எலெக்ட்ரிக் பைக்கின் வேகத்தை மிஞ்சும் ஸ்மார்ட் பைக்... டீசர் பிக் வெளியீடு!

பைக்கின் வேகத்திற்கு இணையாக செல்லும் பெடல் அசிஸ்டண்ட் திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்மார்ட் பைக்கின் டீசர் பிக் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

எலெக்ட்ரிக் பைக்கின் வேகத்தை மிஞ்சும் ஸ்மார்ட் பைக்... டீசர் பிக் வெளியீடு!

புனேவைச் சேர்ந்த ஸ்மார்ட் பைக் தயாரிப்பு நிறுவனமான போலாரிட்டி, அதன் அப்கமிங் எலக்ட்ரிக் ஸ்மார்ட் பைக்குறித்த டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட் பைக்குகள், எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு இணையான வேகத்தில் செல்லக்கூடியது என கூறப்படுகின்றது. அந்தவகையில், அவை மணிக்கு 100 கிமீ செல்லக்கூடிய திறனைப் பெற்றிருக்கின்றன.

எலெக்ட்ரிக் பைக்கின் வேகத்தை மிஞ்சும் ஸ்மார்ட் பைக்... டீசர் பிக் வெளியீடு!

போலாரிட்டி நிறுவனம், ஒட்டுமொத்தமாக ஆறு எலெக்ட்ரிக் ஸ்மார்ட் பைக்குகளை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இவையனைத்தும், வரும் மாதங்களில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேசமயம், இந்நிறுவனத்தின்மூலம் சாலைக்கு வரும் முதல் வாகனங்களாக இவை இருக்கின்றன.

எலெக்ட்ரிக் பைக்கின் வேகத்தை மிஞ்சும் ஸ்மார்ட் பைக்... டீசர் பிக் வெளியீடு!

இந்த எலெக்ட்ரிக் ரக பெடல் அசிஸ்டண்ட் ஸ்மார்ட் பைக்குகளை, போலாரிட்டி நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டில் இருந்து தயாரித்து வருகின்றது. ஆகையால், இந்த ஸ்மார்ட் இ-பைக் மீது இளைஞர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

இதற்கு ஸ்மார்ட் எலெக்ட்ரிக் பைக்கின் சிறப்பம்சங்களும் ஓர் முக்கிய காரணமாகும். இதனை உறுதிப்படுத்தும் வகையில், டீசர் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

எலெக்ட்ரிக் பைக்கின் வேகத்தை மிஞ்சும் ஸ்மார்ட் பைக்... டீசர் பிக் வெளியீடு!

தற்போது, வெளியாகியிருக்கும் டீசர் படங்கள் அனைத்தும், பெடல் அசிஸ்டண்ட் ஸ்மார்ட் பைக்குகளின் முழுத்தோற்றத்தையும் வெளிப்படுத்தும் வகையில், இல்லையென்பது வருத்தத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இருப்பினம், அவை மிக விரைவில் அறிமுகமாக இருப்பதாக வெளியாகியுள்ள தகவல், அதனை சற்றே குறைக்கும் வகையில் உள்ளது.

எலெக்ட்ரிக் பைக்கின் வேகத்தை மிஞ்சும் ஸ்மார்ட் பைக்... டீசர் பிக் வெளியீடு!

இந்த ஸ்மார்ட் எலெக்ட்ரிக் பைக் மிகவும் இலகுவான எடைக் கொண்டதாக தயாரிக்கப்பட்டு வருகின்றது. ஆகையால், இதனை கையாள்வது மிக எளிதாக இருக்கும் என கூறப்படுகின்றது. அதேசமயம், இது நகர பயன்பாட்டை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட இருப்பதால், டிராஃபிக்கில் மிக சுலபமாக செல்லும்வகையில் தோற்றத்தைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எலெக்ட்ரிக் பைக்கின் வேகத்தை மிஞ்சும் ஸ்மார்ட் பைக்... டீசர் பிக் வெளியீடு!

மேலும், இந்த ஸ்மார்ட் பைக்குகளின் அறிமுகத்தை அடுத்து ரூ. 1,001 என்ற மிகக் குறைந்த விலையில் புக்கிங் செய்யப்பட இருப்பதாக போலாரிட்டி நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த பணத்தை ரீஃபண்டபிள் முறையில் பெற இருப்பதாக அது தெரிவித்துள்ளது. ஒரு வேலை போலாரிட்டி ஸ்மார்ட் பைக்கை வாங்க விருப்பமில்லை என்றால், முன் தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும்.

