டெலிவிரி எடுத்த 20 நாட்களில் துருப்பிடித்த ஜாவா பைக்... அதிர்ச்சியில் உரிமையாளர்!

டெலிவிரி எடுத்த 20 நாட்களில் ஜாவா பைக் ஒன்றின் பல பாகங்கள் துருப்பிடித்ததையடுத்து, அதன் உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து ஃபேஸ்புக்கிலும் தனது குமுறலை கொட்டி தீர்த்துள்ளார்.

டெலிவிரி எடுத்த 20 நாட்களில் துருப்பிடித்த ஜாவா பைக்... அதிர்ச்சியில் உரிமையாளர்!

இந்தியர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த பாரம்பரியம் மிக்க ஜாவா மோட்டார்சைக்கிள்களை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்தது மஹிந்திரா நிறுவனம். ஜாவா மற்றும் ஜாவா 42 ஆகிய இரண்டு மாடல்கள் உடனடியாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இவை முறையே ரூ.1.64 லட்சம் மற்றும் ரூ.1.55 லட்சம் விலைகளில் அறிமுகம் செய்யப்பட்டது.

டெலிவிரி எடுத்த 20 நாட்களில் துருப்பிடித்த ஜாவா பைக்... அதிர்ச்சியில் உரிமையாளர்!

பாபர் ஸ்டைலிலான அதிக திறன் வாய்ந்த ஜாவா பெராக் மோட்டார்சைக்கிள் இந்த ஆண்டு இறுதியில் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த பைக்கிற்கு ரூ.1.89 லட்சம் விலையாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

டெலிவிரி எடுத்த 20 நாட்களில் துருப்பிடித்த ஜாவா பைக்... அதிர்ச்சியில் உரிமையாளர்!

இந்தநிலையில், ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு சரியான மாற்றுத் தேர்வாக ஜாவா மோட்டார்சைக்கிள்கள் இருந்ததால், வாடிக்கையாளர் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. கடந்த மார்ச் மாதம் டெலிவிரியும் துவங்கப்பட்டது.

டெலிவிரி எடுத்த 20 நாட்களில் துருப்பிடித்த ஜாவா பைக்... அதிர்ச்சியில் உரிமையாளர்!

ஆனால், உற்பத்தி திறன் குறைவாக இருப்பதால், முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு குறித்த நேரத்தில் மோட்டார்சைக்கிள்களை டெலிவிரி கொடுக்காமல், ஜாவா இழுத்தடித்து வருகிறது. இதனால், முன்பதிவு செய்து காத்திருக்கும் வாடிக்கையாளர்கள் கடும் கோபத்திலும், ஏமாற்றத்திலும் உள்ளனர். சிலர் முன்பதிவை ரத்து செய்தும் வருகின்றனர்.

டெலிவிரி எடுத்த 20 நாட்களில் துருப்பிடித்த ஜாவா பைக்... அதிர்ச்சியில் உரிமையாளர்!

சரி, முன்பதிவு செய்தவர்கள்தான் கோபத்திலும், ஏமாற்றத்திலும் புலம்பி வருகின்றனர் என்றால், ஜாவா மோட்டார்சைக்கிளை டெலிவிரி எடுத்த சில வாடிக்கையாளர்களும் புலம்பும் நிலை ஏற்பட்டு வருகிறது. அண்மையில் ஜாவா மோட்டார்சைக்கிளை டெலிவிரி பெற்ற மும்பையை சேர்ந்த சைலேஷ் சுவர்ணா என்ற வாடிக்கையாளர் கோபத்தின் உச்சத்தில் உள்ளார். அவரது கோபம் நியாயமானதாகவே தெரிகிறது.

டெலிவிரி எடுத்த 20 நாட்களில் துருப்பிடித்த ஜாவா பைக்... அதிர்ச்சியில் உரிமையாளர்!

