Just In
- 1 hr ago இந்தியாவின் முதல் தங்க நிறம் கொண்ட ஸ்கார்பியோ!.. இந்த கலரும் அதுக்கு செம்ம எடுப்பா இருக்கு!
- 2 hrs ago மிக மிக காஸ்ட்லியான காரை வாங்கிய யுட்யூபர்! சீக்கிரமே வேலைய விட்டுட்டு யுட்யூப் சேனல ஆரம்பிச்சுட வேண்டியதுதான்
- 7 hrs ago 31 கிமீ மைலேஜை வாரி வழங்கும் டொயோட்டா காரின் விலை இவ்ளோதானா! மாருதி கூட சேந்து பெரிய சம்பவத்த பண்ணீட்டாங்க!
- 10 hrs ago 15 நிமிடத்தில் சார்ஜ் ஏறிவிடும் எலெக்ட்ரிக் ஆட்டோ அறிமுகம்! முழு விபர வீடியோ!
Don't Miss!
- News இனி பிரச்சனையே இல்லை.. தமிழ்நாடு முழுக்க மின் இணைப்பு முறையில் மாற்றம்.. குஷியான செய்தி
- Technology நாளைக்கு லான்ச் ஆகும் இந்த Realme போனுக்கு பல பேர் வெயிட்டிங்.. எந்த மாடல்? என்ன விலை?
- Lifestyle வார ராசிபலன் 14 April 2024 To 20 April 2024 - சித்திரை முதல் வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கபோகுது..
- Sports PBKS vs RR : இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவில்லை.. அந்த தவறை செய்திருக்க கூடாது.. சாம் கரண் சோகம்!
- Education மாணவர்கள் குஷி...சென்னை பல்கலை.யில்ஏப்.15 முதல் முதுகலை படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்...!!
- Finance பில்லியனர் பட்டியலில் இருந்து தூக்கியெறியப்பட்ட டொனால்டு டிரம்ப்..!
- Movies Sivakarthikeyan: அமரன் படத்தின் சூட்டிங்.. சிவகார்த்திகேயனுக்கு நோ சொன்ன ஏஆர் முருகதாஸ்!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
பர்க்மேனுக்கு போட்டியாக அதிக பவருடைய முதல் ஸ்கூட்டரை களமிறக்கும் அப்ரில்லா..? சிசி எவ்வளவு தெரியுமா?
பியாஜியோ நிறுவனம் அப்ரில்லா 160சிசி கொண்ட மேக்ஸி ரக ஸ்கூட்டரை சுஸுகியின் பர்க்மேனுக்கு போட்டியாக இந்தியாவில் களமிறக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய இருசக்கர வாகனச் சந்தையில் பைக்குகளுக்கு இணையாக ஸ்கூட்டர்களும் விற்பனையாகி வருகின்றன. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பைக்குகளுக்கு இணையான சிசி கொண்ட ஸ்கூட்டர்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி, 125சிசி முதல் 150 சிசி கொண்ட ஸ்கூட்டர்களை இந்திய வாகனச் சந்தையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அறிமுகம் செய்து வருகின்றன.
இந்த நிலையில், சுஸுகி நிறுவனம் பர்க்மேன் எனப்படும் 125சிசி கொண்ட மேக்ஸி ஸ்கூட்டரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. தற்போது, இந்த ஸ்கூட்டருக்கு போட்டியாக பியாஜியோ நிறுவனம் 160சிசி கொண்ட பவர்ஃபுல் ஸ்கூட்டரை களமிறக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், இந்த மேக்ஸி ரக கூட்டரை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அப்ரில்லா நிறுவனம் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த ஸ்கூட்டரின் தயாரிப்பானது இறுதி கட்டத்தை எட்டியிருப்பதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, சுஸுகியின் பர்க்மேனுக்கு எதிராக இந்த அதிக சக்தி வாய்ந்த ஸ்கூட்டர்கள் வெகுவிரைவில் களமிறக்கப்பட உள்ளன.
