புதிய ஸ்டைலில் வருகிறது ராயல் என்பீல்டு கிளாசிக்: ஸ்பை படங்கள் கசிந்தன!

ராயல் என்பீல்டு நிறுவனத்தன் பிரபல மாடலான கிளாசிக் பைக்குகள் புதிய ஸ்டைல் மற்றும் சேஸிஸ் அமைப்புடன் வரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

புதிய ஸ்டைலில் வருகிறது ராயல் என்பீல்டு கிளாசிக்: ஸ்பை படங்கள் கசிந்தன!

ராயல் என்பீல்டு நிறுவனம், அதன் தயாரிப்புகள் அனைத்தையும் அப்கிரேட் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. அந்தவகையில், புதிதாக அப்கிரேட் செய்யப்பட்ட கிளாசிக் 350 மற்றும் 500 மாடல் மோட்டார்சைக்கிள்களை, அந்த நிறுவனம் சென்னையில் வைத்து சோதனையோட்டம் செய்தது. இதுகுறித்த புகைப்படங்களை மோட்டாராய்ட்ஸ் இணையதளம் வெளியிட்டுள்ளது.

புதிய ஸ்டைலில் வருகிறது ராயல் என்பீல்டு கிளாசிக்: ஸ்பை படங்கள் கசிந்தன!

கிளாசிக் 350 மாடல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடலாக இருந்து வருகிறது. இது, ஒவ்வொரு மாதமும் 40 ஆயிரம் யூனிட்களுக்கும் மேலாக விற்பனையைக் குவித்து வருகின்றது. அவ்வாறு, இந்த நிறுவனத்தின் ஒட்டுமொத்த விற்பனையில் பாதிக்கு பாதி கிளாசிக் மாடல் மோட்டார்சைக்கிள்தான் விற்பனையைக் குவித்து வருகின்றன. ஆகையால், இவை அந்த நிறுவனத்தின் மிக முக்கியமான மாடல்களாகப் பார்க்கப்படுகின்றன.

புதிய ஸ்டைலில் வருகிறது ராயல் என்பீல்டு கிளாசிக்: ஸ்பை படங்கள் கசிந்தன!

ஆகையால், ராயல் என்பீல்டு நிறுவனம், அப்கேரட் செய்வதில் கிளாசிக் மாடல் மோட்டார்சைக்கிள்களுக்கு முக்கியத்துவம் செலுத்தி வருகிறது. அதன்படி, கிளாசிக் மாடல்களை சிறந்த மோட்டார்சைக்கிள்களாக, வாடிக்கையாளர்கள் வழங்கும் வகையில் அப்கிரேட் செய்து வருகிறது.

புதிய ஸ்டைலில் வருகிறது ராயல் என்பீல்டு கிளாசிக்: ஸ்பை படங்கள் கசிந்தன!

அந்தவகையில், புதிய கிளாசிக் மோட்டார்சைக்கிள்களில், பிஎஸ்6 எஞ்ஜின் மட்டுமின்றி, புதிய சேஸிஸையும் வழங்க இருக்கிறது. அவ்வாறு, புதிய மாற்றங்களைப் பெற்ற கிளாசிக் மோட்டார்சைக்கிள்தான் தற்போது மீண்டும் கேமிராவின் கண்களில் சிக்கியுள்ளது.

புதிய ஸ்டைலில் வருகிறது ராயல் என்பீல்டு கிளாசிக்: ஸ்பை படங்கள் கசிந்தன!

ஆனால், இம்முறை கிளாசிக் மோட்டார்சைக்கிளில், அதற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட அக்ஸசெரீஸ்களுடன் காட்சிக்குள்ளாகியுள்ளது. அவ்வாறு, காட்சிக்குள்ளாகிய மோட்டார்சைக்கிளில் சேடில் பேக்ஸ், கிராஷ் குவார்ட், விண்ட் டெஃப்லெக்டர்ஸ் பில்லியன் பேக்ரெஸ்ட் உள்ளிட்டவை பொருத்தப்பட்டிருந்தன.

புதிய ஸ்டைலில் வருகிறது ராயல் என்பீல்டு கிளாசிக்: ஸ்பை படங்கள் கசிந்தன!

அதேபோன்று, அந்த மோட்டார்சைக்கிளை இயக்கி வந்தவரும் ராயல்என்பீல்டு நிறுவனம் புதிதாக அறிமுகம் செய்துள்ள ரைடர்களுக்கான அக்ஸசெரீஸ்களை அணிந்திருந்தார். அவ்வாறு, பூட்ஸ், ரைடிங் பேன்ட்ஸ், ரைடிங் ஜாக்கெட், க்ளவுஸ் மற்றும் ஹெல்மெட் உள்ளிட்டவற்றை அவர் அணிந்திருந்தார்.

புதிய ஸ்டைலில் வருகிறது ராயல் என்பீல்டு கிளாசிக்: ஸ்பை படங்கள் கசிந்தன!

இந்த 2020ம் ஆண்டிற்கான ராயல் என்பீல்டு கிளாசிக் பார்ப்பதற்கு சற்று ஸ்டைலான தோற்றத்தில் இருக்கின்றது. குறுகலான பின்பக்க பென்டர், புதிய பின்பக்க விளக்கு, பெரிய அளவிலான பெட்ரோல் டேங்க், புதிய சைலென்ஸர், புதிய ஏர் பில்டர் பாக்ஸ் உள்ளிட்டவைற்றை அது பெற்றிருக்கின்றது. இதேபோன்று, பின்பக்க இருக்கையும் சற்று பெரிதாக வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்டைலில் வருகிறது ராயல் என்பீல்டு கிளாசிக்: ஸ்பை படங்கள் கசிந்தன!

இத்துடன், செயின் மற்றும் பிராக்கெட் ஆகியவை மோட்டார்சைக்கிளின் இடது பக்கத்தில் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், டிஸ்க் பிரேக் வலது பக்கத்தில் வழங்கப்பட்டுள்ளது. இது தற்போது மோட்டார்சைக்கிளின் வடிவமைப்பிற்கு எதிர்மறையாக இருக்கின்றது. இவற்றுடன் புதிய மாற்றமாக கிக் ஸ்டார்ட் கொடுக்கபவில்லை. ஆகையால், புதிய மாடல் கிளாசிக்கை செல்ஃப் ஸ்டார்ட் பயன்படுத்தி மட்டுமே ஆன் செய்ய இயலும்.

புதிய ஸ்டைலில் வருகிறது ராயல் என்பீல்டு கிளாசிக்: ஸ்பை படங்கள் கசிந்தன!

புதிதகா வழங்கப்பட்டிருக்கும் சேஸிஸ் அமைப்பு மற்றும் ஸ்டைல் உள்ளிட்டவை, ஏரோடைணமிக்ஸிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகையால், இந்த புதிய மாடல் கிளாசிக் மோட்டார்சைக்கள்கள் காற்றை கிழித்துக்கொண்டு செல்வதுடன், வைப்ரேஷனை குறைத்து வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஸ்டைலில் வருகிறது ராயல் என்பீல்டு கிளாசிக்: ஸ்பை படங்கள் கசிந்தன!

ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கிளாசிக் 350 ஏபிஎஸ் எக்ஸ்-ஷோரூமில் ரூ.1.53 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகின்றது. ஆனால், இந்த புதிய பிஎஸ்6 வெர்ஷன் எஞ்ஜின் கிளாசிக் மாடல், இதைக்காட்டிலும் அதிகமான விலையைக் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
New Gen Royal Enfield Classic Spied With Official Accessories. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X