காருக்கு போட்டியான விலையில் களமிறங்குகிறதா பிஎம்டபிள்யூ புதிய பைக்? இந்திய அறிமுக தேதி வெளியீடு!

பிஎம்டபிள்யூ நிறுவனம் காரை மிஞ்சும் விலையைக் கொண்ட புதிய மாடல் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

காருக்கு போட்டியான விலையில் களமிறங்குகிறதா பிஎம்டபிள்யூ புதிய பைக்? இந்திய அறிமுக தேதி வெளியீடு!

ஜெர்மனியை தலைமையமாகக் கொண்டு இயங்கும் பிஎம்டபிள்யூ நிறுவனம், சொகுசு கார் மட்டுமின்றி பைக் தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், பிஎம்டபிள்யூ மோட்டோராட் என்ற பெயரில், கடந்த 1923ம் ஆண்டிலிருந்து அந்த நிறுவனம் இப்பணியை மேற்கொண்டு வருகின்றது.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின், மோட்டார்சைக்கிள்கள் அதிநவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கியிருப்பதாலும், அதீத சக்தியை வெளிப்படுத்துவதாலும் இதற்கு உலகளாவிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளனர்.

காருக்கு போட்டியான விலையில் களமிறங்குகிறதா பிஎம்டபிள்யூ புதிய பைக்? இந்திய அறிமுக தேதி வெளியீடு!

அதேபோன்று, இந்திய இளைஞர்கள் மத்தியிலும் பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனத்தின் மோட்டார்சைக்கிள்களுக்கு நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது. இதன்காரணமாகவே கார்களுக்கு ஈடாக அந்த நிறுவனம், அதன் புதிய மாடல் பைக்குளை அவ்வப்போது இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றது.

காருக்கு போட்டியான விலையில் களமிறங்குகிறதா பிஎம்டபிள்யூ புதிய பைக்? இந்திய அறிமுக தேதி வெளியீடு!

பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம், இந்தியாவில் டிவிஎஸ் நிறுவனத்தின் கூட்டணியில்தான், செயல்திறன் வாய்ந்த பைக்குகளைத் தயாரித்து வருகின்றது. இந்த கூட்டணியின் அடிப்படையில்தான் தற்போது அதிக சக்தி வாய்ந்த பைக்குகள் உருவகாப்பட்டு வருகின்றன. அந்தவகையில் உருவாக்கப்பட்ட பைக்குகள் அண்மையில் வெளிவந்த பிஎம்டபிள்யூ ஜி310 ஆர் மற்றும் ஜி310ஜிஎஸ் ஆகிய பைக்குகள்.

காருக்கு போட்டியான விலையில் களமிறங்குகிறதா பிஎம்டபிள்யூ புதிய பைக்? இந்திய அறிமுக தேதி வெளியீடு!

இந்த நிலையில், பிஎம்டபிள்யூ நிறுவனம் எஸ்1000ஆர்ஆர் என்ற வேர்ல்ட் கிளாஸ் சூப்பர் மாடல் பைக்கை வருகின்ற ஜூன் மாதம் 25ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை ஆட்டோகார் இந்தியா ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

காருக்கு போட்டியான விலையில் களமிறங்குகிறதா பிஎம்டபிள்யூ புதிய பைக்? இந்திய அறிமுக தேதி வெளியீடு!

பிஎம்டபிள்யூ நிறுவனம், எஸ்1000ஆர்ஆர் பைக்கை கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற இஐசிஎம்ஏ 2018 வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்தது. இந்த மேம்படுத்தப்பட்ட மாடலானது குறைந்த எடை, அதிக சக்தி மற்றும் ஸ்போர்டி டைப் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டு மாடலாக களமிறக்கப்பட்டது. ஆகையால், இந்த மோட்டார்சைக்கிள் மீது உலகம் முழுவதும் எதிர்பார்ப்பு நிலவியது. அதேசமயம் இந்தி இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

காருக்கு போட்டியான விலையில் களமிறங்குகிறதா பிஎம்டபிள்யூ புதிய பைக்? இந்திய அறிமுக தேதி வெளியீடு!

இந்நிலையில், பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் புதிய எஸ்1000ஆர்ஆர் மாடல் மோட்டார்சைக்கிளை இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதனால், இந்த பைக்கின் வரவு அதன் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

காருக்கு போட்டியான விலையில் களமிறங்குகிறதா பிஎம்டபிள்யூ புதிய பைக்? இந்திய அறிமுக தேதி வெளியீடு!

பிஎம்டபிள்யூ மோட்டாராட் நிறுவனம், இந்த பைக்கில் 999சிசி பவர் கொண்ட இன்-லைன்-நான்கு எஞ்ஜினைப் பொருத்தியுள்ளது. இது 207 குதிரைகளின் ஓடும் திறனை 13,500 ஆர்பிஎம்மிலும், 113 என்எம் டார்க்கை, 11,000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும் திறனைப் பெற்றுள்ளது.

