இந்தியாவில் ரூ.200 கோடியை முதலீடு செய்யும் ஒகினவா நிறுவனம்!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி திறனை அதிகரிக்கும் விதத்தில், ரூ.200 கோடியை ஒகினவா நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்ய இருக்கிறது.

இந்தியாவில் ரூ.200 கோடியை முதலீடு செய்யும் ஒகினவா நிறுவனம்!

ஜப்பானை சேர்ந்த ஒகினவா நிறுவனம் இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மார்க்கெட்டில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. கடந்த 2015ம் ஆண்டு இந்திய மார்க்கெட்டில் நுழைந்த இந் நிறுவனம் இதுவரை ரூ.90 கோடியை முதலீடு செய்து இருக்கிறது.

இந்தியாவில் ரூ.200 கோடியை முதலீடு செய்யும் ஒகினவா நிறுவனம்!

தற்போது ஆண்டுக்கு 1.80 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் திறனை இந்த நிறுவனம் பெற்றிருக்கிறது. பிரெய்ஸ், ரிட்ஜ், ஐ-பிரெய்ஸ், ரிட்ஜ் பிளஸ், பிரெய்ஸ் புரோ ஆகிய 5 மாடல்களை ஒகினவா இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

இந்தியாவில் ரூ.200 கோடியை முதலீடு செய்யும் ஒகினவா நிறுவனம்!

இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலம் பிவாடியில் புதிய ஆலையை திறக்க முடிவு செய்துள்ளது. இதன்மூலமாக ஆண்டுக்கு 10 லட்சம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும் திறனை பெறுவதற்கு திட்டமிட்டுள்ளது. இந்த ஆலைக்காக ரூ.200 கோடியை புதிதாக முதலீடு செய்யவும் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் ரூ.200 கோடியை முதலீடு செய்யும் ஒகினவா நிறுவனம்!

புதிய முதலீடு திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த இருக்கும் ஒகினவா நிறுவனம் இந்தியாவில் 200 நகரங்களில் 350 டீலர்களை பெற்றிருக்கும் இந்நிறுவனம் வரும் 2020ம் ஆண்டில் டீலர்களின் எண்ணிக்கையை 450 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் ரூ.200 கோடியை முதலீடு செய்யும் ஒகினவா நிறுவனம்!

மேலும், அண்மையில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதால், பல புதிய மாடல்களை அறிமுகம் செய்யவும் திட்டமிட்டுள்ளது. ஃபேம்-2 மானியத் திட்டமும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையை ஊக்குவிக்கும் வாய்ப்பு இருப்பதாக அந்நிறுவனம் கருதுகிறது.

இந்தியாவில் ரூ.200 கோடியை முதலீடு செய்யும் ஒகினவா நிறுவனம்!

ஒகினவா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் பிரிமீயம் அம்சங்களுடன் வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. இந்த ஸ்கூட்டர்களில் சென்ட்ரல் லாக்கிங் வசதி, ஆன்ட்டி தெஃப்ட் அலாரம், கீ லெஸ் ஸ்டார்ட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ரிவர்ஸ் மோடு, ஃபைன்டு மை ஸ்கூட்டர் தொெழில்நுட்பம், மொபைல் சார்ஜர் உள்ளிட்டவை இருக்கின்றன.

இந்தியாவில் ரூ.200 கோடியை முதலீடு செய்யும் ஒகினவா நிறுவனம்!

ஒகினவா ஸ்கூட்டர்கள் அதிகபட்சமாக 110 கிமீ தூரம் பயணிக்கும் திறனை பெற்றிருக்கின்றன. இதன் பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 2 முதல் 4 மணிநேரம் பிடிக்கிறது. நகர்ப்புற பயன்பாட்டிற்கு சிறந்த மாடல்களாக பெயர் பெற்றிருக்கின்றன.

Source: ET Auto

Most Read Articles
மேலும்... #ஒகினவா #okinawa
English summary
Okinawa Scooters is looking to increase production of its electric scooters in the Indian market. The electric scooter manufacturer is looking to increase investment by Rs 200 crore in India to ramp up production volume in the country.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X