றும் டர்போ-பெட்ரோல் என மூன்று என்ஜின் தேர்வுகளை கியா நிறுவனம் வழங்கியுள்ளது. ரூ.9.69- ரூ.16.99 லட்சங்களில் இந்த காரின் விலை இந்தியா முழுவதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

டாடா ஹெரியர்

டாடா நிறுவனத்தின் புதிய இம்பேக்ட் 2.0 என்கிற டிசைன் தத்துவத்தின் அடிப்படையில் உருவான முதல் மாடலாக ஹெரியர் விளங்குகிறது. 2019ஆம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார் சிறப்பான டிசைன் மற்றும் தரத்தை கொண்டிருந்ததால் அறிமுகமான புதியதில் இதன் விற்பனையில் பெரியளவில் எந்த பிரச்சனையும் இல்லை.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

ஆனால் இந்த காரின் பிரிவில் தொடர்ச்சியாக புதிய கார்கள் அறிமுகமானதால் ஹெரியர் கார் தற்போது விற்பனையில் சரிவை கண்டு வருகிறது. லேண்ட் ரோவரின் டி8 ப்ளாட்பாரத்தில் தயாரிக்கப்பட்ட இந்த கார் ட்யூல் ஹெட்லேம்ப் ட்ரெண்ட்டை முதன்முதலாக இந்திய சந்தையில் கொண்டுவந்தது குறிப்பிடத்தக்கது. இதன் ஆரம்ப விலை ரூ.13 லட்சமாக உள்ளது.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

எம்ஜி ஹெக்டர்

கியா மோட்டார்ஸை போன்று இந்த வருடத்தில் இந்தியாவில் களமிறங்கிய மாற்றொரு நிறுவனம் எம்ஜி மோட்டார். இந்த நிறுவனத்தில் இருந்து இதுவரை ஒரே ஒரு மாடல் மட்டும் தான் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதுதான் ஹெக்டர்.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

நீண்டதாக, கிட்டத்தட்ட எம்பிவி கார்களின் டிசைனை கொண்ட ஹெக்டர் இந்திய சாலைகளுக்கு ஏற்ற வாகனமாக வாடிக்கையாளர்களால் பார்க்கப்படுகிறது. இவை மட்டுமில்லாமல் இண்டர்நெட் இணைப்புடன் இந்தியாவில் அறிமுகமான முதல் காராகவும் எம்ஜி ஹெக்டர் உள்ளது.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

ஹூண்டாய் கோனா இவி

இந்திய சந்தையில் அறிமுகமான முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி வாகனம், ஹூண்டாய் கோனா இவி ஆகும். சிங்கிள் சார்ஜில் சுமார் 452 கிமீ வரை இயங்கும் சக்தி வாய்ந்த எலக்ட்ரிக் மோட்டாரை இந்த கார் பெற்றுள்ளது. எஸ்யூவி பிரிவில் அறிமுகமான இந்த கார், எலக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை இந்தியாவில் முதன்முதலில் துவங்கி வைத்த பெருமையை பெறுகிறது.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

9 விதமான நிற தேர்வுகளில் இந்த எலக்ட்ரிக் கார் கிடைக்கிறது. இதன் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.23.72- ரூ.23.91 லட்சமாக உள்ளது. மேலும் கோனா இவி கார், இதுவரை எந்த எலக்ட்ரிக் வாகனமும் செய்யாத புதிய சாதனையாக இமயமலையின் அடிப்பகுதியில் உள்ள கேம்பஸ் வரை சவாலான பயணத்தை சமீபத்தில் மேற்கொண்டது. இதுகுறித்த தகவல்களை காண கீழேயுள்ள லிங்கை அழுத்தவும்.

2019ல் இந்தியாவில் அறிமுகமான ஸ்டைலான புதிய கார்கள் இதோ...

இந்த புதிய அறிமுக கார்கள் மட்டுமில்லாமல் பல கார்கள் ஃபேஸ்லிஃப்ட் மற்றும் ஸ்பெஷல் எடிசன்களை 2019ஆம் வருடத்தில் பெற்றுள்ளன. இவற்றுடன் சில லக்சரி மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களும் இந்த வருடத்தில் அறிமுகமாகியுள்ளன. அடுத்த ஆண்டில் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ நடைபெறவுள்ளதால், 2020ல் அறிமுகமாகும் புதிய கார்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும்.

Most Read Articles
மேலும்... #ஆட்டோ #auto news
English summary
Top 10 Mass Market Two-Wheeler Launches Of 2019
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X