கூடுதலான நீளம் மற்றும் உயரத்தில் ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்6 பைக்...

பிஎஸ்6 என்கிற மாசு உமிழ்வு அற்ற வாகனங்கள் இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகின்றன. மார்கெட்டில் முன்னணி நிறுவனங்கள் அனைத்து தங்களது வாகனங்களை பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தி வருகின்றன.

கூடுதலான நீளம் மற்றும் உயரத்தில் ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்6 பைக்...

அந்த வகையில் ஹோண்டா நிறுவனம் தனது தயாரிப்பு வாகனமாக சிபி ஷைன் 125-ஐ பிஎஸ்6-க்கு அப்டேட் செய்துள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இந்த பைக்கின் என்ஜின் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனை இந்த செய்தியில் பார்ப்போம்.

கூடுதலான நீளம் மற்றும் உயரத்தில் ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்6 பைக்...

124 சிசி ஹோண்டா சிபி ஷைன் தற்சமயம் 7.58 கிலோவாட்ஸ் (10.31 பிஎஸ்) பவரை வெளிப்படுத்தி வருகிறது. இப்பைக் தற்போது பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்பட்டுள்ளதால் இனி 7500 ஆர்பிஎம்மில் 8 கிலோவாட்ஸ் (10.88 பிஎஸ்) பவரை வெளிப்படுத்தும்.

கூடுதலான நீளம் மற்றும் உயரத்தில் ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்6 பைக்...

இவ்வாறு என்ஜினில் அப்டேட் செய்யப்பட்டுள்ள சிபி ஷைன் 125-ன் பரிமாண தோற்றத்திலும் மாற்றங்கள் நடைபெற்றுள்ளதை வெளியாகியுள்ள இந்த தகவலின்படி அறிய முடிகிறது. இப்பைக்கின் வீல்பேஸ் 19 மிமீ அதிகரிக்கப்பட்டு 1,285 மிமீ-க்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. நீளம் 8 மிமீ அதிகரித்து 2,020 மிமீ ஆகவும், அகலம் 23 மிமீ அதிகரித்து 785 மிமீ ஆகவும், உயரம் 13 மிமீ உயர்ந்து 1,103 மிமீ ஆகவும் உள்ளது.

கூடுதலான நீளம் மற்றும் உயரத்தில் ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்6 பைக்...

சிபி ஷைனின் என்ஜின் நான்கு வேக நிலைகளை வழங்கக்கூடிய கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. மொத்த பைக்கின் எடை 123 கிலோகிராமாக தற்போது உள்ளது. பிஎஸ்6 தரத்திற்கு இப்பைக் மாற்றப்பட்ட பின்னர் இதில் சிறிய அளவிலான அதிகரிப்பு இருக்கும் என்று தெரிகிறது.

கூடுதலான நீளம் மற்றும் உயரத்தில் ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்6 பைக்...

ஹோண்டா நிறுவனம் சிபி ஷைனை, செல்ஃப் டிரம் அலாய், செல்ஃப் டிரம் சிபிஎஸ், டிரம் சிபிஎஸ் லிமிட்டேட் எடிசன், செல்ஃப் டிஸ்க் அலாய், செல்ஃப் டிஸ்க் சிபிஎஸ், டிஸ்க் சிபிஎஸ் லிமிட்டேட் எடிசன் போன்ற வேரியண்ட்களில் வழங்கி வருகிறது. மேலும் தனது பிரபலமான மாடல் பைக்குகளுக்கு தீபாவளி சலுகையையும் ஹோண்டா அறிவித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.

டூ வீலர்களுக்கு தெறிக்கவிடும் சிறப்பு சலுகைகளை அறிவித்த ஹோண்டா... திணறி நிற்கும் போட்டி நிறுவனங்கள்!

கூடுதலான நீளம் மற்றும் உயரத்தில் ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்6 பைக்...

இந்த மூன்று வேரியண்ட்டை தவிர்த்து உள்ள ப்ரீமியம் ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி மாடல் இந்த பிஎஸ்6 என்ஜின் மாற்றத்தால் சிறிது அதிகளவிலான ஆற்றலை வெளியிடவுள்ளது. தற்சமயம் கொண்டுள்ள 4 வேக நிலைகளுக்கான கியர்பாக்ஸிற்கு பதிலாக 5 வேக நிலைகளுக்கான கியர்பாக்ஸை இந்த வெர்சன் பெறுகிறது. இதில் உள்ள பாகங்கள் தான் அப்படியே பிஎஸ்6-க்கு மாற்றப்பட்டுள்ள சிபி ஷைன் 125 மாடலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சிபி ஷைன் எஸ்பி-யின் பரிமாண தோற்றத்தில் கூடுதல் மாற்றங்கள் இருக்கும் என்றே தெரிகிறது.

கூடுதலான நீளம் மற்றும் உயரத்தில் ஹோண்டா சிபி ஷைன் 125 பிஎஸ்6 பைக்...

ஹோண்டா நிறுவனம் சமீபத்தில் தான் பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட ஆக்டிவா 125 மாடல் பைக்கை அறிமுக செய்திருந்தது. இந்த அப்டேட் செய்யப்பட்ட ஆக்டிவா முந்தைய மாடலை விட 7,000 ரூபாய் அதிகமாக இந்திய எக்‌ஷோரூமில் ரூ.67,490க்கு விற்கப்பட்டு வருகிறது. இதைவிட சிபி ஷைன் 125 பிஎஸ்6 மாடலின் விலை சிறிது அதிகமாகவே நிர்ணயிக்கப்படும்.

Most Read Articles

English summary
Honda CB Shine 125 BS-VI power output revealed
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X