பிஎஸ்6 என்ஜினை கொண்ட யமஹா எஃப்இசட், எஃப்இசட்-எஸ்ஸின் தகவல்கள் கசிந்தன...

யமஹா மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரபலமான மோட்டார்சைக்கிள் மாடல்களை பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்த ஆயத்தமாகி வருகிறது. 2019 நவம்பர் மாதத்தில் பிஎஸ்6 தயாரிப்பு வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியிடப்படும் எனவும் அந்நிறுவனம் முன்பு கூறியிருந்தது.

இதற்கிடையில் பிஎஸ்6 என்ஜின் கொண்ட எஃப்இசட் மற்றும் எஃப்இசட்-எஸ் மாடல்களின் என்ஜின் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிஎஸ்6 என்ஜினை கொண்ட யமஹா எஃப்இசட், எஃப்இசட்-எஸ்ஸின் தகவல்கள் கசிந்தன...

கசிந்துள்ள இந்த தகவலின்படி, இரு மோட்டார்சைக்கிள்களும் 149சிசி சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை கொண்டுள்ளன. பிஎஸ்6 தரத்திற்கு இவற்றின் என்ஜின்கள் மேம்படுத்தப்பட்டுள்ளதால், இவை தற்போதுள்ள பிஎஸ்4 என்ஜினை விட 1 பிஎச்பி ஆற்றல் கூடுதலாக 7,250 ஆர்பிஎம்மில் 12.1 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தவுள்ளது. ஆனால் இவற்றின் என்ஜினுடன் அதே ஐந்து வேக நிலைகளை கொடுக்கக்கூடிய கியர்பாக்ஸ் தான் பொருத்தப்பட்டுள்ளன.

பிஎஸ்6 என்ஜினை கொண்ட யமஹா எஃப்இசட், எஃப்இசட்-எஸ்ஸின் தகவல்கள் கசிந்தன...

மேலும் இந்த கசிந்த தகவலில் என்ஜினின் டார்க் திறன் பற்றிய விஷயங்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் தற்போதுள்ள மாடலில் இருக்கும் டார்க் திறனையே இந்த பிஎஸ்6 என்ஜினிற்கு தரம் உயர்த்தப்பட்ட பைக்குகளும் வெளிப்படுத்தும் என தெரிகிறது. இந்த பிஎஸ்6 என்ஜினில் வேறெந்த சிறப்பம்சங்களையும் எதிர்ப்பார்க்க முடியாது.

பிஎஸ்6 என்ஜினை கொண்ட யமஹா எஃப்இசட், எஃப்இசட்-எஸ்ஸின் தகவல்கள் கசிந்தன...

பைக்கின் பரிமாணமும் மாற்றப்பட்டதாக தெரியவில்லை. நீளம் 1990 மிமீ-லும், அகலம் 780 மிமீ-லும், உயரம் 1080 மிமீ-லும் அப்படியே உள்ளது. வீல்பேஸ்ஸும் அதே 1330 மிமீ-ல் தான் உள்ளது. புதிய எஃப்இசட்-ல் உள்ள மற்ற பாகங்களான எல்இடி ஹெட்லைட், நெகட்டிவ் இன்ஸ்ட்ருமென்ட் கன்சோல் மற்றும் இரண்டாக பிளவுப்பட்ட இருக்கை அமைப்பு போன்றவையும் பழைய மாடலில் உள்ளதை போல் அப்படியே உள்ளன.

பிஎஸ்6 என்ஜினை கொண்ட யமஹா எஃப்இசட், எஃப்இசட்-எஸ்ஸின் தகவல்கள் கசிந்தன...

ஆனால் யமஹா எஃப்இசட்-எஸ், க்ரோம் ஹெட்லைட் மற்றும் கூடுதலான உடற்பகுதி பாகங்களுடன் அறிமுகமாகவுள்ளது. மெக்கானிக்கல் பாகங்களில் முன்புறத்தில் உள்ள டெலிஸ்கோப் ஃபோர்க்ஸ், பின்புறத்தில் உள்ள மோனோ-ஷாக் போன்றவை எந்த அப்டேட்டையும் பெறவில்லை.

பிஎஸ்6 என்ஜினை கொண்ட யமஹா எஃப்இசட், எஃப்இசட்-எஸ்ஸின் தகவல்கள் கசிந்தன...

ப்ரேக்கிற்கு உதவியாக நிலையான டூயுல்-சேனல் ஏபிஎஸ் உள்ளது. பிஎஸ்6 யமஹா எஃப்இசட் மற்றும் எஃப்இசட்- ஆகிய பைக்குகளில் 17 அங்குல சக்கரங்களுடன் முன்சக்கரத்தில் 100/80 டயரும், பின்புறத்தில் 100/60 என்ற அளவுடைய டயரும் பொருத்தப்பட்டுள்ளன.

Most Read:யமஹா ஆர்15 வி3.0-ன் விலை உயர்வு... இப்போது எவ்வளவு தெரியுமா?

பிஎஸ்6 என்ஜினை கொண்ட யமஹா எஃப்இசட், எஃப்இசட்-எஸ்ஸின் தகவல்கள் கசிந்தன...

பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட இந்த எஃப்இசட் மற்றும் எஃப்இசட்-எஸ் மாடல்களில் என்ஜின் மட்டுமே அப்டேட் செய்யப்பட்டுள்ளது. மற்றப்படி வேறெந்த பாகங்களும் மாறவில்லை. இந்த வருட இறுதியில் வெளியாகலாம் என கூறப்படும் இந்த பிஎஸ்6 பைக்குகளின் விலை தற்போதுள்ள மாடல்களை விட சற்று அதிகமாகலாம் என கூறப்படுகிறது.

Most Read:மிக மிக குறைந்த முன்பணத்துடன் ட்யூக் 125-ஐ வாங்கலாம்... இவ்வளவு தானா...

பிஎஸ்6 என்ஜினை கொண்ட யமஹா எஃப்இசட், எஃப்இசட்-எஸ்ஸின் தகவல்கள் கசிந்தன...

இவ்வாறு பிஎஸ்6 தரத்திற்கு என்ஜின் மாற்றப்பட்டாலும் இப்பைக்குகளுக்கு இந்திய சந்தையில் போட்டியாக, பஜாஜ் பல்சர் 160என்எஸ், கேடிஎம் ட்யூக் 125, சுசுகி கிஸ்ஸ்ர் 155 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வி போன்ற மாடல்கள் தான் உள்ளன.

Most Read Articles

மேலும்... #யமஹா #yamaha
English summary
New BS6 Yamaha FZ and FZ-S Motorcycle Specs Leaked: India Launch Expected By End-2019
Story first published: Tuesday, October 15, 2019, 14:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X