பிஎஸ்6 என்ஜின் தரத்தில் உருவாகிவரும் சுசுகியின் நியூ ஜிக்ஸெர் 250, எஸ்எஃப் 250 பைக்குகள்...

ஜப்பான் மோட்டார்சைக்கிள் நிறுவனமான சுசுகி மோட்டார்ஸ் தனது பிரபல மாடல் பைக்குகளான ஜிக்ஸெர் 250 மற்றும் ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மாடல்களில் அப்டேட் செய்யவுள்ளதாக முன்னரே அறிவித்திருந்தது. அதன்படி பிஎஸ்6 என்ஜின் பொருத்தப்பட்ட இப்பைக்குகள் இந்திய மார்கெட்டில் விரைவில் அறிமுகமாகவுள்ளன.

பிஎஸ்6 என்ஜின் தரத்தில் உருவாகிவரும் சுசுகியின் நியூ ஜிக்ஸெர் 250, எஸ்எஃப் 250 பைக்குகள்...

இந்நிலையில் அப்டேட் செய்யப்பட்டு வருகின்ற இப்பைக்குகளின் என்ஜின் உள்பட தொழிற்நுட்பங்களின் தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அவற்றை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிஎஸ்6 என்ஜின் தரத்தில் உருவாகிவரும் சுசுகியின் நியூ ஜிக்ஸெர் 250, எஸ்எஃப் 250 பைக்குகள்...

சுசுகி ஜிக்ஸெர் 250 மற்றும் எஸ்எஃப் 250 என இரண்டு பைக்குகளும் பிஎஸ்6 என்ஜின் தரத்தில் 249சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜினில் அறிமுகமாகவுள்ளன. இவற்றின் என்ஜின் தற்போதுள்ள பிஎஸ்4 என்ஜின் வழங்கக்கூடிய பவரை விட 1 பிஎச்பி அதிகமாக 9000 ஆர்பிஎம்மில் 25.7 பிஎச்பி பவரை வெளிப்படுத்தவுள்ளது. இரு மோட்டார்சைக்கிள்களும் ஆறு வேக நிலைகளை வழங்கக்கூடிய கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்6 என்ஜின் தரத்தில் உருவாகிவரும் சுசுகியின் நியூ ஜிக்ஸெர் 250, எஸ்எஃப் 250 பைக்குகள்...

இந்த அப்டேட் செய்யப்பட்ட என்ஜினை தவிர இந்த பைக்குகளில் வேறெந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இதனால் இவை தற்போதுள்ள மாடலில் இருக்கும் அதே டிசைன் மற்றும் தொழிற்நுட்ப அம்சங்களுடன் வெளியாகவுள்ளன.

பிஎஸ்6 என்ஜின் தரத்தில் உருவாகிவரும் சுசுகியின் நியூ ஜிக்ஸெர் 250, எஸ்எஃப் 250 பைக்குகள்...

சுசுகி ஜிக்ஸெர் 250 ஸ்ட்ரீட்ஃபைட்டர் வெர்சனிலும், எஸ்எஃப் 250 சுசுகி நிறுவனத்திற்கே உரிய ஸ்டைலிலும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இரு பைக்குகளிலும் எல்இடி ஹெட்லைட்ஸ், பின்புற எல்இடி லைட்ஸ் மற்றும் எல்சிடி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர் உள்பட இன்னும் பல சிறப்பம்சங்கள் உள்ளன.

பிஎஸ்6 என்ஜின் தரத்தில் உருவாகிவரும் சுசுகியின் நியூ ஜிக்ஸெர் 250, எஸ்எஃப் 250 பைக்குகள்...

அதேபோல் ஜிக்ஸெர் 250, எஸ்எஃப் 250 இரண்டிலும் முன்புற சக்கரத்திற்கு டெலிஸ்கோப் ஃபோர்க்ஸும் பின்புற சக்கரத்திற்கு மோனோ-ஷாக் சஸ்பென்ஸும் கொடுக்கப்பட்டுள்ளன. ப்ரேக் அமைப்பாக டிஸ்க் ப்ரேக்கும் உதவிகரமாக டூயுல்-சேனல் ஏபிஎஸ் சிஸ்டமும் உள்ளது.

Most Read:பிஎஸ்6 என்ஜினை கொண்ட யமஹா எஃப்இசட், எஃப்இசட்-எஸ்ஸின் தகவல்கள் கசிந்தன...

பிஎஸ்6 என்ஜின் தரத்தில் உருவாகிவரும் சுசுகியின் நியூ ஜிக்ஸெர் 250, எஸ்எஃப் 250 பைக்குகள்...

சுசுகி ஜிக்ஸெர் 250-ன் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.1.09 லட்சமாகவும் ஜிக்ஸெர் எஸ்எஃப் 250-ன் விலை ரூ.1.70 லட்சமாகவும் உள்ளது. தற்போது அப்டேட் செய்யப்பட்டு வரும் இந்த மாடல்களின் விலை தற்போதைய மாடல்களை விட அதிகமாக நிர்ணயிக்கப்படலாம்.

Most Read:நியூ(2020) டிரையம்ப் ஸ்ட்ரீட் ட்ரிபிள் ஆர்எஸ்-ன் இந்திய அறிமுக தேதி வெளியானது!

பிஎஸ்6 என்ஜின் தரத்தில் உருவாகிவரும் சுசுகியின் நியூ ஜிக்ஸெர் 250, எஸ்எஃப் 250 பைக்குகள்...

சுசுகி ஜிக்ஸெர் 250 மற்றும் எஸ்எஃப் 250 மாடல் பைக்குகள் சமீபத்தில் தான் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த ஜப்பான் நிறுவனத்தால் இந்திய மார்கெட்டில் முதன்முதலில் அறிமுகம் செய்யப்பட்ட குவார்ட்டர்-லிட்டர் மோட்டார்சைக்கிள்கள் இவை தான். இவை இரண்டிற்கும் போட்டி மாடல்களாக சந்தையில், கேடிஎம் ட்யூக் 250, பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக்குகள் கருதப்படுகின்றன.

Most Read Articles

English summary
New Suzuki Gixxer 250 & SF 250 BS-VI Engine Details Leaked: India Launch Expected Soon
Story first published: Wednesday, October 16, 2019, 11:40 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X