இந்தியாவுக்காக விலை குறைவான பைக்கை உருவாக்குகிறது நார்ட்டன்!

இந்திய மார்க்கெட்டுக்காக விலை குறைவான பிரிமீயம் பைக்கை நார்ட்டன் - கைனெட்டிக் கூட்டணி உருவாக்கி வருகிறது. இந்த பைக்கின் விபரங்களை முழுமையாக இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவுக்காக விலை குறைவான பைக்கை உருவாக்குகிறது நார்ட்டன்!

இங்கிலாந்தை சேர்ந்த பாரம்பரியம் மிக்க பிரிமீயம் பைக் தயாரிப்பு நிறுவனமான நார்ட்டன் இந்தியாவில் கைனெட்டிக் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய சந்தையில் நிலைத்து நிற்பதற்கு, பிரத்யேகமான மாடல் அவசியம் என்பதை இந்த கூட்டணி உணர்ந்து கொண்டுள்ளது.

இந்தியாவுக்காக விலை குறைவான பைக்கை உருவாக்குகிறது நார்ட்டன்!

இதற்காக, 500 சிசி திறனுக்கும் குறைவான புத்தம் புதிய மாடலை இந்தியாவுக்காக நார்ட்டன் மற்றும் கைனெட்டிக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கி வருகின்றன. இதனை கைனெட்டிக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அஜிங்கியா பிரோடியா உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்தியாவுக்காக விலை குறைவான பைக்கை உருவாக்குகிறது நார்ட்டன்!

தவிரவும், இந்த பைக்கின் முக்கிய விஷயங்களையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார். அதாவது, நார்ட்டன் நிறுவனத்தின் விலை குறைவான புதிய பைக் மாடல் கமான்டோ கப் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

இந்தியாவுக்காக விலை குறைவான பைக்கை உருவாக்குகிறது நார்ட்டன்!

இங்கிலாந்தில் நார்ட்டன் நிறுவனம் கமான்டோ 961 கலிஃபோர்னியா மற்றும் கமான்டோ 961 MK II என்ற இரண்டு மாடல்களை விற்பனையில் வைத்துள்ளது. இந்த மாடல்களின் டிசைன் அம்சங்களை இந்த புதிய கமான்டோ கப் பைக்கில் எதிர்பார்க்கலாம்.

இந்தியாவுக்காக விலை குறைவான பைக்கை உருவாக்குகிறது நார்ட்டன்!

பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் மிகச் சிறந்த தொழில்நுட்ப வசதிகளை பெற்றிருக்கும். ஆனால், இந்த புதிய பைக்கில் இடம்பெற இருக்கும் எஞ்சின் விபரங்கள் குறித்து அவர் தெரிவிக்கவில்லை. எனினும், 350 சிசி முதல் 500 சிசி திறனுக்கும் இடையிலான எஞ்சின் பொருத்தப்படும்.

இந்தியாவுக்காக விலை குறைவான பைக்கை உருவாக்குகிறது நார்ட்டன்!

புதிய நார்ட்டன் கமான்டோ கப் பைக் மாடலானது அந்நிறுவனத்தின் அட்லஸ் பைக்கிற்கு நெருக்கமான விலையில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால், ராயல் என்ஃபீல்டு அளவுக்கு மிக நெருக்கமான விலையில் அறிமுகம் செய்யப்படாது என்று அஜிங்கியா தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்காக விலை குறைவான பைக்கை உருவாக்குகிறது நார்ட்டன்!

இந்த பைக்கிற்கான 50 சதவீத உதிரிபாகங்கள் இந்திய சப்ளையர்களிடமிருந்து பெறப்படும். இந்தியா மட்டுமின்றி, ஆசிய நாடுகளுக்கும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படும். ஆண்டுக்கு 25,000 பைக்குகள் விற்பனை என்ற இலக்குடன் இந்த புதிய பைக்கை அறிமுகம் செய்ய இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது.

இந்தியாவுக்காக விலை குறைவான பைக்கை உருவாக்குகிறது நார்ட்டன்!

அடுத்த ஆண்டு புதிய நார்ட்டன் கமான்டோ கப் பார்வைக்கு கொண்டு வரப்படும். 2021ம் ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். அதற்கு முன்னதாக, நார்ட்டன் அட்லஸ் 650 பைக்கை இந்தியாவில் அறிமுகம் செய்ய கைனெட்டிக் குழுமம் திட்டமிட்டுள்ளது.

Source: Autocarindia

Most Read Articles
மேலும்... #நார்ட்டன் #norton
English summary
According to a media report, Norton and Kinetic alliance is developing a sub-500cc bike for the Indian market.
Story first published: Saturday, August 31, 2019, 11:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X