பயங்கரம்... புள்ளிங்கோ ஸ்கூட்டருக்கு மார்க்கெட்டில் கடும் கிராக்கி... சேல்ஸ் தூள் கௌப்புது...

புள்ளிங்கோ ஸ்கூட்டரின் விற்பனை அதிகரித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பயங்கரம்... புள்ளிங்கோ ஸ்கூட்டருக்கு மார்க்கெட்டில் கடும் கிராக்கி... சேல்ஸ் தூள் கௌப்புது...

இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், வழக்கம் போல ஹோண்டா ஆக்டிவாவின் ஆதிக்கம் தொடர்கிறது. ஹோண்டா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 2,12,164 ஆக்டிவா ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இதன் மூலம் கடந்த நவம்பர் மாதத்தில் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர்களின் பட்டியலில் ஆக்டிவா முதலிடத்தை பிடித்துள்ளது.

பயங்கரம்... புள்ளிங்கோ ஸ்கூட்டருக்கு மார்க்கெட்டில் கடும் கிராக்கி... சேல்ஸ் தூள் கௌப்புது...

எனினும் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஹோண்டா நிறுவனம் 2,18,212 ஆக்டிவா ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருந்தது. இது 3 சதவீத வீழ்ச்சியாகும். இருந்தபோதும் இந்த பட்டியலில் ஹோண்டா ஆக்டிவா முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை சுஸுகி நிறுவனத்தின் அக்செஸ் பிடித்துள்ளது.

பயங்கரம்... புள்ளிங்கோ ஸ்கூட்டருக்கு மார்க்கெட்டில் கடும் கிராக்கி... சேல்ஸ் தூள் கௌப்புது...

கடந்த நவம்பர் மாதம் 49,128 சுஸுகி அக்செஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 42,334 அக்செஸ் ஸ்கூட்டர்களை மட்டுமே சுஸுகி விற்பனை செய்திருந்தது. இது 16 சதவீத வளர்ச்சியாகும். கடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தை நம்ம புள்ளிங்கோ ஸ்கூட்டர் பிடித்துள்ளது.

பயங்கரம்... புள்ளிங்கோ ஸ்கூட்டருக்கு மார்க்கெட்டில் கடும் கிராக்கி... சேல்ஸ் தூள் கௌப்புது...

அதுதாங்க நம்ம ஹோண்டா டியோ. ஹோண்டா டியோ ஸ்கூட்டர்தான் புள்ளிங்கோவின் ஆஸ்தான வாகனமாக பார்க்கப்படுகிறது. ஹோண்டா டியோ வைத்திருப்பது புள்ளிங்கோவின் அடையாளங்களில் ஒன்று. கடந்த சில மாதங்களாக புள்ளிங்கோ சமூக வலை தளங்களில் டிரெண்ட் ஆகி வரும் நிலையில், ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.

பயங்கரம்... புள்ளிங்கோ ஸ்கூட்டருக்கு மார்க்கெட்டில் கடும் கிராக்கி... சேல்ஸ் தூள் கௌப்புது...

கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் ஹோண்டா நிறுவனம் 38,484 டியோ ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு நவம்பர் மாதம் 42,481 ஹோண்டா டியோ ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 10 சதவீத வளர்ச்சியாகும். ஹோண்டா டியோ ஸ்கூட்டரின் விற்பனை வளர்ச்சிக்கு புள்ளிங்கோவும் ஒரு காரணமாக இருந்தாலும் கூட இருக்கலாம்.

பயங்கரம்... புள்ளிங்கோ ஸ்கூட்டருக்கு மார்க்கெட்டில் கடும் கிராக்கி... சேல்ஸ் தூள் கௌப்புது...

இந்த பட்டியலில் நான்காவது இடத்தை டிவிஎஸ் ஜூபிடர் பிடித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 41,007 டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 69,391 ஜூபிடர் ஸ்கூட்டர்களை டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இது 41 சதவீத வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

பயங்கரம்... புள்ளிங்கோ ஸ்கூட்டருக்கு மார்க்கெட்டில் கடும் கிராக்கி... சேல்ஸ் தூள் கௌப்புது...

இந்த பட்டியலில் 5வது இடத்தை டிவிஎஸ் என்டார்க் பிடித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 20,715 என்டார்க் ஸ்கூட்டர்களை மட்டுமே டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு நவம்பர் மாதம் 27,390 டிவிஎஸ் என்டார்க் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 32 சதவீத வளர்ச்சியாகும்.

பயங்கரம்... புள்ளிங்கோ ஸ்கூட்டருக்கு மார்க்கெட்டில் கடும் கிராக்கி... சேல்ஸ் தூள் கௌப்புது...

கடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனையான ஸ்கூட்டர்களின் பட்டியலில் 6வது இடத்தை ஹீரோ ப்ளஷர் பிடித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் ஹீரோ நிறுவனம் 13,388 ப்ளஷர் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 18,474ஆக உயர்ந்துள்ளது. இது 38 சதவீத வளர்ச்சியாகும்.

பயங்கரம்... புள்ளிங்கோ ஸ்கூட்டருக்கு மார்க்கெட்டில் கடும் கிராக்கி... சேல்ஸ் தூள் கௌப்புது...

இந்த பட்டியலில் டிவிஎஸ் பெப் ப்ளஸ் 7வது இடத்தை பெற்றுள்ளது. நடப்பாண்டு நவம்பர் மாதம் 8,439 பெப் ப்ளஸ் ஸ்கூட்டர்களை மட்டுமே டிவிஎஸ் விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் 8,889 டிவிஎஸ் பெப் ப்ளஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இது 5 சதவீத வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இன்ஸ்டாகிராமில் எங்களை பின்தொடர இங்கே கிளிக் செய்யுங்கள்

பயங்கரம்... புள்ளிங்கோ ஸ்கூட்டருக்கு மார்க்கெட்டில் கடும் கிராக்கி... சேல்ஸ் தூள் கௌப்புது...

இந்த பட்டியலில் ஹோண்டா க்ரேஸியா 8வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் ஹோண்டா நிறுவனம் 6,467 க்ரேஸியா ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பாண்டு நவம்பர் மாதம் 8,167 க்ரேஸியா ஸ்கூட்டர்களை ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது 26 சதவீத வளர்ச்சியாகும்.

பயங்கரம்... புள்ளிங்கோ ஸ்கூட்டருக்கு மார்க்கெட்டில் கடும் கிராக்கி... சேல்ஸ் தூள் கௌப்புது...

இந்த பட்டியலில் 9வது இடத்தை சுஸுகி பர்க்மேன் பிடித்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் சுஸுகி நிறுவனம் 6,960 பர்க்மேன் ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருந்தது. இந்த எண்ணிக்கையானது நடப்பாண்டு நவம்பர் மாதம் 7,824 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் சுஸுகி பர்க்மேன் 12 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

பயங்கரம்... புள்ளிங்கோ ஸ்கூட்டருக்கு மார்க்கெட்டில் கடும் கிராக்கி... சேல்ஸ் தூள் கௌப்புது...

இந்த பட்டியலில் பத்தாவது மற்றும் கடைசி இடத்தை ஹீரோ டெஸ்ட்டினி 125 பிடித்துள்ளது. நடப்பாண்டு நவம்பர் மாதம் ஹீரோ நிறுவனம் 7,744 டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்தாண்டு நவம்பர் மாதம் 16,047 டெஸ்ட்டினி 125 ஸ்கூட்டர்களை ஹீரோ நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இது 52 சதவீத வீழ்ச்சியாகும்.

Most Read Articles
English summary
November 2019: Top 10 Scooters. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X