ராயல் என்பீல்டை முற்றிலுமாக ஒழித்துகட்ட திட்டம்... பியாஜியோ அதிரடி..!

ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு இந்தியாவில் நிலவி வரும் எதிர்பார்ப்பை முற்றிலும் தன் வசம் கவர்ந்திழுக்கின்ற வகையிலான முயற்சியில் பியாஜியோ நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ராயல் என்பீல்டை முற்றிலுமாக ஒழித்துகட்ட திட்டம்... பியாஜியோ அதிரடி..!

இந்தியாவின் இருசக்கர வாகன உலகில் ஜாம்பவானாக திகழ்ந்து வரும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தைப் போன்றே இத்தாலியில் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது பியாஜியோ.

இந்நிறுவனம், இந்தியாவில் வெஸ்பா மற்றும் அப்ரில்லா ஆகிய இரு பிராண்டுகளில் டூ வீலர்களை விற்பனைச் செய்து வருகின்றது.

ராயல் என்பீல்டை முற்றிலுமாக ஒழித்துகட்ட திட்டம்... பியாஜியோ அதிரடி..!

இந்நிலையில், ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு இந்தியாவில் நிலவி வரும் சிறப்பான எதிர்பார்ப்பை தன் வசம் கவரும் விதமாக, நடுத்தர எடையுள்ள பைக்குகளை சந்தையில் அறிமுகம் செய்வதற்காக திட்டமிட்டு வருகின்றது.

இதற்காக, அந்நிறுவனம் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்கின்ற வகையிலான நடுத்தர எடையுள்ள இருசக்கர வாகனத்தை உற்பத்தி செய்வதற்கான பணியில் களமிறங்கியுள்ளது.

ராயல் என்பீல்டை முற்றிலுமாக ஒழித்துகட்ட திட்டம்... பியாஜியோ அதிரடி..!

முன்னதாக, இந்நிறுவனம் 150சிசி வரிசையில் புதிய பைக்கை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், தற்போது இந்தியாவில் 250சிசி முதல் 350சிசி ரேஞ்சிலான இருசக்கர வாகனங்களுக்கு நிலவி வரவேற்பை அறிந்த அந்நிறுவனம், தனது எண்ணத்தை மாற்றிக் கொண்டு சந்தையின் தேவைக்கேற்ப செயல்பட இருப்பதாக கூறியிருக்கின்றது.

ராயல் என்பீல்டை முற்றிலுமாக ஒழித்துகட்ட திட்டம்... பியாஜியோ அதிரடி..!

இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கிராஃபி கூறியதாவது, "இந்தியாவில் நிலவும் மோட்டார்சைக்கிள்களுக்கான அளவுகடந்த எதிர்பார்ப்பை நாங்கள் அறிவோம். இது இயற்கையானது. இந்த போட்டியில் நிச்சயம் பியாஜியோ வெற்றிப் பெறும் என நாங்கள் ஆணித்தரமாக நம்புகின்றோம்" என்றார்.

ராயல் என்பீல்டை முற்றிலுமாக ஒழித்துகட்ட திட்டம்... பியாஜியோ அதிரடி..!

கடந்த நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 7,73,855 யூனிட் 250சிசி பைக்குகள் விற்பனையாகி இருந்தன. இதில், பெரும்பாலும் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இருசக்கர வாகனங்களாகும். அந்தவகையில், 7,64,012 யூனிட்டுகள் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளாகவே இருக்கின்றன. இது, ஒட்டு மொத்த விற்பனையில் 99 சதவீதம் ஆகும்.

இதன்காரணமாகவே, பியாஜியோ தற்போது தன் கவனத்தை 250சிசி முதல் 350சிசி வரையிலான வாகனங்கள்மீது திருப்பியுள்ளது.

ராயல் என்பீல்டை முற்றிலுமாக ஒழித்துகட்ட திட்டம்... பியாஜியோ அதிரடி..!

இதற்காக, தற்போது இந்தியாவில் நிலவும் எதிர்பார்ப்புகள் குறித்த ஆய்வுகளை அந்நிறுவனம் மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது. எனவே, பியாஜியோ புதிய நடுத்தர எடையுள்ள வாகனத்தை அறிமுகம் செய்ய சற்று நேரம் எடுத்துக் கொள்ளலாம் என தெரிகின்றது.

MOST READ: 3 மாத இழுத்தடிப்பிற்கு பின் மத்திய அரசிடம் அடிபணிந்த பஞ்சாப்.. பொதுமக்களுக்கு வச்சிட்டாங்கள்ல ஆப்பு!