மேக்ஸி ஸ்டைலில் விற்பனையாகி வரும் சுஸுகி பர்க்மேன் ஸ்கூட்டர் வெளிநாடுகளில் 125சிசி முதல் 600சிசி வரையிலான எஞ்ஜின் சக்தியுடன் விற்பனையாகி வருகின்றது. ஆனால், இந்த ஸ்கூட்டர் இந்தியாவில் 125சிசி-இல் மட்டுமே விற்பனையாகி வருகிறது. சுஸுகியின் அக்செஸ் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள அதே எஞ்ஜின் தான் இந்த ஸ்கூட்டரிலும் பொருத்தப்பட்டுள்ளது. இது, 8.5 பிஎச்பி பவரையும், 10.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.
இந்த ஸ்கூட்டரின் பிரத்யேகமான வடிவமானது ஸ்டைல் லுக்கை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் அகலமான முன்புறம் வித்தியாசமான வடிவத்தைக் கொண்டுள்ளது. இதே ஸ்டைலை தான் அப்ரில்லா நிறுவனமும் தனது மேக்ஸி ரக ஸ்கூட்டரில் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த வடிவம் வாகனத்தை வேகமாக இயக்க ஏதுவாக இருக்கும். மேலும், இந்த ஸ்கூட்டர்கள் மூலம் பைக்குகளைப்போன்று தொலைதூர பயணத்தையும் மேற்கொள்ள முடியும்.
அப்ரில்லாவின் 160சிசி மேக்ஸி ஸ்கூட்டரானது, முழுக்க முழுக்க இத்தாலி டிசைனில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, உள் கட்டுமானங்கள் இந்திய பொறியியல் தொழில்நுட்பத்தைக் கொண்ட உருவாக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஒட்டுமொத்தமாக இதன் ஸ்டைல், வாகனத்தின் சேஸிஸ் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவை இத்தாலியின் தொழில்நுட்பத்தைக் கொண்டுதான் வடிவமைக்கப்பட உள்ளது.
இத்தாலியில் இந்த வாகனம் தயாரிக்கப்பட்டாலும், 90 சதவீதம் இந்திய வாகன ஓட்டிகளின் ரசனைக்கு ஏற்பவாறு இந்த ஸ்கூட்டரை வடிவமைக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆகையால், இந்த ஸ்கூட்டரில் எம்பி3 பிளேயர் உள்ளிட்ட சில சிறப்பம்சங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்த மேக்ஸி ரக ஸ்கூட்டரின் எஞ்ஜினானது, அப்ரில்லாவின் எஸ்ஆர்15 ஸ்கூட்டரில் பொருத்தப்பட்ட அதே கியர் பாக்ஸ் கொண்ட 155சிசி சிங்கிள்-சிலிண்டர் எஞ்ஜின் தான் பொருத்தப்பட உள்ளது. மேலும், இதனை பாரத்-VI தரத்திற்கு ஏற்ப ட்யூன்-அப் செய்யப்பட்டு அதில் பொருத்தப்பட உள்ளது.
பியாஜியோவின் அப்ரில்லாவைப் போன்றே, மற்றுமொரு வாகனத் தயாரிப்பு நிறுவனமான யமஹாவும் மேக்ஸி ரக ஸ்கூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. என்-மேக்ஸ் என அழைக்கப்படும் அந்த ஸ்கூட்டர் 150சிசி கொண்ட லிக்யூடு கூல்ட் மோட்டாருடன் சாலையை களக்க வருகின்றது. மேலும், இந்த ஸ்கூட்டரை ஆர்15 பைக்கை போன்று ஸ்போர்டி லுக்கில் தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அரபு நாடுகளின் அடி மடியிலேயே கை வைத்த டாடா! இததான் இந்தியாவே எதிர்பாத்துச்சு! சினிமாவை விஞ்சும் மாஸ் சம்பவம்!
-
எல்லா பக்கமும் கருப்பு மட்டும் தான்! இப்படியொரு காரை ரோட்டுக்கு கொண்டு போனால் எல்லார் பார்வையும் உங்க மேல தான்
-
அடுத்த வாரத்தின் முதல் வேலை நாளுக்காக நிறைய பேரு காத்திருக்காங்க! அதுல நீங்களும் ஒருத்தரா!