முன்பதிவு செய்து, பல மாத காத்திருப்புக்கு பின்னர் கடந்த 2ந் தேதிதான் தனது ஜாவா மோட்டார்சைக்கிளை சைலேஷ் சுவர்ணா டெலிவிரி எடுத்துள்ளார். மோட்டார்சைக்கிள் கையில் கிடைத்த மகிழ்ச்சியில் அடாத மழையிலும் தனது புதிய ஜாவா மோட்டார்சைக்கிளில் வலம் வந்துள்ளார்.

டெலிவிரி எடுத்த 20 நாட்களில் துருப்பிடித்த ஜாவா பைக்... அதிர்ச்சியில் உரிமையாளர்!

இந்த நிலையில், டெலிலிரி எடுத்த 20 நாட்களிலேயே அவரது ஜாவா மோட்டார்சைக்கிள் பல் இளிக்க ஆரம்பித்து விட்டது. அதாவது, அந்த மோட்டார்சைக்கிளின் பல பாகங்களில் துருப்பிடித்துவிட்டது. க்ரோம் பூச்சுடைய சைலென்சர் குழாய் உள்ளிட்ட பல பாகங்களிலும் துருப்பிடித்துள்ளதை பார்த்து அவர் அதிர்ச்சியடைந்தார்.

டெலிவிரி எடுத்த 20 நாட்களில் துருப்பிடித்த ஜாவா பைக்... அதிர்ச்சியில் உரிமையாளர்!

அத்துடன், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரிலும் நீர் உள்ளே புகுந்து பாழாக்கியுள்ளது. இதுதொடர்பான படங்களை அவர் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். டெலிவிரி எடுக்கும்போது பார்த்து எடுத்திருக்கலாம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

டெலிவிரி எடுத்த 20 நாட்களில் துருப்பிடித்த ஜாவா பைக்... அதிர்ச்சியில் உரிமையாளர்!

இருப்பினும், டெலிவிரி எடுத்து 20 நாட்களுக்குள் புத்தம் புதிய பைக் இவ்வாறு துருப்பிடித்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில ஆண்டுகள் பயன்படுத்திய நிலையில், இவ்வாறு ஆகியிருந்தால் கூட வாடிக்கையாளர் சரியாக பராமரிக்கவில்லை என்ற காரணத்தை கூற முடியும்.

டெலிவிரி எடுத்த 20 நாட்களில் துருப்பிடித்த ஜாவா பைக்... அதிர்ச்சியில் உரிமையாளர்!

இதுதொடர்பாக, டெலிவிரி பெற்ற ஜாவா டீலரிலும் காட்டி புகார் செய்துள்ளார் சைலேஷ் சுவர்ணா. டெலிவிரி எடுத்து பயன்படுத்திவிட்டதால் இனி எதுவும் செய்ய முடியாது என்று டீலரில் கைவிரித்து விட்டதாக தெரிகிறது. மேலும், துருப்பிடித்த பாகங்களை பெயிண்ட் செய்து சரிசெய்து தருவதாக உறுதி அளித்துள்ளனராம். மோசமாக துருப்பிடித்த பாகங்களை மாற்றித் தருவதாகவும் கூறி இருக்கின்றனராம்.

டெலிவிரி எடுத்த 20 நாட்களில் துருப்பிடித்த ஜாவா பைக்... அதிர்ச்சியில் உரிமையாளர்!

ராயல்் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களில் இதுபோன்ற பிரச்னைகளை வாடிக்கையாளர்கள் தெரிவிப்பதுண்டு. தரம் தொடர்பாக கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும் என்று தங்களது வருத்தத்தையும், கோரிக்கையையும் பதிவு செய்வர். ஆனால், அதே வரிசையில் தற்போது ஜாவா பைக்கில் துருப்பிரச்னை குறித்து உரிமையாளர் பதிவு செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

டெலிவிரி எடுத்த 20 நாட்களில் துருப்பிடித்த ஜாவா பைக்... அதிர்ச்சியில் உரிமையாளர்!

சைலேஷ் சுவர்ணாவின் பைக் துருப்பிடித்த விஷயம் ஜாவா பைக்குகளின் தரம் குறித்த சந்தேகத்தை வாடிக்கையாளர் மத்தியில் கிளப்பி இருக்கிறது. இந்த சூழலில், ஜாவா டீலர்களின் சேவை தரமும் மோசமாக இருப்பதற்கு அண்மையில் ஒரு சம்பவம் சான்றாக அமைந்துள்ளது.