எலெக்ட்ரிக் பைக்கின் வேகத்தை மிஞ்சும் ஸ்மார்ட் பைக்... டீசர் பிக் வெளியீடு!

இந்த எலெக்ட்ரிக் பைக்குகள் எஸ்1கே, எஸ்2கே, எஸ்3கே, இ1கே, இ2கே மற்றும் இ3கே ஆகிய துணைப் பெயர்களில் களமிறங்க உள்ளன. எஸ் பிரிவில் களமிறங்கும் ஸ்மார்ட் பைக்கில் எஸ்3கே டாப் வேரியண்டாகவும், இ பிரிவில் களமிறங்கும் ஸ்மார்ட் பைக்கில் இ3கே மாடல் டாப் வேரியண்டாகவும் களமிறங்க இருக்கின்றது.

எலெக்ட்ரிக் பைக்கின் வேகத்தை மிஞ்சும் ஸ்மார்ட் பைக்... டீசர் பிக் வெளியீடு!

இந்த ஸ்மார்ட் பைக்குகளை இயக்குவதற்காக 1-3 kW திறன் கொண்ட ஹப்-டைப் பிரஸ்லெஸ் மின் மோட்டார் பொருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது லித்தியம் அயன் பேட்டரி மூலம் சக்தியைப் பெற்று இயங்கும். இந்த பேட்டரி கழட்டி மாட்டிக் கொள்ளும் வகையில் இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

எலெக்ட்ரிக் பைக்கின் வேகத்தை மிஞ்சும் ஸ்மார்ட் பைக்... டீசர் பிக் வெளியீடு!

இந்த பேட்டரிகள், சைக்கிளின் ஃபிரேமிக்கு பொருத்தப்பட ள்ளது. இதனை, தேவைக்கேற்ப கழட்டி சார்ஜ் செய்து பின்னர் அதனுள்ளயே பொருத்திக்கொள்ளலாம். மேலும், இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 80 கிமீ தூரம் வரை பயணிப்பதற்கான திறனை வழங்கும்.

எலெக்ட்ரிக் பைக்கின் வேகத்தை மிஞ்சும் ஸ்மார்ட் பைக்... டீசர் பிக் வெளியீடு!

இந்த, இ-மிதிவண்டியில் சௌகரியமான பயணத்தை வழங்கும் வகையில் சஸ்பென்ஷன் அமைப்புகள் இடம்பெற உள்ளன. இத்துடன் முன் மற்றும் பின் பக்க வீலில் க்னாப்பி டிஸ்க் பிரேக் வழங்கப்பட உள்ளது. மேலும், கரடு முரடான சாலையில் பயணிப்பதற்கு ஏற்ப க்னாப்பி டயர்கள் நிறுவப்பட உள்ளன.

எலெக்ட்ரிக் பைக்கின் வேகத்தை மிஞ்சும் ஸ்மார்ட் பைக்... டீசர் பிக் வெளியீடு!

மேலும், பாதுகாப்பு வசதியாக டிஸ்க் பிரேக்குகள் இந்த சைக்கிளின் இரு வீலிலும் பொருத்தப்பட உள்ளன. இந்த சைக்கிளில் குறிப்பாக எல்இடி மின் விளக்குகள் முன் மற்றும் பின் பக்கங்களில் பொருத்தப்பட்டுள்ளது. இத்துடன் சால சிறந்த வசதியாக இன்டிகேட்டர்களும் எல்இடி தரத்தில் வழங்கப்பட்டுள்ளன.

எலெக்ட்ரிக் பைக்கின் வேகத்தை மிஞ்சும் ஸ்மார்ட் பைக்... டீசர் பிக் வெளியீடு!

மேலும், நவீன தொழில்நுட்ப வசதிகளாக டிஜிட்டல் ஸ்கிரீன், ஸ்விட்ச் கியர், எல்இடி மின்விளக்கு உள்ளிட்ட வசதிகள் கூடுதலாக நிறுவப்பட உள்ளது. இதன் விலை மற்ற தகவல் கூடிய விரைவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
English summary
Polarity Smart Bikes Teases Electric Bike Range That Can Clock 100km/h. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X