தொடங்கியது புதிய ஜிக்ஸெர் 155 மாடல் பைக்கின் டெலிவரி: அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்...!

சுஸுகி நிறுவனத்தின் புதிய ஜிக்ஸெர் பைக்கிற்கான டெலிவரி தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்துடன், அந்த பைக்கிற்கான அக்ஸசெரீஸ்களும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தொடங்கியது புதிய ஜிக்ஸெர் 155 மாடல் பைக்கின் டெலிவரி: அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்...!

சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம், இந்தியாவில் அதன் புதிய ஜிக்ஸெர் 155 மாடலை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. மேலும், இந்த பைக்கிற்கு ரூ. 1,00,212 என்ற அந்நிறுவனம் விலையை நிர்ணயித்துள்ளது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலையாகும்.

தொடங்கியது புதிய ஜிக்ஸெர் 155 மாடல் பைக்கின் டெலிவரி: அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்...!

இது, தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைக் காட்டிலும் ரூ. 12 ஆயிரம் அதிகமாகும். இந்த அதிக விலைக்கு, அந்த பைக்கில் இடம்பெற்றிருக்கும் கூடுதல் பிரிமியம் அம்சமே முக்கிய காரணமாக இருக்கின்றது.

இதுகுறித்த தகவலை ரஷ்லேன் ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது. மேலும், அது வெளியிட்டுள்ள செய்தியில், இந்த புதிய பைக்கின் டெலிவரியும் தொடங்கியிருப்பதாக அது தெரிவித்துள்ளது.

தொடங்கியது புதிய ஜிக்ஸெர் 155 மாடல் பைக்கின் டெலிவரி: அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்...!

இத்துடன், சுஸுகி நிறுவனம் இந்த ஜிக்ஸெர் 155 பைக்கிற்கான 7 அக்ஸசெரீஸ்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதனை, வாடிக்கையாளரின் விருப்ப தேர்வாக அந்நிறுவனம் கூடுதல் விலையில் வழங்க இருக்கின்றது. ஆனால், இந்த பாகங்களின் விலைகுறித்த தகவலை அந்நிறுவனம், வெளியீட்டின்போது அறிவிக்கவில்லை.

தொடங்கியது புதிய ஜிக்ஸெர் 155 மாடல் பைக்கின் டெலிவரி: அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்...!

இதில், சுஸுகி நிறுவனம், ப்யூவல் டேங்க் புரொடக்டர், இருக்கைக்கான கிராஃபிக்குகள் மற்றும் க்னக்கிள் கவர் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்துள்ளது. இத்துடன், பம்பர் பிரேக்கட் மற்றும் டிசி சாக்கெட் உள்ளிட நவீன வசதியையும் அந்நிறுவனம் அக்ஸசெரீஸ்களாக அறிமுகம் செய்துள்ளது.

தொடங்கியது புதிய ஜிக்ஸெர் 155 மாடல் பைக்கின் டெலிவரி: அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்...!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

அதில், டேங்க் கவர், ஸ்கிராட்சிகளிலிருந்து ப்யூவல் டேங்கைக் காக்கும் வகையிலும், அதன் நிறத்தைக் காக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிசி சாக்கட்டானது, மொபைல் போன் சார்ஜ் செய்ய உதவும். இது, நீண்ட பயணத்தின்போது செல்போனை சார்ஜ் செய்துகொள்ள உதவும்.

தொடங்கியது புதிய ஜிக்ஸெர் 155 மாடல் பைக்கின் டெலிவரி: அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்...!

அதேபோன்று, இருக்கை கவர்கள், பைக்கின் ஒரிஜினல் கவரை காக்கவும், மழை நீரில் இருந்து காக்கவும் உதவும். இதைத்தொடர்ந்து, சுஸுகி நிறுவனம் க்னக்கிள் கவரையும் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. இது விபத்தின்போது, கைகளையும், பிரேக்குகளையும் பாதுகாக்கும்.

தொடங்கியது புதிய ஜிக்ஸெர் 155 மாடல் பைக்கின் டெலிவரி: அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்...!

அதேபோன்று, இந்த பைக்கிற்கான பிரத்யேக கவர், மழை மற்றும் வெயில் காலங்களில் இருந்தும் பைக்கினைப் பாதுகாக்கின்றது. இதைத்தொடர்ந்து, பைக்கின் எஞ்ஜினை காக்கும் வகையில், எஞ்ஜின் கவசமும் அந்நிறுவனம் வழங்குகின்றது. இது, பைக்கின் விபத்தின்போதும் எஞ்ஜினிற்கு எந்தவொரு சேதமும் ஏற்படாமல் பாதுகாக்கும்.

தொடங்கியது புதிய ஜிக்ஸெர் 155 மாடல் பைக்கின் டெலிவரி: அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்...!

சுஸுகி ஜிக்ஸெர் 155 பைக்கில் சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்ட் எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 14 பிஎச்பி பவரை, 8,000 ஆர்பிஎம்மிலும், 14 என்எம் டார்க்கை 6,000 ஆர்பிஎம்மிலும் வெளிப்படுத்தும். இத்துடன், இந்த எஞ்ஜினில் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

தொடங்கியது புதிய ஜிக்ஸெர் 155 மாடல் பைக்கின் டெலிவரி: அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்...!

இதேபோன்று, 6 சென்சார்களுடன் கூடிய, ப்யூவல் இன்ஜெக்சன் சிஸ்டத்திலான எஞ்ஜின் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், சொகுசான சஸ்பென்ஷன் அமைப்பிற்காக பைக்கின் முன் புறத்தில் 41மிமீ அளவிலான டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் ஸ்விங் ஆர்ம் மோனோ சஸ்பென்ஷனும் பொருத்தப்பட்டுள்ளது.

தொடங்கியது புதிய ஜிக்ஸெர் 155 மாடல் பைக்கின் டெலிவரி: அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்...!

சிறப்பான பயண அனுபவத்திற்காக 17 இன்ச்சிலான அலாய் வீல் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன், அதில் 100/80ஆர்-17எம்/சி அளவு கொண்ட ட்யூப் லெஸ் டயர் முன்பக்கத்திலும், பின் பக்கத்தில் 140/60ஆர் 17எம்/சி அளவு கொண்ட ட்யூப் லெஸ் டயரும் பொருத்தப்பட்டுள்ளது.

தொடங்கியது புதிய ஜிக்ஸெர் 155 மாடல் பைக்கின் டெலிவரி: அக்ஸசெரீஸ்கள் அறிமுகம்...!

இந்த சுஸுகி ஜிக்ஸெர் 155 பைக் தற்போது விற்பனையில் இருக்கும் யமஹா எஃப்இசட் வி3.0, பஜாஜ் பல்சர் 160என்எஸ், டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 4வோல்ட் மற்றும் ஹோண்டா சிபி ஹார்னட் 160ஆர் உள்ளிட்ட பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும்.

புதிய சுஸுகி ஜிக்ஸெர் 155 பைக் கிளாஸ் ஸ்பார்க்கிள் பிளாக், மெட்டாலிக் சோனிக் சில்வர் மற்றும் மெட்டாலிக் டைட்டான் புளூ ஆகிய மூன்று வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும்.

Most Read Articles
English summary
New Suzuki Gixxer Delivery Starts. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X