பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய ஹோண்டா ஆக்டிவா 125 அறிமுகம்: முழு விபரம்!

பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய ஹோண்டா ஆக்டிவா 125 அறிமுகம்: முழு விபரம்!

அடுத்த ஆண்டு ஏப்ரலில் வர இருக்கும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சின்களுடன் வாகனங்களை அறிமுகம் செய்வதில் வாகன நிறுவனங்கள் பரபரப்பாக இயங்கி வருகின்றன. ஒரு சில நிறுவனங்கள் பிஎஸ்-6 எஞ்சின் கொண்ட வாகனங்களை களமிறக்க துவங்கிவிட்டன.

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய ஹோண்டா ஆக்டிவா 125 அறிமுகம்: முழு விபரம்!

அந்த வகையில், ஹோண்டா இருசக்கர வாகன நிறுவனம் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான முதல் மாடலாக ஆக்டிவா 125 மாடலை இன்று அறிமுகம் செய்துள்ளது. தோற்றத்தில் தற்போதைய மாடலை ஒத்திருந்தாலும், தொழில்நுட்ப ரீதியில் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் வந்துள்ளது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய ஹோண்டா ஆக்டிவா 125 அறிமுகம்: முழு விபரம்!

ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் ஹோண்டா ஈக்கோ தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த பிஎஸ்-6 எஞ்சினுக்கு 26 புதிய காப்புரிமைகளையும் பெற்றிருக்கிறது. இந்த புதிய மாடலில் சாதாரண ஸ்டார்ட்டர் மோட்டாருக்கு பதிலாக ஏசிஜி ஜெனரேட்டர் மூலமாக ஸ்டார்ட் செய்யும் வசதியை ஹோண்டா கொடுத்துள்ளது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய ஹோண்டா ஆக்டிவா 125 அறிமுகம்: முழு விபரம்!

இதனால், சப்தம் இல்லாமல் எஞ்சின் ஸ்டார்ட் செய்யும் சிறப்பம்சத்தையும், ஸ்டார்ட்- ஸ்டாப் தொழில்நுட்பத்தையும் இந்த ஸ்கூட்டர் பெற்றுள்ளது. மேலும், எஞ்சினுக்குள் குறைவான உராய்வை தரும் வகையில் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய ஹோண்டா ஆக்டிவா 125 அறிமுகம்: முழு விபரம்!

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் இருக்கும் எஞ்சின் அதிகபட்சமாக 8.4 பிஎச்பி பவரையும், 10.54 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். சிவிடி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. மாசு உமிழ்வு குறைந்திருப்பதுடன், அதிக எரிபொருள் சிக்கனத்தையும் வழங்கும்.

இந்த ஸ்கூட்டரில் புதிய டிஜிட்டல்- அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது. நிகழ்நேர எரிபொருள் சிக்கனம், இருக்கும் எரிபொருளில் எவ்வளவு தூரம் செல்லலாம் போன்ற தகவல்களை பெற முடியும்.

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய ஹோண்டா ஆக்டிவா 125 அறிமுகம்: முழு விபரம்!

புதிய மட்கார்டு அமைப்பு, நேர்த்தியான பாடி லைன்கள், எல்இடி விளக்குகள், ட்யூப்லெஸ் டயர்கள் போன்றவை இதன் இதர முக்கிய சிறப்பம்சங்களாக இருக்கின்றன. முழுமையான உலோக பாடி, காம்பி பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் 3 ஸ்டெப் அட்ஜெஸ்ட் வசதியுடன் கூடிய சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டு இருக்கிறது.

பிஎஸ்-6 எஞ்சினுடன் புதிய ஹோண்டா ஆக்டிவா 125 அறிமுகம்: முழு விபரம்!

புதிய ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் கருப்பு, சிவப்பு, வெள்ளை, நீலம், சாம்பல் மற்றும் பழுப்பு ஆகிய வண்ணங்களில் கிடைக்கும். பிஎஸ்-6 எஞ்சின் மற்றும் கூடுதல் தொழில்நுட்ப சிறப்புகளுடன் வரும் ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் வரும் செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதனைத்தொடர்ந்து, டெலிவிரியும் துவங்கப்படும். தற்போதைய மாடலைவிட விலை 10 முதல் 15 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று ஹோண்டா தெரிவித்துள்ளது.

Most Read Articles
English summary
Honda Motorcycle & Scooter company has unveiled its first BS VI-compliant two-wheeler Activa 125 in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X