முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியாக 1290 சூப்பர் ட்யூக் ஆர்-ஐ களத்தில் இறக்கும் கேடிஎம்!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான கேடிஎம் தனது அடுத்த தயாரிப்பு பைக்கான 1290 சூப்பர் ட்யூக் ஆர்-ஐ அடுத்த மாதம் 5ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளது. இத்தாலி நாட்டில் நடைபெறவுள்ள பிரபல ஆட்டோமொபைல் நிகழ்ச்சியான இஐசிஎம்ஏ-ல் இந்த பைக் அறிமுகப்படுத்த உள்ளதினால் பல்வேறு சோதனைகளில் உட்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்த டீசர் வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது.

முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியாக 1290 சூப்பர் ட்யூக் ஆர்-ஐ களத்தில் இறக்கும் கேடிஎம்!

இந்நிலையில் தான் கேடிஎம் நிறுவனம், இஐசிஎம்ஏ கண்காட்சியில் அறிமுகப்படுத்தவுள்ள 1290 சூப்பர் ட்யூக் ஆர்-ஐ முக்கியமான பல சோதனைகளில் உட்படுத்தியுள்ளது. இதன் டீசர் வீடியோ வெளியானாலும், இப்பைக் குறித்த தகவல்கள் அனைத்தும் ரகசியமாகவே பாதுகாக்க படுகின்றன. இருப்பினும் இப்பைக் தற்போதைய மாடலை விட பல அப்டேட்களை பெற்றிருக்கும் என்பது உறுதி.

இந்த 2020ஆம் ஆண்டிற்கான 1290 சூப்பர் ட்யூக் ஆர், யூரோ-4 மாடலை போல் இல்லாமல், அலாய் சக்கரங்கள் புதிய டிசைன்களில் குறுக்கு நெடுக்காக அமைக்கப்பட்ட சப்-ப்ரேம்களை கொண்டிருக்கின்றன.

முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியாக 1290 சூப்பர் ட்யூக் ஆர்-ஐ களத்தில் இறக்கும் கேடிஎம்!

பைக்கின் உடற்பகுதி, க்ராபிக்ஸ் மற்றும் பெயிண்ட் அமைப்புகளிலும் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. பிறகு எல்லா மாடல்களுக்கும் வழங்கப்படும் அம்சங்களான, எல்இடி லைட், டிஜிட்டல் டிஎஃப்டி திரை மற்றும் ஒருபக்க ஸ்விங்கார்ம் போன்றவை அப்படியே உள்ளன. ஹெட்லைட் வெளியான ஸ்பை புகைப்படங்களின் மூலம் பார்க்கும்போது தற்போதைய மாடலை விட ஸ்டைலாக உள்ளது.

முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியாக 1290 சூப்பர் ட்யூக் ஆர்-ஐ களத்தில் இறக்கும் கேடிஎம்!

இந்த 1290 சூப்பட் ட்யூக் ஆர்-ல் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான அப்டேட் என்னவென்றால், என்ஜின் முழுவதும் யூரோ-5 தரத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எல்சி8-வி2 என அழைக்கப்படும் இந்த என்ஜின், பெரியளவிலான ரேடியேட்டர் மற்றும் புதிய கூலிங் அமைப்பால் உருவாக்கப்பட்டிருக்கலாம்.

முன்னணி நிறுவனங்களுக்கு போட்டியாக 1290 சூப்பர் ட்யூக் ஆர்-ஐ களத்தில் இறக்கும் கேடிஎம்!

இந்த என்ஜினின் ஆற்றல் 1301சிசி-ல் 180 பிஎச்பி-லிருந்து 190 பிஎச்பி வரையில் தான் இருக்கும் என வதந்திகள் பரவி வருகின்றன. இதன் தற்போதைய மாடலே 174 பிஎச்பி ஆற்றலை வழங்குகிறது. இதனால் இந்த 1290 சூப்பர்ட்யூக் ஆர்-ன் அதிகப்பட்ச ஆற்றலை கண்டிப்பாக 200 பிஎச்பி-ல் தான் கேடிஎம் நிறுவனம் நிர்ணயித்திருக்கும்.

இந்த சூப்பர் ட்யூக்கை தொடர்ந்து கேடிஎம் நிறுவனத்தின் வருங்கால தயாரிப்புகளான நியூ 890 மற்றும் 490 மாடல்களும் இந்த இஐசிஎம்ஏ நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #கேடிஎம் #ktm
English summary
New 2020 KTM 1290 Super Duke R teased ahead of EICMA debut
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X