புதிய ஹோண்டா சிபிஆர்1000 ஆர்ஆர்-ஆர் சூப்பர் பைக் அறிமுகம்!

இத்தாலியில் துவங்கி இருக்கும் ஐக்மா மோட்டார்சைக்கிள் கண்காட்சிக்கு சற்றுமுன்னதாக புதிய ஹோண்டா சிபிஆர்1000 ஆர்ஆர்-ஆர் சூப்பர் பைக் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பைக்கின் சிறப்பம்சங்கள் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய ஹோண்டா சிபிஆர்1000 ஆர்ஆர் சூப்பர் பைக் அறிமுகம்!

சூப்பர் பைக் மார்க்கெட்டில் உலக அளவில் பிரசித்தி பெற்ற மாடலாக ஹோண்டா சிபிஆர் 1000 (ஃபயர்பிளேடு) பைக் வலம் வருகிறது. மோட்டோஜீபி முதல்தர பந்தய பைக் பந்தயத்தில் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுத் தந்த ஹோண்டாவின் ஆர்சி213வி பைக்கின் அடிப்படையில் சாதாரண சாலையில் பயன்படுத்தத்தக்க மாடலாக இது உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா சிபிஆர்1000 ஆர்ஆர் சூப்பர் பைக் அறிமுகம்!

இந்த பைக் 2020 ஹோண்டா சிபிஆர்1000 ஆர்ஆர்-ஆர் பைக் ஃபயர்பிளேடு மற்றும் ஃபயர்பிளேடு எஸ்பி ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. மோட்டோஜீபி முதல் தர பைக் பந்தயத்தில் பயன்படுத்தப்படும் ஹோண்டா நிறுவனத்தின் ஆர்சி2013வி பைக்கின் அடிப்படையில் சாதாரண சாலையில் பயன்படுத்துவதற்கான இந்த மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

புதிய ஹோண்டா சிபிஆர்1000 ஆர்ஆர் சூப்பர் பைக் அறிமுகம்!

ஹோண்டா ஆர்சி213வி பைக்கின் சேஸீ கட்டமைப்பு, ஏரோடைனமிக்ஸ் தத்துவத்தின் அடிப்படையில் இந்த பைக் முற்றிலும் புதிய மாடலாக மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. வடிவமைப்பு மட்டுமின்றி, எஞ்சின் பாகங்கள் மற்றும் தொழில்நுட்பமும் பந்தய கள பைக்கின் அடிப்படையிலான சிறப்பு அம்சங்களை இந்த சூப்பர் பைக் பெற்றுள்ளது. எனவே, இந்த பைக்கின் வருகை உலக அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

புதிய ஹோண்டா சிபிஆர்1000 ஆர்ஆர் சூப்பர் பைக் அறிமுகம்!

புதிய ஃபேரிங் பேனல்கள் அமைப்பு, கச்சிதமான வடிவமைப்பில் எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய வடிவமைப்புடன் எஞ்சினுக்கு காற்று உட்செலுத்தும் அமைப்பு உள்ளிட்டவற்றுடன் பின்புற வடிவமைப்பிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால், 1000 சிசி சூப்பர் பைக் மார்க்கெட்டில் மிக கச்சிதமான சூப்பர் பைக் மாடலாக தோற்றமளிக்கிறது.

புதிய ஹோண்டா சிபிஆர்1000 ஆர்ஆர் சூப்பர் பைக் அறிமுகம்!

புதிய ஹோண்டா சிபிஆர்1000 ஆர்ஆர் பைக்கில் நான்கு சிலிண்டர்கள் கொண்ட 999.9 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 214 எச்பி பவரையும், 113 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த பைக்கில் அக்ரபோவிக் புகைப்போக்கி அமைப்பு, நீளமான சைலென்சர் குழாய் ஆகியவற்றுடன் தனித்துவமான புகைப்போக்கி சப்தத்தை வெளிப்படுத்தும்.

புதிய ஹோண்டா சிபிஆர்1000 ஆர்ஆர் சூப்பர் பைக் அறிமுகம்!

ஹோண்டாவின் மோட்டோஜீபி பந்தய பைக்கில் பயன்படுத்தப்படும் எஞ்சினின் அதே போர் அளவு மற்றும் ஸ்ட்ரோக் எண்ணிக்கையுடன் இந்த பைக் வந்துள்ளது மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம். மேலும், எஞ்சினின் உட்புறத்தில் உராய்வை வெகுவாக குறைக்கும் விதத்தில், டைட்டானியம் மற்றும் உயர்தர பாகங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதில், 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

புதிய ஹோண்டா சிபிஆர்1000 ஆர்ஆர் சூப்பர் பைக் அறிமுகம்!

புதிய ஹோண்டா சிபிஆர் 1000ஆர்ஆர் பைக்கில் புதிய அலுமினியம் சேஸீ பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனால், மிகச் சிறப்பான கையாளுமையையும், கட்டுறுதியையும் இந்த பைக் பெற்றிருக்கிறது. இந்த பைக்கின் வீல் பேஸ் 1,455 மிமீ ஆக உள்ளதால், வளைவுகளில் மிக நம்பிக்கையான ஓட்டுதல் உணர்வை தரும்.

புதிய ஹோண்டா சிபிஆர்1000 ஆர்ஆர் சூப்பர் பைக் அறிமுகம்!

புதிய ஹோண்டா சிபிஆர்1000 ஆர்ஆர் பைக்கில் 5.0 அங்குல டிஎஃப்டி திரையுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த திரை மூலமாக டிரைவிங் மோடுகள் மற்றும் இதர கட்டுப்பாட்டு வசதிகளையும், வண்டியின் இயக்கம் குறித்த பல்வேறு தகவல்களையும் பெற முடியும். லான்ச் கன்ட்ரோல், ஏபிஎஸ், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டத்தை இந்த திரை மூலமாக கட்டுப்படுத்தலாம்.

புதிய ஹோண்டா சிபிஆர்1000 ஆர்ஆர் சூப்பர் பைக் அறிமுகம்!

புதிய ஹோண்டா சிபிஆர் 1000 ஆர்ஆர் பைக்கில் முன்புறத்தில் ஷோவா பிபிஎஃப் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் ஷோவா பிஎஃப்ஆர்சி- லைட் மோனோஷாக் அப்சார்பரும் உள்ளன. ஃபயர்பிளேடு எஸ்பி என்ற விலை உயர்ந்த வேரியண்ட்டில் ஓலின்ஸ் எலெக்ட்ரானிக் சஸ்பென்ஷனும், பின்புரத்தில் மோனோஷாக் அப்சார்பரும் உள்ளன.

புதிய ஹோண்டா சிபிஆர்1000 ஆர்ஆர் சூப்பர் பைக் அறிமுகம்!

புதிய ஹோண்டா சிபிஆர்1000 ஆர்ஆர் மற்றும் சிபிஆர்1000 ஆர்ஆர்-ஆர் ஆகிய இரண்டு மாடல்களும் மிக விரைவில் வெளிநாடுகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. அடுத்த ஆண்டு இந்தியாவில் இந்த புதிய ஹோண்டா சூப்பர் பைக்குகள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

Most Read Articles
English summary
Japanese bike maker, Honda has unveiled, 2020 Honda CBR1000RR-R Fireblade and CBR1000RR-R Fireblade SP models in Italy at EICMA 2019.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X