காருக்கு போட்டியான விலையில் களமிறங்குகிறதா பிஎம்டபிள்யூ புதிய பைக்? இந்திய அறிமுக தேதி வெளியீடு!

அதேசமயம், பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்கினை பிஎம்டபிள்யூ நிறுவனம் 2019ம் ஆண்டுக்கான பாதுகாப்பு விதிகளுக்கு ஏற்ப உருவாக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோன்று, இந்த மாடலை, பழைய மாடலைக்காட்டிலும் 8 குதிரைத்திறன் அதிகம் வெளிப்படுத்தும் வகையில் அந்த நிறுவனம் அப்கிரேட் செய்துள்ளது.

காருக்கு போட்டியான விலையில் களமிறங்குகிறதா பிஎம்டபிள்யூ புதிய பைக்? இந்திய அறிமுக தேதி வெளியீடு!

மேலும், இதில் மிகப்பெரிய மாற்றமாக பவர் ட்ரெயின் தொழில்நுட்பத்தை கூடுதலாக பிஎம்டபிள்யூ இணைத்துள்ளது. இது வேரியபிலான வால்வ் டைமிங் மற்றும் வால்வ் ஸ்டிரோக் உள்ளிட்டவையை சிறப்பானதாக மாற்றியமைக்கும். இதன்மூலம் வாகன ஓட்டிகள் சிறந்த ரைட் அனுபவத்தை அனுபவிக்க முடியும்.

காருக்கு போட்டியான விலையில் களமிறங்குகிறதா பிஎம்டபிள்யூ புதிய பைக்? இந்திய அறிமுக தேதி வெளியீடு!

இத்துடன், பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் பைக்கில் சிக்ஸ்-ஆக்ஸிஸ் எனப்படும் எலெக்ட்ரானிக் சிஸ்டமும் அப்கிரேட் செய்யப்பட உள்ளது. இது ஏபிஎஸ் மற்றும் டைனமிக் டிராக்ஸன் கன்ட்ரோலை சிறப்பாக இயக்க உதவும்.

இவற்றுடம் சிறப்பம்சாக, மழை, சாலை, டைனமிக் மற்றும் ரேஸ் ஆகிய நான்கு விதமான ரைட் மோட்கள் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மோட்களை 6.5 இன்ச் கொண்ட டிஜிட்டல் திரை மூலம் கட்டுபடுத்திக்கொள்ள முடியும். இதுதவிர, பைக்கின் பவருக்கு தடையாக இருக்கும் அதிக எடையை குறைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காருக்கு போட்டியான விலையில் களமிறங்குகிறதா பிஎம்டபிள்யூ புதிய பைக்? இந்திய அறிமுக தேதி வெளியீடு!

அதன்படி, 197 கிலோ எடையுள்ள அந்த பைக்கில் தற்போது 11 கிலோ வரைக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக, அதன் சேஸிஸ் மற்றும் எஞ்ஜின்களில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்த அப்கிரேட் செய்யப்பட்ட 2019 பிஎம்டபிள்யூ எஸ்1000ஆர்ஆர் மாடல் பைக் ரூ. 18.5 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

காருக்கு போட்டியான விலையில் களமிறங்குகிறதா பிஎம்டபிள்யூ புதிய பைக்? இந்திய அறிமுக தேதி வெளியீடு!

பிஎம்டபிள்யூ-வின் இந்த மாடல் மூன்று விதமான வேரியண்டில் சர்வேதச சந்தைகளில் விற்பனைக்கு கிடைக்கின்றது. அந்த வகையில், ஸ்டாண்டர்டு, எஸ்1000ஆர்ஆர் ஸ்போர்ட் மற்றும் எஸ்1000ஆர்ஆர் எம் ஆகிய வேரியண்ட்களில் கிடைக்கின்றது. இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கும் எஸ்1000ஆர்ஆர் மாடல்பைக் தற்போது விற்பனையில் இருக்கும் முந்தைய மாடலைக் காட்டிலும் சற்று அதிகமான விலையைப் பெற்று விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. ஆகையால், இது ரூ.25 லட்சம் வரை விலையுயர்வைப் பெற்று கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காருக்கு போட்டியான விலையில் களமிறங்குகிறதா பிஎம்டபிள்யூ புதிய பைக்? இந்திய அறிமுக தேதி வெளியீடு!

பிஎம்டபிள்யூ நிறுவனம் எஸ்1000ஆர்ஆர் என்ற வேர்ல்ட் கிளாஸ் சூப்பர் மாடல் பைக்கை வருகின்ற ஜூன் மாதம் 25ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எஸ்1000ஆர்ஆர் பைக்கை கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற இஐசிஎம்ஏ 2018 வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்தது. இந்த பைக் குறைந்த எடை, அதிக சக்தி மற்றும் ஸ்போர்டி லுக் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டு மாடலாக களமிறங்குகிறது.

Most Read Articles
English summary
2019 BMW S 1000 RR India-Launch Date Revealed — Quiet, Confident & Outrageous!. Read In Tamil.
Story first published: Saturday, May 18, 2019, 13:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X