புதிய 2,500 சிசி எஞ்சினுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது ட்ரையம்ஃப் ராக்கெட்-3 பைக்

ட்ரையம்ஃப் ராக்கெட்-3 பைக்கின் இந்திய அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. புதிய மாடலின் சிறப்பம்சங்கள், அறிமுக தேதி உள்ளிட்ட முழுமையானத் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய 2,500 சிசி எஞ்சினுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது ட்ரையம்ஃப் ராக்கெட்-3 பைக்

கடந்த சில மாதங்களுக்கு முன் புதிய ட்ரையம்ஃப் ராக்கெட்-3 பைக் உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த பைக் புதிய கட்டமைப்புக் கொள்கையில் உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ராக்கெட்-3 ஆர் மற்றும் ராக்கெட் 3 ஜிடி என்று இரண்டு மாடல்களில் விற்பனைக்கு வர இருக்கிறது.

புதிய 2,500 சிசி எஞ்சினுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது ட்ரையம்ஃப் ராக்கெட்-3 பைக்

இதில், ராக்கெட்-3 ஜிடி மாடலானது நீண்ட தூர பயணங்களுக்கு ஏற்ற ஏராளமான சிறப்பம்சங்களுடன் கூடிய முழுமையான டூரர் மாடலாக இருக்கும். இந்த நிலையில், இந்த புதிய ட்ரையம்ஃப் ராக்கெட் -3 மாடலானது இந்தியாவில் வரும் டிசம்பர் 5ந் தேதி பொது பார்வைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

புதிய 2,500 சிசி எஞ்சினுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது ட்ரையம்ஃப் ராக்கெட்-3 பைக்

கோவாவில் நடைபெற இருக்கும் நிகழ்ச்சியில் இந்த பைக்கை ட்ரையம்ஃப் நிறுவனம் அறிமுகப்படுத்த இருப்பது தெரிய வந்துள்ளது. அதாவது, கோவாவில் வரும் டிசம்பர் 6ந் தேதி இந்திய பைக் திருவிழா துவங்க இருப்பதற்கு ஒரு நாள் முன்னதாக இந்த பைக் பொது பார்வைக்கு வர இருக்கிறது.

புதிய 2,500 சிசி எஞ்சினுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது ட்ரையம்ஃப் ராக்கெட்-3 பைக்

இந்த பைக்கின் இரண்டு வேரியண்ட்டுகளும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுமா என்று தெரியவில்லை. எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகளுடன் இந்த பைக் வர இருக்கிறது. ராக்கெட்-3 ஜிடி மாடலில் பின்புறம் அமர்பவருக்கு தோதுவாக பேக்ரெஸ்ட் அமைப்பு இடம்பெற்றிருக்கும்.

புதிய 2,500 சிசி எஞ்சினுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது ட்ரையம்ஃப் ராக்கெட்-3 பைக்

இந்த பைக்கில் மிகவும் சக்திவாய்ந்த 2,500 சிசி லிக்யூடு கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 167 எச்பி பவரையும், 221 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். தயாரிப்பு நிலை பைக்குகளில் அதிக சிசி கொண்ட எஞ்சினாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய 2,500 சிசி எஞ்சினுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது ட்ரையம்ஃப் ராக்கெட்-3 பைக்

பழைய எஞ்சினைவிட இந்த புதிய எஞ்சின் 18 கிலோ எடை குறைவானது. இதன் எஞ்சினின் புதிய க்ராங்க் கேஸ் கட்டமைப்பு, மேம்படுத்தப்பட்ட உயவு அமைப்பு காரணமாக இந்த எடை குறைப்பு சாத்தியமாகி உள்ளது. அத்துடன், பைக்கின் மொத்த எடையும் 40 கிலோ குறைந்துள்ளது.

புதிய 2,500 சிசி எஞ்சினுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது ட்ரையம்ஃப் ராக்கெட்-3 பைக்

புதிய ட்ரையம்ஃப் ராக்கெட்-3 பைக் முற்றிலும் புதிய அலுமினியம் ஃப்ரேம் கட்டமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் ஷோவா அப்சைடு டவுன் ஃபோர்க்குலும், பின்புறத்தில் ஷோவா மோனோ ஷாக் அப்சார்பரும் கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய 2,500 சிசி எஞ்சினுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது ட்ரையம்ஃப் ராக்கெட்-3 பைக்

அதேபோன்று, முன்புறத்தில் பிரெம்போ ஸ்டைல்மா 4 பிஸ்டனஅ மோனோ பிளாக் காலிபர்களுடன் கூடிய 320 மிமீ டியூவல் டிஸ்க் பிரேக் சிஸ்டமும், பின்புறத்தில் பிரெம்போ எம்-4.32 நான்கு பிஸ்டன் காலிபர்களுடன் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும் உள்ளது.

புதிய 2,500 சிசி எஞ்சினுடன் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகிறது ட்ரையம்ஃப் ராக்கெட்-3 பைக்

வரும் டிசம்பர் 5ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், உடனடியாக இந்த பைக்கை விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் ட்ரையம்ஃப் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Source: ACI

Most Read Articles
English summary
According to a media report, Triumph is likely to launch the 2020 Rocket 3 in India on December 5, 2019.
Story first published: Saturday, November 23, 2019, 11:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X