 ரூ.9 ஆயிரம் சுருட்ட முயன்ற ஜாவா டீலரை கதற விட்ட வாடிக்கையாளர்... எப்படி ஏமாற்றுகின்றனர் என தெரியுமா?

வாடிக்கையாளர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜாவா மோட்டார்சைக்கிள்கள் இந்திய மார்க்கெட்டிற்கு மீண்டும் வந்தன. மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு தங்கள் மனதிற்கு நெருக்கமான மோட்டார்சைக்கிள் இந்தியாவில் மீண்டும் களமிறங்கியதால், ஏராளமான வாடிக்கையாளர்கள் போட்டி போட்டு கொண்டு முன்பதிவு செய்தனர்.

ரூ.9 ஆயிரம் சுருட்ட முயன்ற ஜாவா டீலரை கதற விட்ட வாடிக்கையாளர்... எப்படி ஏமாற்றுகின்றனர் என தெரியுமா?

ஆரம்பம் அமர்க்களமாக இருந்தாலும், தற்போது ஜாவா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஜாவா பைக்குகளை உரிய நேரத்தில் டெலிவரி செய்யாததே இதற்கு காரணம். இதனால் ஆத்திரமடைந்த பலர் ஜாவா மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவை ரத்து செய்து விட்டு, மீண்டும் ராயல் என்பீல்டு ஷோரூம்கள் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி வருகின்றனர்.

ரூ.9 ஆயிரம் சுருட்ட முயன்ற ஜாவா டீலரை கதற விட்ட வாடிக்கையாளர்... எப்படி ஏமாற்றுகின்றனர் என தெரியுமா?

இப்படிப்பட்ட சூழலில் ஜாவா தற்போது சர்ச்சை ஒன்றில் சிக்கி கொண்டுள்ளது. ஜாவா நிறுவன டீலர்ஷிப் ஒன்று, வாடிக்கையாளரின் தலையில் நன்றாக மிளகாய் அரைக்க முயன்றுள்ளது. வாடிக்கையாளரிடம் இருந்து கிட்டத்தட்ட 9 ஆயிரம் ரூபாயை கூடுதலாக சுருட்ட அவர்கள் முயன்றுள்ளனர். ஆனால் அந்த வாடிக்கையாளர் அடுத்து என்ன செய்தார் தெரியுமா? அதுதான் ஹைலைட்டே.

 ரூ.9 ஆயிரம் சுருட்ட முயன்ற ஜாவா டீலரை கதற விட்ட வாடிக்கையாளர்... எப்படி ஏமாற்றுகின்றனர் என தெரியுமா?

பல்வேறு மாநில நீதிமன்ற தீர்ப்புகளில் ''ஹேண்டிலிங் சார்ஜ்கள்'' சட்ட விரோதம் என கூறப்பட்டுள்ளது. இது தவிர சுப்ரீம் கோர்ட்டும் கூட இதுபோன்ற கட்டணங்களை வாடிக்கையாளர்களின் தலையில் சுமத்த கூடாது என உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் கூட கார் மற்றும் பைக் டீலர்கள் தொடர்ந்து இத்தகைய கட்டணங்களை வசூலித்து கொண்டேதான் உள்ளனர்.

ரூ.9 ஆயிரம் சுருட்ட முயன்ற ஜாவா டீலரை கதற விட்ட வாடிக்கையாளர்... எப்படி ஏமாற்றுகின்றனர் என தெரியுமா?

இதையேதான் சம்பந்தப்பட்ட ஜாவா நிறுவன டீலர்ஷிப்பும் செய்ய முயன்றுள்ளது. வாடிக்கையாளர் ஒருவர் ஜாவா கிளாசிக் ட்யூயல் ஏபிஎஸ் வேரியண்ட்டை வாங்குவதற்காக, அதன் டீலர்ஷிப் ஒன்றில் கொட்டோஷன் கேட்டுள்ளார். இதன் பேரில் அவர்கள் கொடுத்த கொட்டேஷனில் விலை எவ்வளவு குறிப்பிடப்பட்டிருந்தது தெரியுமா? 2,16,142 ரூபாய்.

