உலக சாதனை படைக்க இருக்கும் மின்சார பைக் இதுதான்... எதில் தெரியுமா...? ஸ்பெஷல் தகவல்...!

பிரெஞ்ச் நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான வென்ட்சூரி, உலக சாதனைப் படைக்கும் வகையில் புதிய எலக்ட்ரிக் பைக் ஒன்றை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த முழுமையான தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலக சாதனை படைக்க இருக்கும் மின்சார பைக் இதுதான்... எதில் தெரியுமா...? ஸ்பெஷல் தகவல்...!

பிரெஞ்ச் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் வென்ட்சூரி ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம், வோக்ஸான் என்னும் பிராண்டில் இருசக்கர வாகனங்களைத் தயாரித்து வருகின்றது. இந்தநிறுவனம், லக்சூரி கார்கள் மற்றும் எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பதில் அந்நாட்டில் முதன்மை வகித்து வருகின்றது.

உலக சாதனை படைக்க இருக்கும் மின்சார பைக் இதுதான்... எதில் தெரியுமா...? ஸ்பெஷல் தகவல்...!

அதேபோன்று, இந்த நிறுவனம் கார்களுக்கான டிசைன் மற்றும் வடிவமைப்பு பணிகள் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொண்டு வருகின்றது. அந்த வகையில், இது ரேஸ் பந்தயத்தில் ஈடுபடும் வாகனங்களுக்கான கட்டுமானம், எஞ்ஜின் உள்ளிட்டவைகளை வடிவமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

உலக சாதனை படைக்க இருக்கும் மின்சார பைக் இதுதான்... எதில் தெரியுமா...? ஸ்பெஷல் தகவல்...!

இந்நிலையில், வோக்ஸான் நிறுவனம் அதன் புதிதாக வரவிருக்கும் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை, உலகின் அதிவேகமான மோட்டார்சைக்கிளாக உருவாக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், புதிய எலக்ட்ரிக் பைக்கை மணிக்கு 330 கிமீ வேகத்தில் செல்லும் வகையில் உருவாக்க இருக்கின்றது.

உலக சாதனை படைக்க இருக்கும் மின்சார பைக் இதுதான்... எதில் தெரியுமா...? ஸ்பெஷல் தகவல்...!

இத்துடன், மோட்டார்சைக்கிளை நவீன தொழில்நுட்பம் கொண்ட மாடலாகவும் அந்த நிறுவனம் உருவாக்க திட்டமிட்டிருக்கிறது. அதேசமயம், இந்த மோட்டார்சைக்கிளில் ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 180 கிமீ தூரம் வரைச் செல்லக்கூடிய 12.8kWh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட உள்ளது.

உலக சாதனை படைக்க இருக்கும் மின்சார பைக் இதுதான்... எதில் தெரியுமா...? ஸ்பெஷல் தகவல்...!

இதனை ஃபாஸ்ட் சார்ஜிங் முறையில் சார்ஜ் செய்தால் 30 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் 80 சதவீதம் சார்ஜை அடைந்துவிடும். இந்த பிரத்யேகமான எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளைத் தயாரிக்க மோட்டோஜிபி-யின் லெஜண்டான மேக்ஸ் பியாக்கி என்பவரை வோக்ஸான் நிறுவனம் நியமித்துள்ளது. இவர் இரு முறை உலக சூப்பர் சேம்பியன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

உலக சாதனை படைக்க இருக்கும் மின்சார பைக் இதுதான்... எதில் தெரியுமா...? ஸ்பெஷல் தகவல்...!

இவர்களின் இலக்கானது நடமுறைக்குக் கொண்டு வரப்பட்டால், இவரே உலகின் முதல் அதிவேக எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளைக் கண்டுபிடித்தவர் என்ற புகழாரத்தைச் சூடுவார். மேலும், இந்த சாதனையை பொலிவியன் சால்ட் ப்ளாட்ஸில் அந்த நிறுவனம் செய்ய இருக்கின்றது.

உலக சாதனை படைக்க இருக்கும் மின்சார பைக் இதுதான்... எதில் தெரியுமா...? ஸ்பெஷல் தகவல்...!

உலகில் இயங்கி வரும் அனைத்து மின் வாகன தயாரிப்பு நிறுவனங்களும், தங்களின் தயாரிப்புகளை அதிக கிமீ செல்லக் கூடியதாக இருக்க வேண்டும் என்ற நோக்கில் பணியை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், வோக்ஸான் நிறுவனம் வித்தியாசமாக, அதன் தயாரிப்பை அதிக வேகமாக செல்லும் வகையில், தயாரிக்கும் பணியை மேற்கொண்டு வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலக சாதனை படைக்க இருக்கும் மின்சார பைக் இதுதான்... எதில் தெரியுமா...? ஸ்பெஷல் தகவல்...!

வோக்ஸான் நிறுவனத்தின் இந்த பைக்கிற்கு வோக்ஸான் வாட்மேன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பைக்கிற்கான டிசைனிங் பணி இத்தாலியில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த மோட்டார்சைக்கிள் பிரான்ஸில்தான் தயாராக இருக்கின்றது.

உலக சாதனை படைக்க இருக்கும் மின்சார பைக் இதுதான்... எதில் தெரியுமா...? ஸ்பெஷல் தகவல்...!

மேலும், இந்த நிறுவனம் தற்போது எடுத்திருக்கும் சபதத்தை நிறைவேற்றுவதற்காக, இந்த புதிய எலக்ட்ரிக் பைக்கில், 200 பிஎச்பி மற்றும் 200 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் வகையிலான மின் மோட்டாரைப் பொருத்த உள்ளது. இது, வெறும் 3.4 செகண்டில் 0த்தில் இருந்து 100 கிமீ வேகத்தையும், 5.9 செகண்டில் 0-160 கிமீ வேகத்தையும், பைக்கைத் தொட வைப்பதற்கு உதவும்.

Note: Images are representational purpose only.

Most Read Articles
English summary
New Electric Bike To Set World Record. Read In Tamil.
Story first published: Saturday, May 18, 2019, 15:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X