ராயல் என்பீல்டின் அடுத்த தலைமுறை கிளாசிக் பைக் இதுதான்... இணையத்தில் வைரலாகும் ஸ்பை படங்கள்...!

ராயல் என்பீல்டின் அடுத்த தலைமுறை கிளாசிக் பைக்கின் ஸ்பை படங்கள் வெளியாகியுள்ளது. இந்த பைக் குறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ராயல் என்பீல்டின் அடுத்த தலைமுறை கிளாசிக் பைக் இதுதான்... இணையத்தில் வைரலாகும் ஸ்பை படங்கள்...!

இந்தியாவின் புகழ்வாய்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ராயல் என்பீல்டு நிறுவனம், அதன் நட்சத்திர மாடல்களான புல்லட், கிளாசிக் மற்றும் தண்டர்பேர்டு ஆகிய மோட்டார்சைக்கிள்களை அடுத்த தலைமுறைக்கு ஏற்பவாறு அப்கிரேட் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றது. இந்த மாடல்கள் அனைத்தும் அந்த நிறுவனத்தின்மூலம் நீண்ட காலமாக விற்பனையில் இருக்கும் மாடல்கள் என்பதனை, நாம் யாரும் மறுக்க முடியாத ஒன்று.

ராயல் என்பீல்டின் அடுத்த தலைமுறை கிளாசிக் பைக் இதுதான்... இணையத்தில் வைரலாகும் ஸ்பை படங்கள்...!

ராயல் என்பீல்டு நிறுவனம், இந்த பைக்குகளை அவ்வப்போது, நவீன யுகத்திற்கு ஏற்பவாறு அப்கிரட் செய்யும். அந்தவகையில், புதிய கலர் மற்றும் சிறியளவிலான அப்டேட்டுகளை அந்த பைக்குகளுக்கு அது வழங்கி வருகின்றது. அந்தவகையில்தான், தற்போது புல்லட், கிளாசிக் மற்றும் தண்டர்பேர்டு ஆகிய மாடல்களை அந்த நிறுவனம் தற்போது அப்கிரேட் செய்து வருகின்றது. அதேசமயம், இருசக்கர வாகனச் சந்தையில் தற்போது அதிகரித்து வரும் போட்டி மற்றும் அழுத்தத்தின் காரணமாக இந்த நடவடிக்கையை அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

ராயல் என்பீல்டின் அடுத்த தலைமுறை கிளாசிக் பைக் இதுதான்... இணையத்தில் வைரலாகும் ஸ்பை படங்கள்...!

அதேசமயம், கூடிய விரைவில் அமலுக்குள்ளாக இருக்கும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிக்கேற்பவாறும் தன் தயாரிப்புகளை, ராயல் என்பீல்டு நிறுவனம் அப்டேட் செய்து வருகின்றது.

அந்தவகையில், புதிய விதிகள் மற்றும் அப்கிரேஷனுக்கு உள்ளாக்கப்பட்ட 2020ம் ஆண்டிற்கான கிளாசிக் 300/500 பைக், இந்தியச் சாலையில் பரிசோதனைக்கு உட்படுத்தும்போது ஸ்பை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த புகைப்படங்களை ரஷ்லேன் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

ராயல் என்பீல்டின் அடுத்த தலைமுறை கிளாசிக் பைக் இதுதான்... இணையத்தில் வைரலாகும் ஸ்பை படங்கள்...!

தற்போது கசிந்திருக்கும் இந்த புகைப்படங்கள், கிளாசிக் பைக் பெற்றிருக்கும் சிறப்பம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. அந்தவகையில், இந்த பைக்கினை ராயல் என்பீல்டு நிறுவனம், மாடுலர் ஜே தரத்தில் கட்டமைத்திருப்பது புகைப்படத்தின்மூலம் தெரியவந்துள்ளது. இதே தரத்தில்தான் புல்லட் மற்றும் தண்டர்பேர்டு உள்ளிட்ட பைக்குளும் கட்டமைக்கப்பட்டுள்ளன. அதேசமயம், இந்த புகைப்படம், பைக்கின் எஞ்ஜின் பெற்றிருக்கும் மாற்றத்தையும் வெளிப்படுத்துகின்றது.

