குறைந்த செலவில் அதிக மைலேஜ் கிடைப்பதற்காக ஸ்கூட்டரில் உரிமையாளர் செய்த காரியம் இதுதான்... வீடியோ

மிகவும் குறைவான செலவில் அதிக மைலேஜ் கிடைக்க வேண்டும் என்பதற்காக உரிமையாளர் ஒருவர் ஸ்கூட்டரில் மாற்றம் செய்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

குறைந்த செலவில் அதிக மைலேஜ் கிடைப்பதற்காக ஸ்கூட்டரில் உரிமையாளர் செய்த காரியம் இதுதான்... வீடியோ

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஒன்று ஹோண்டா ஆக்டிவா. ஹோண்டா நிறுவனம் ஒரு மாதத்திற்கு சராசரியாக 1.60 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆக்டிவா ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இதன்மூலம் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் டூவீலர்களில் ஒன்றாகவும் ஹோண்டா ஆக்டிவா திகழ்கிறது.

குறைந்த செலவில் அதிக மைலேஜ் கிடைப்பதற்காக ஸ்கூட்டரில் உரிமையாளர் செய்த காரியம் இதுதான்... வீடியோ

பெட்ரோலில் இயங்க கூடிய ஆக்டிவா ஸ்கூட்டர், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த நம்பகத்தன்மையை பெற்றுள்ளது. 109 சிசி இன்ஜின்தான் என்றாலும் கூட, ஹோண்டா ஆக்டிவா சிறப்பான பெர்ஃபார்மென்ஸையும் வழங்குகிறது. இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் அட்டகாசமான விற்பனைக்கு இவை மிக முக்கியமான காரணங்களாக பார்க்கப்படுகின்றன.

குறைந்த செலவில் அதிக மைலேஜ் கிடைப்பதற்காக ஸ்கூட்டரில் உரிமையாளர் செய்த காரியம் இதுதான்... வீடியோ

ஆனால் இங்கே ஆச்சரியம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், சிஎன்ஜி மூலம் இயங்கும் ஒரு ஆக்டிவா ஸ்கூட்டரும் அதே அளவிற்கான பெர்ஃபார்மென்ஸை வழங்குகிறது. அத்துடன் மணிக்கு அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தையும் அந்த ஸ்கூட்டர் எட்டுகிறது. இது தொடர்பாக Techno Khan வெளியிட்டுள்ள வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

வழக்கமான ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில், 109.19 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில் 8 பிஎச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்மில் 9 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. 109 கிலோ எடை கொண்ட இந்த ஸ்கூட்டர் ஒரு லிட்டருக்கு 60 கிலோ மீட்டர் மைலேஜை வழங்குகிறது. இது அராய் சான்று அளிக்கப்பட்ட மைலேஜ் ஆகும்.

குறைந்த செலவில் அதிக மைலேஜ் கிடைப்பதற்காக ஸ்கூட்டரில் உரிமையாளர் செய்த காரியம் இதுதான்... வீடியோ

ஹோண்டா ஆக்டிவா 5ஜி ஸ்கூட்டர்தான் லேட்டஸ்ட் ஜெனரேஷன் மாடல் ஆகும். இதன் ஸ்டாண்டர்டு வேரியண்ட்டின் விலை 54,524 ரூபாய் (எக்ஸ் ஷோரூம், டெல்லி). அதே சமயம் டீலக்ஸ் வேரியண்ட்டின் விலை 56,389 ரூபாய். இதுவும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலைதான். சரி விஷயத்திற்கு வருவோம். மேற்கண்ட வீடியோவில் பார்த்த ஸ்கூட்டரின் முன்பக்க ஃப்ளோர் போர்டில், 2 சிலிண்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் சிஎன்ஜி நிரப்பி கொள்ள முடியும்.

குறைந்த செலவில் அதிக மைலேஜ் கிடைப்பதற்காக ஸ்கூட்டரில் உரிமையாளர் செய்த காரியம் இதுதான்... வீடியோ

இந்த ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் உரிமையாளர் தெரிவித்துள்ளதின் அடிப்படையில் பார்த்தால், இந்த சிஎன்ஜி செட் அப் மூலமாக அவருக்கு அதிக மைலேஜ் கிடைக்கிறதாம். இந்த சிஎன்ஜி செட் அப்பை அவரே இன்ஸ்டால் செய்து கொண்டுள்ளார். டாப் ஸ்பீடு என எடுத்து கொண்டால் மணிக்கு 90 கிலோ மீட்டர்கள் வேகம் வரை இது செல்கிறது. சிஎன்ஜி மூலம் இயங்கும் ஒரு ஸ்கூட்டர் இவ்வளவு வேகத்தில் செல்வது சிறப்பான ஒரு விஷயம்தான். அத்துடன் பெட்ரோலில் இயங்கும் வாகனங்களை காட்டிலும் சிஎன்ஜி மூலம் இயங்கும் வாகனங்களை இயக்குவதற்கு ஆகும் செலவும் மிக மிக குறைவே.

குறைந்த செலவில் அதிக மைலேஜ் கிடைப்பதற்காக ஸ்கூட்டரில் உரிமையாளர் செய்த காரியம் இதுதான்... வீடியோ

ஆனால் முன் அனுபவம் இல்லாதவர்கள் தாங்களாகவே சிஎன்ஜி கிட்களை இன்ஸ்டால் செய்து கொள்வது ஆபத்தை உண்டாக்கலாம். அத்துடன் சிஎன்ஜி கிட் இன்ஸ்டால் செய்வதன் மூலமாக புதிய ஸ்கூட்டரை மாடிபிகேஷன் செய்தால், உற்பத்தி நிறுவனம் வழங்கிய வாரண்டி செல்லுபடியற்றதாகி விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Owner Installed CNG Kit In Honda Activa Scooter - Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X