புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் ரகசிய சோதனை ஓட்டம்!

அதிக சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் மோட்டார்சைக்கிள் தீவிர சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. சென்னை அருகே சோதனை ஓட்டம் செய்தபோது எடுக்கப்பட்ட ஸ்பை வீடியோ ஒன்று வெளியாகி ராயல் என்ஃபீல்டு ரசிகர்களின் ஆவலை கிளறியுள்ளது.

புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் ரகசிய சோதனை ஓட்டம்!

ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் மோட்டார்சைக்கிள் க்ரூஸர் ரக விரும்பிகளுக்கு சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக இந்த மோட்டார்சைக்கிள் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மோட்டார்சைக்கிளில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டம் கொண்ட எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இது மட்டுமல்லாமல், வடிவமைப்பிலும் பல மாறுதல்களை செய்து முழுமையாக க்ரூஸர் வகை மோட்டார்சைக்கிளாக இதனை மாற்றி களமிறக்க உள்ளது ராயல் என்ஃபீல்டு. சோதனை ஓட்டத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோ சந்தோஷ்குமார் என்பவரின் யூ-ட்யூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் ரகசிய சோதனை ஓட்டம்!

ஆம். ஸ்பை வீடியோவில் பார்க்கும்போது, இதன் இருக்கை, ஃபுட்பெக், வால்பகுதி, பெட்ரோல் டேங்க் ஆகிய அனைத்திலும் பல வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது, அமர்ந்து செல்வதற்கு மிக சவுகரியமான முழுமையான க்ரூஸர் வகை பைக் போன்று மாற்றங்கள் கண்டுள்ளது.

புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் ரகசிய சோதனை ஓட்டம்!

இந்த புதிய தண்டர்பேர்டு எக்ஸ் மோட்டார்சைக்கிளின் சேஸியும் புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. டபுள் கிராடில் ஃப்ரேமில் இந்த புதிய மாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும், அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்சக்கரத்தில் இடது புறம் இருந்த டிஸ்க் பிரேக் வலது பக்கம் மாற்றப்பட்டுள்ளது.

ஸ்பிளிட் இருக்கைகள், புதிய பக்கவாட்டு பேனல்கள், தாழ்வான ஹேண்டில்பார் அமைப்பு, புதிய புகைப்போக்கி குழல் அமைப்பு என எக்கச்சக்க மாற்றங்களுடன் முற்றிலும் புதிய மாடலாக வர இருக்கிறது ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு எக்ஸ்.

மேலும், தண்டர்பேர்டு எக்ஸ் வரிசையில் புதிய மாடலாக இந்த மோட்டார்சைக்கிள் வருவதற்கும் வாய்ப்புள்ளதாக ஆட்டோமொபைல் துறை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய ஜே என்ற கட்டமைப்பு கொள்கையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் ரகசிய சோதனை ஓட்டம்!

தற்போதைய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் மோட்டார்சைக்கிளில் கார்புரேட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், புதிய மாடலில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் கூடிய எஞ்சின் பயன்படுத்தப்படும். இது குறைவான மாசு உமிழ்வு மற்றும் சிறந்த எரிபொருள் சிக்கனத்தை தர வல்லதாக இருக்கும். ஃப்யூவல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் O2 சென்சார் மற்றும் கேட்டலிட்டிக் கன்வெர்ட்டர் ஆகியவயைும் இடம்பெற இருக்கின்றன. புதிய மாடலில் இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்கும், டியூவல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கொடுக்கப்பட்டு இருக்கும்.

MOST READ: மக்களின் இதயங்களை மீண்டும் வென்ற ஆந்திர முதல்வர் ஜெகன்... ஒரு உயிரை காப்பாற்ற அவர் செய்தது இதுதான்

புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் ரகசிய சோதனை ஓட்டம்!

புதிய ராயல் என்ஃபீல்டு தண்டர்பேர்டு எக்ஸ் மோட்டார்சைக்கிள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ரூ.1.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது.

Most Read Articles

English summary
The new Royal Enfield Thunderbird X has been spied on test runs near Chennai. Here are some important details in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X