ராயல் என்பீல்டின் அடுத்த தலைமுறை கிளாசிக் பைக் இதுதான்... இணையத்தில் வைரலாகும் ஸ்பை படங்கள்...!

அந்தவகையில், அதன் எஞ்ஜின் வடிவமைப்பு கணிசமாக திருத்தப்பட்டுள்ளது. இத்துடன் ஆல்டர்னேட்டர் எஞ்ஜின் கேஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜினின் மற்ற சிறப்பம்சங்களை, தற்போது வெளியாகியிருக்கும் இந்த புகைப்படங்களை வைத்து மட்டுமே கணித்துவிடவில்லை. இருப்பினும், அது 300 மற்றும் 500 சிசி தரத்திற்கேற்ப உருவாக்க்ப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ராயல் என்பீல்டின் அடுத்த தலைமுறை கிளாசிக் பைக் இதுதான்... இணையத்தில் வைரலாகும் ஸ்பை படங்கள்...!

அதேசமயம், பாரம்பரியத்தை மாற்றாமல், அதனைத் தொடரும் வகையில், இந்த சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜினும் ஏர் கூலிங் முறையையேப் பெற்றுள்ளது. ஆனால், இந்த எஞ்ஜின் பிஎஸ்-6 தரத்திற்கேற்ப அப்டேட் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இத்துடன், இந்த எஞ்ஜினில் ஸ்டாண்டர்டு எலக்ட்ரானிக் ப்யூவல் இன்ஜெக்சன் முறை எதிர்பார்க்கப்படுகின்றது. இதில், கிக் ஸ்டார்ட்டர் இல்லை. இது வெறும் செல்ஃப் ஸ்டார்ட்டை மட்டுமே நம்பியுள்ளது.

ராயல் என்பீல்டின் அடுத்த தலைமுறை கிளாசிக் பைக் இதுதான்... இணையத்தில் வைரலாகும் ஸ்பை படங்கள்...!

அதேபோன்று, தற்போது வெளியாகியிருக்கும் இந்த புகைப்படத்தில், கிளாசிக் பைக் அதன் பழைய தோற்றம் மற்றும் அம்சங்களை அப்படியே பெற்றிருப்பதைப் போன்று காட்சியளிக்கின்றது. ஆனால், இதில் சிலமாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், ஹெட்லேம்ப் உள்ளிட்டவை சிறு அளவிலான மாற்றத்தைப் பெற்றிருக்கலாம் என கூறப்படுகின்றது.

ராயல் என்பீல்டின் அடுத்த தலைமுறை கிளாசிக் பைக் இதுதான்... இணையத்தில் வைரலாகும் ஸ்பை படங்கள்...!

இந்த பைக்கின் ஃபூட் பெக் புதிய லுக்கைப் பெற்றிருக்கின்றது. அதற்கேற்ப வகையில், பின்பக்க வீலுக்கான பிரேக், ஃபூட் பெக்கிற்கு சற்று மேலே, குறுகலாகவும், சிறியதாகவும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த புதிய மாடல் மோட்டார்சைக்கிளில் ஜப்பானியர்கள் தொழில்நுட்ப சில புகுத்தப்பட்டுள்ளன. ஆகையால், இந்த மோட்டார்சைக்கிளில் சில புதிய சிறப்பம்சங்கள் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகின்றது.

ராயல் என்பீல்டின் அடுத்த தலைமுறை கிளாசிக் பைக் இதுதான்... இணையத்தில் வைரலாகும் ஸ்பை படங்கள்...!

புதிதாக அப்கிரேட் செய்யப்பட்டிருக்கும் இந்த மாடல்கள் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்ற தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினம், இவை 2020ம் ஆண்டிற்கு பின் விற்பனைக்கு களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ராயல் என்பீல்டு நிறுவனம் தற்போது சந்தித்து வரும் விற்பனை வீழ்ச்சியை சீர் செய்ய இந்த புதிய மாடல்கள் உதவும் என கருதப்படுகின்றது.

Most Read Articles
English summary
2020 Royal Enfield Classic Spy Pics. Read in Tamil.
Story first published: Monday, June 24, 2019, 12:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X