பர்க்மேனுக்கு போட்டியாக அதிக பவருடைய முதல் ஸ்கூட்டரை களமிறக்கும் அப்ரில்லா..? சிசி எவ்வளவு தெரியுமா?

பியாஜியோ நிறுவனம் அப்ரில்லா 160சிசி கொண்ட மேக்ஸி ரக ஸ்கூட்டரை சுஸுகியின் பர்க்மேனுக்கு போட்டியாக இந்தியாவில் களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பர்க்மேனுக்கு போட்டியாக அதிக பவர் கொண்ட முதல் ஸ்கூட்டரை களமிறக்கும் அப்ரில்லா...? இதன் சிசி எவ்வளவு தெரியுமா...?

இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் பைக்குகளுக்கு இணையாக ஸ்கூட்டர்களும் விற்பனையாகி வருகின்றன. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பைக்குகளுக்கு இணையான சிசி கொண்ட ஸ்கூட்டர்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, 125சிசி முதல் 150 சிசி கொண்ட ஸ்கூட்டர்களை இந்திய வாகனச் சந்தையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.

பர்க்மேனுக்கு போட்டியாக அதிக பவர் கொண்ட முதல் ஸ்கூட்டரை களமிறக்கும் அப்ரில்லா...? இதன் சிசி எவ்வளவு தெரியுமா...?

இந்த நிலையில், சுஸுகி நிறுவனம் பர்க்மேன் எனப்படும் 125சிசி கொண்ட மேக்ஸி ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்போது, இந்த ஸ்கூட்டருக்கு போட்டியாக பியாஜியோ நிறுவனம் 160சிசி கொண்ட பவர்ஃபுல் ஸ்கூட்டரை களமிறக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், இந்த மேக்ஸி ரக கூட்டரை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அப்ரில்லா நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஸ்கூட்டரின் தயாரிப்பானது இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, சுஸுகியின் பர்க்மேனுக்கு எதிராக இந்த அதிக சக்தி வாய்ந்த ஸ்கூட்டர்கள் வெகுவிரைவில் களமிறக்கப்பட உள்ளன.

பர்க்மேனுக்கு போட்டியாக அதிக பவர் கொண்ட முதல் ஸ்கூட்டரை களமிறக்கும் அப்ரில்லா...? இதன் சிசி எவ்வளவு தெரியுமா...?

மேக்ஸி ஸ்டைலில் விற்பனையாகி வரும் சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் வெளிநாடுகளில் 125சிசி முதல் 600சிசி வரையிலான எஞ்ஜின் சக்தியுடன் விற்பனையாகி வருகின்றது. ஆனால், இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் 125சிசி-இல் மட்டுமே விற்பனையாகி வருகிறது. சுஸுகியின் அக்செஸ் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள அதே எஞ்ஜின் தான் இந்த ஸ்கூட்டரிலும் பொருத்தப்பட்டுள்ளது. இது, 8.5 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

பர்க்மேனுக்கு போட்டியாக அதிக பவர் கொண்ட முதல் ஸ்கூட்டரை களமிறக்கும் அப்ரில்லா...? இதன் சிசி எவ்வளவு தெரியுமா...?

இந்த ஸ்கூட்டரின் பிரத்யேகமான வடிவமானது ஸ்டைல் லுக்கை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் அகலமான முன்புறம் வித்தியாசமான வடிவத்தைக் கொண்டுள்ளது. இதே ஸ்டைலை தான் அப்ரில்லா நிறுவனமும் தனது மேக்ஸி ரக ஸ்கூட்டரில் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த வடிவம் வாகனத்தை வேகமாக இயக்க ஏதுவாக இருக்கும். மேலும், இந்த ஸ்கூட்டர்கள் மூலம் பைக்குகளைப்போன்று தொலைதூர பயணத்தையும் மேற்கொள்ள முடியும்.

பர்க்மேனுக்கு போட்டியாக அதிக பவர் கொண்ட முதல் ஸ்கூட்டரை களமிறக்கும் அப்ரில்லா...? இதன் சிசி எவ்வளவு தெரியுமா...?

அப்ரில்லாவின் 160சிசி மேக்ஸி ஸ்கூட்டரானது, முழுக்க முழுக்க இத்தாலி டிசைனில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, உள் கட்டுமானங்கள் இந்திய பொறியியல் தொழில்நுட்பத்தைக் கொண்ட உருவாக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஒட்டுமொத்தமாக இதன் ஸ்டைல், வாகனத்தின் சேஸிஸ் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவை இத்தாலியின் தொழில்நுட்பத்தைக் கொண்டுதான் வடிவமைக்கப்பட உள்ளது.

பர்க்மேனுக்கு போட்டியாக அதிக பவர் கொண்ட முதல் ஸ்கூட்டரை களமிறக்கும் அப்ரில்லா...? இதன் சிசி எவ்வளவு தெரியுமா...?

இத்தாலியில் இந்த வாகனம் தயாரிக்கப்பட்டாலும், 90 சதவீதம் இந்திய வாகன ஓட்டிகளின் ரசனைக்கு ஏற்பவாறு இந்த ஸ்கூட்டரை வடிவமைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆகையால், இந்த ஸ்கூட்டரில் எம்பி3 பிளேயர் உள்ளிட்ட சில சிறப்பம்சங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பர்க்மேனுக்கு போட்டியாக அதிக பவர் கொண்ட முதல் ஸ்கூட்டரை களமிறக்கும் அப்ரில்லா...? இதன் சிசி எவ்வளவு தெரியுமா...?

மேலும், இந்த மேக்ஸி ரக ஸ்கூட்டரின் எஞ்ஜினானது, அப்ரில்லாவின் எஸ்ஆர்15 ஸ்கூட்டரில் பொருத்தப்பட்ட அதே கியர் பாக்ஸ் கொண்ட 155சிசி சிங்கிள்-சிலிண்டர் எஞ்ஜின் தான் பொருத்தப்பட உள்ளது. மேலும், இதனை பாரத்-VI தரத்திற்கு ஏற்ப ட்யூன்-அப் செய்யப்பட்டு அதில் பொருத்தப்பட உள்ளது.

பர்க்மேனுக்கு போட்டியாக அதிக பவர் கொண்ட முதல் ஸ்கூட்டரை களமிறக்கும் அப்ரில்லா...? இதன் சிசி எவ்வளவு தெரியுமா...?

பியாஜியோவின் அப்ரில்லாவைப் போன்றே, மற்றுமொரு வாகனத் தயாரிப்பு நிறுவனமான யமஹாவும் மேக்ஸி ரக ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. என்-மேக்ஸ் என அழைக்கப்படும் அந்த ஸ்கூட்டர் 150சிசி கொண்ட லிக்யூடு கூல்ட் மோட்டாருடன் சாலையை களக்க வருகின்றது. மேலும், இந்த ஸ்கூட்டரை ஆர்15 பைக்கை போன்று ஸ்போர்டி லுக்கில் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Most Read Articles
மேலும்... #அப்ரில்லா #aprilia
English summary
Piaggio Aprilia 160CC Maxi Scooter Coming Soon. Read In Tamil.
Story first published: Thursday, March 14, 2019, 16:33 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X