ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக வரும் புதிய ஹோண்டா மோட்டார்சைக்கிள்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் ரெட்ரோ க்ளாசிக் ரக மோட்டார்சைக்கிள்களுக்கு இணையான ரகத்தில் புதிய பைக் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது ஹோண்டா நிறுவனம். கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக வரும் புதிய ஹோண்டா மோட்டார்சைக்கிள்!

அடுத்த 18 மாதங்களில் இந்த புதிய பைக் மாடலை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் ஹோண்டா திட்டமிட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் புதிதாக 100 டீலர்களையும், 22 பிக் விங் என்ற பிரிமீயம் ஷோரூம்களையும் திறப்பதற்கும் முடிவு செய்துள்ளது.

ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக வரும் புதிய ஹோண்டா மோட்டார்சைக்கிள்!

இந்த புதிய வர்த்தக நடவடிக்கைகளை கண்காணித்து துரிதமாக செயல்படுத்துவதற்காக 15 பேர் கொண்ட சிறப்பு அதிகாரிகள் குழுவையும் ஹோண்டா நியமித்துள்ளது. இந்த குழுவினர் குறித்த காலத்தில் இந்த திட்டங்களை நிறைவேற்றும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக வரும் புதிய ஹோண்டா மோட்டார்சைக்கிள்!

மேலும், ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 மோட்டார்சைக்கிளுக்கு போட்டியாக புதிய ஹோண்டா பைக் வர இருப்பதாக தெரிகிறது. இந்த பைக்கில் 300சிசி முதல் 500 சிசி இடையிலன எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கும்.

ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக வரும் புதிய ஹோண்டா மோட்டார்சைக்கிள்!

நடுத்தர வகை பைக் மார்க்கெட்டில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 85 சதவீத சந்தைப் பங்களிப்பை வைத்துள்ளது. இதனை உடைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்று ஹோண்டாவுக்கு தெரியும். ஏற்கனவே, பஜாஜ் உள்ளிட்ட நிறுவனங்கள் முட்டி மோதி வருவதும் தெரிந்த விஷயம். அத்துடன், ஜாவா மோட்டார்சைக்கிள்களும் இப்போது இந்த சந்தையில் ஆக்கிரமிக்கத் துவங்கி உள்ளது.

ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக வரும் புதிய ஹோண்டா மோட்டார்சைக்கிள்!

எனவே, புதிய வழியில் ராயல் என்ஃபீல்டு மார்க்கெட்டை உடைத்து குறிப்பிடத்தக்க பங்களிப்பை பெறுவதற்கு ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான உபசரிப்பு முறை, கனிவான சேவை மற்றும் விற்பனைக்கு பின் சிறந்த வாடிக்கையாளர் சேவையை வழங்கும் நோக்கத்தை கையில் எடுத்துள்ளது.

ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக வரும் புதிய ஹோண்டா மோட்டார்சைக்கிள்!

ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக களமிறக்கும் புதிய பைக்கை இந்தியாவிலேயே உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்கு ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனை பிரிமீயம் மாடலுக்குரிய அந்தஸ்துடன் நிலைநிறுத்தவும் முடிவு செய்துள்ளது.

ராயல் என்ஃபீல்டுக்கு போட்டியாக வரும் புதிய ஹோண்டா மோட்டார்சைக்கிள்!

நடுத்தர வகை மோட்டார்சைக்கிள் மார்க்கெட்டில் 10 சதவீத மார்க்கெட் பங்களிப்பை பெறுவதற்கான திட்டத்துடன் புதிய பைக்கை ஹோண்டா விற்பனைக்கு கொண்டு வருகிறது. இந்த ரகத்தில் ஏராளமான மாடல்களை ஹோண்டா வைத்துள்ளது. அதில், நிச்சயம் இந்திய வாடிக்கையாளர்களின் மனதை நாடிப்பிடித்து பார்த்து சிறந்ததை கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Japanese two-wheeler manufacturer Honda, plans to introduce new motorcycles in the Indian market within the next 18 months. The new motorcycle will be placed in the premium 300cc to 500cc segment, with an aim to rival Royal Enfield.
Story first published: Thursday, October 10, 2019, 11:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X