ரூ.9 ஆயிரம் சுருட்ட முயன்ற ஜாவா டீலரை கதற விட்ட வாடிக்கையாளர்... எப்படி ஏமாற்றுகின்றனர் என தெரியுமா?

இதில், எக்ஸ் ஷோரூம் விலை 1,76,242 ரூபாய், லைட் பார் மற்றும் மற்றவை ஆகியவற்றுக்கு 20 ஆயிரம் ரூபாய், இன்சூரன்ஸ் 14 ஆயிரம் ரூபாய், பிடிஐ (PDI - Pre Delivery Inspection) 900 ரூபாய், சென்டர் ஸ்டாண்ட் 800 ரூபாய், ஹேண்டிலிங் மற்றும் ஃபிட்டிங் ஆகியவற்றுக்கு முறையே ரூ.1,700 மற்றும் ரூ.500 மற்றும் டீடெய்லிங்கிற்கு 2,000 ரூபாய் அடக்கம்.

இதில், ‘Others' என குறிப்பிடப்பட்டிருக்கும் கட்டணங்கள் எதற்காக? என்ற கேள்விக்கு, அவை ஆர்டிஓ ஏஜெண்ட் கட்டணம் என்ற பதில் அவருக்கு கிடைத்துள்ளது. ஆனால் டீலர்ஷிப் தரப்பில் அளிக்கப்பட்ட பதில்களால் அவர் மனம் சமாதானம் அடையவில்லை. இந்த தேவையற்ற கட்டணங்கள் குறித்து அவர் ஜாவாவிற்கு எழுதினார்.

 ரூ.9 ஆயிரம் சுருட்ட முயன்ற ஜாவா டீலரை கதற விட்ட வாடிக்கையாளர்... எப்படி ஏமாற்றுகின்றனர் என தெரியுமா?

அத்துடன் அந்நிறுவனத்தின் சிஇஓவிற்கும் டிவிட்டர் மூலம் அவர் இதனை தெரியப்படுத்தினார். இதனால் தென் இந்தியா ஜாவா ஆர்ஜிஎம்-மிடம் இருந்து அவருக்கு உடனடியாக செல்போன் அழைப்பு வந்தது. அந்த சமயத்தில் டீலர்ஷிப்பின் எம்டி-யும் கான்ஃபரன்ஸ் காலில் இருந்தார். இதன்பின் கூடுதல் ஹேண்டிலிங் மற்றும் ‘Others' என குறிப்பிடப்பட்டிருந்த கட்டணங்கள் நீக்கப்பட்டன.

ரூ.9 ஆயிரம் சுருட்ட முயன்ற ஜாவா டீலரை கதற விட்ட வாடிக்கையாளர்... எப்படி ஏமாற்றுகின்றனர் என தெரியுமா?

இதன் மூலம் 2,07,336 ரூபாய் என கொட்டேஷன் குறைக்கப்பட்டது. அதாவது ஆன் ரோடு விலையில் சுமார் 9 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த வாடிக்கையாளர் மகிழ்ச்சியடைந்திருப்பார் என நினைக்கலாம். இந்த வாடிக்கையாளரை போலவே நீங்கள் டீலர்ஷிப்களில் உஷாராக இருங்கள். இல்லாவிட்டால் உங்கள் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்.

ரூ.9 ஆயிரம் சுருட்ட முயன்ற ஜாவா டீலரை கதற விட்ட வாடிக்கையாளர்... எப்படி ஏமாற்றுகின்றனர் என தெரியுமா?

ஹேண்ட்லிங் சார்ஜ் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டது போல, சைலேஷ் சுவர்ணா பைக்கிற்கும் ஜாவா நிறுவனத்திடம் இருந்து உரிய தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இந்த விஷயத்தில் ஜாவா என்ன தீர்வு வழங்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Jawa owner has compalined of his brand new bike is getting rust in less than 20 days, since delivery.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X