ராயல் என்பீல்டை முற்றிலுமாக ஒழித்துகட்ட திட்டம்... பியாஜியோ அதிரடி..!

அதேசமயம், இந்நிறுவனத்திடம் இந்தியாவிற்கான வாகனம் குறித்த திட்டம் ஏற்கனவே இருப்பதாக தகவல்கள் கூறியிருக்கின்றது.

இதுமட்டுமின்றி, வெஸ்பா பிராண்டில் கூடுதல் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணியிலும் அந்நிறுவனம் தீவிரம் காட்டி வருவதாக கூறப்படுகின்றது. மேலும், வருகின்ற ஜூன் மாதம் அந்த புதிய ஸ்கூட்டரை அறிமுகம் செய்யும் வகையில் அந்த பணியை தற்போது தீவிரப்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

MOST READ: 5 லட்சத்திற்கும் அதிகமான விற்பனை.. மாருதி எர்டிகாவை இந்தியர்கள் இவ்வளவு விரும்ப காரணம் என்ன தெரியுமா?

ராயல் என்பீல்டை முற்றிலுமாக ஒழித்துகட்ட திட்டம்... பியாஜியோ அதிரடி..!

இந்தியாவில் விற்பனையாகும் இருசக்கர வாகனங்கள் பற்றிய தகவலை அண்மையில் சியாம் அமைப்பு வெளியிட்டது. அதில், இந்தியா கடந்தாண்டைக் காட்டிலும் 15.74 சதவீத விற்பனை வீழ்ச்சியைப் பெற்றிருக்கின்றது. நடப்பாண்டு ஏப்ரல் மாதம் வரை 1.29 கோடி இருசக்கர வாகனங்கள் மட்டுமே ஒட்டுமொத்தமாக விற்பனையாகி இருக்கின்றன.

MOST READ: வாடகை கார் ஓட்டுனர்களின் வயிற்றில் பால் வார்த்த அமைச்சர் நிதின் கட்காரி!

ராயல் என்பீல்டை முற்றிலுமாக ஒழித்துகட்ட திட்டம்... பியாஜியோ அதிரடி..!

இது வெளியிட்ட தகவலின்படி, வெஸ்பா மற்றும் அப்ரில்லா பிராண்டுகளில் விற்பனையாகும் இருசக்கர வாகனங்கள் ஒட்டுமொத்தமாக 16.86 சதவீத விற்பனை வீழ்ச்சியைப் பெற்றிருக்கின்றது. மேலும், இது ஒட்டுமொத்தமாக 48,471 யூனிட்டுகளை மட்டுமே விற்பனைச் செய்துள்ளது.

பியாஜியோ நிறுவனம், இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி மூன்று சக்கர வாகனங்களையும் விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகின்றது.

ராயல் என்பீல்டை முற்றிலுமாக ஒழித்துகட்ட திட்டம்... பியாஜியோ அதிரடி..!

அந்தவகையில், வருகின்ற 2020 ஏப்ரல் மாதத்தில் இருந்து புதிதாக நடைமுறைக்கு வரவிருக்கின்ற மாசு உமிழ்வு விதிக்கு ஏற்ப பிஎஸ்-6, எல்பிஜி/சிஎன்ஜி மற்றும் மின்சார ஆட்டோக்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகின்றது.

ராயல் என்பீல்டை முற்றிலுமாக ஒழித்துகட்ட திட்டம்... பியாஜியோ அதிரடி..!

அண்மையில் கூட பேட்டரியால் இயங்கக்கூடிய எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்சாவை அது அறிமுகம் செய்தது. இது ஒரு முழுமையான சார்ஜில் 70 கிமீ முதல் 80 தூரம் வரை செல்லக்கூடியதாகும். இந்த ஆட்டோகுறித்து மேலும் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.

ராயல் என்பீல்டை முற்றிலுமாக ஒழித்துகட்ட திட்டம்... பியாஜியோ அதிரடி..!

இந்த ஆட்டோவின் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக சன் மொபிலிட்டி என்ற நிறுவனத்துடன் கூட்டணி வைத்துள்ளது பியாஜியோ. இது பியாஜியோ மின்சார ஆட்டோக்களுக்கு தேவையான ஸ்வேப்பபிள் பேட்டரி நிலையங்களை நாட்டின் முக்கிய நகரங்களில் நிறுவ உதவும்.

Most Read Articles

மேலும்... #பியாஜியோ #piaggio
English summary
Piaggio Plans To Enter Middleweight Motorcycle Segment: Wants Piece Of RE’s Market Share. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X