தோளை முறுக்கி ஆளை மயக்கும் புதிய கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 25ஆர் பைக்!

கவாஸாகி நிறுவனத்தின் புதிய இசட்எக்ஸ் 25ஆர் பைக் டோக்கியோ மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

தோளை முறுக்கி ஆளை மயக்கும் புதிய கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 25ஆர் பைக்!

ஜப்பானிய தலைநகர் டோக்கியோவில் துவங்கி இருக்கும் சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் கவாஸாகி நிறுவனம் பல புதிய பைக் மாடல்களை பொது பார்வைக்கு கொண்டு வந்துள்ளது. இதில், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள மாடல் கவாஸாகி நின்ஜா 25ஆர் பைக்.

தோளை முறுக்கி ஆளை மயக்கும் புதிய கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 25ஆர் பைக்!

வழக்கம்போல் கவாஸாகி நிறுவனத்தின் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் மிரட்டலாக இருக்கிறது. அதேபோன்று, கிளி பச்சை மற்றும் கருப்பு வண்ணக் கலவையில் மிக கவர்ச்சியாக இருக்கிறது. இந்த பைக்கில் ஸ்டெப்டு எனப்படும் வகையிலான இருக்கை அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதாவது, பின் இருக்கை சற்று உயரமாக அமைக்கப்பட்டு இருக்கிறது.

தோளை முறுக்கி ஆளை மயக்கும் புதிய கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 25ஆர் பைக்!

இந்த பைக்கில் இரட்டை க்ளஸ்ட்டர் ஹெட்லைட் அமைப்பு, ஃபேரிங் பேனல்களில் இண்டிகேட்டர்கள், பைக்கின் எஞ்சினுக்கு கீழ் பகுதியில் கொடுக்கப்பட்டு இருக்கும் சைலென்சர் அமைப்பு ஆகியவை இந்த பைக்கின் மிக முக்கிய அம்சங்கள். இந்த பைக்கின் ஹெட்லைட் க்ளஸ்ட்டரும், பெட்ரோல் டேங்க் வடிவமைப்பும் முறுக்கேற்றிய தோற்றத்தை வழங்குகிறது.

தோளை முறுக்கி ஆளை மயக்கும் புதிய கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 25ஆர் பைக்!

புதிய கவாஸாகி இசட்எக்ஸ் 25ஆர் பைக்கில் 249 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 4 சிலிண்டர்கள் கொண்டது என்பதுதான் இதன் மிக முக்கிய சிறப்பம்சமாக உள்ளது. இந்த பைக்கின் எஞ்சினின் செயல்திறன் குறித்த தொழில்நுட்ப விபரங்கள் வெளியிடப்படவில்லை.

தோளை முறுக்கி ஆளை மயக்கும் புதிய கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 25ஆர் பைக்!

ஆனால், 1989 முதல் 1997 ஆண்டு வரை உற்பத்தியில் இருந்த முந்தைய தலைமுறை இசட்எக்ஸ் 25ஆர் பைக்கின் செயல்திறனை ஒத்திருக்கும் என்று தெரிகிறது. அதாவது, பழைய எஞ்சின் அதிகபட்சமாக 45 எச்பி பவரையும், 24.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதே அளவில்தான் புதிய மாடலின் செயல்திறனும் இருக்கும் என்பது கணிப்பாக உள்ளது.

தோளை முறுக்கி ஆளை மயக்கும் புதிய கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 25ஆர் பைக்!

இந்த பைக்கின் முன்புறத்தில் ஷோவா SFF-BP ஃபோர்க்குகள் கொண்ட சஸ்பென்ஷன் அமைப்பும், பின்புறத்தில் மோனோ ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பைக்கில் முன்புறத்திலும், பின்புறத்திலும் சிங்கிள் டிஸ்க் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

தோளை முறுக்கி ஆளை மயக்கும் புதிய கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 25ஆர் பைக்!

கவாஸாகி நின்ஜா இசட்எக்ஸ் 25ஆர் பைக்கில் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், குயிக் ஷிஃப்ட்டர், பவர் டிரைவிங் மோடுகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இது நிச்சயம் இதன் ரகத்தில் மிக மிக பிரிமீயமான மாடலாக இருக்கும். இந்த பைக் உடனடியாக இந்தியாவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்க இயலாது. எதிர்காலத்தில் சந்தை நிலவரத்தை பொறுத்து இந்த பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து கவாஸாகி ஆய்வு செய்யும் என்று நம்பலாம்.

Most Read Articles
மேலும்... #கவாஸாகி #kawasaki
English summary
Japanese bike maker, Kawasaki has unveiled the new generation Ninja ZX-25R at the 2019 Tokyo Motor Show.
Story first published: Wednesday, October 23, 2019, 18:41 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X