அதிரடியாக 6 எலெக்ட்ரிக் பைக்குகளை அறிமுகப்படுத்தும் போலரிட்டி!

அதிரடியாக 6 புதிய எலெக்ட்ரிக் பைக்குகளை இந்த மாதமே அறிமுகம் செய்ய இருக்கிறது போலரிட்டி எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனம். கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அதிரடியாக 6 எலெக்ட்ரிக் பைக்குகளை அறிமுகப்படுத்தும் போலரிட்டி!

மஹாராஷ்டிர மாநிலம் புனே நகரை தலைமையிடமாக கொண்டு துவங்கப்பட்ட போலரிட்டி நிறுவனம் எலெக்ட்ரிக் பைக் உருவாக்கப் பணிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது. அண்மையில் இந்த நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் பைக் மாடலானது சோதனை ஓட்டத்தில் வைக்கப்பட்ட படங்கள் இணையதளங்களில் வெளியாகின.

அதிரடியாக 6 எலெக்ட்ரிக் பைக்குகளை அறிமுகப்படுத்தும் போலரிட்டி!

இந்த நிலையில், இந்த மாதத்திற்குள் 6 புதிய எலெக்ட்ரிக் பைக் மாடல்களை இந்த நிறுவனம் இந்த மாதமே அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது. இந்த புதிய மாடல்களில் லித்தியம் அயான் பேட்டரி மற்றும் ஒன்று முதல் 3 kW திறன் கொண்ட மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கும்.

அதிரடியாக 6 எலெக்ட்ரிக் பைக்குகளை அறிமுகப்படுத்தும் போலரிட்டி!

போலரிட்டி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக் மாடல்கள் ஸ்போர்ட் மற்றும் எக்ஸிகியூட்டிவ் என்ற இரண்டு ரகத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்படும். ஸ்போர்ட் குடும்ப வரிசையில் S1K, S2K மற்றும் S3K ஆகிய மாடல்களும், எக்ஸிகியூட்டிவ் வரிசையில் E1K, E2K மற்றும் E3K ஆகிய பெயர்களிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

அதிரடியாக 6 எலெக்ட்ரிக் பைக்குகளை அறிமுகப்படுத்தும் போலரிட்டி!

எலெக்ட்ரிக் பைக் மாடல்கள் என்றாலே, பேட்டரி சார்ஜ் தீர்ந்து போகும் பிரச்னை என்பதுதான் அச்சமூட்டும் விஷயமாக இருக்கிறது. இதற்கு தீர்வாக, பெடல் மூலமாக அதிவேகமாக இந்த பைக்குகளை இயக்கும் வாய்ப்பும் கொடுக்கப்பட இருப்பது இதன் முக்கிய அம்சமாக இருக்கும். அதாவது, சைக்கிள் போல மிதித்துக் கொண்டும் செல்ல முடியும்.

அதிரடியாக 6 எலெக்ட்ரிக் பைக்குகளை அறிமுகப்படுத்தும் போலரிட்டி!

போலரிட்டி எலெக்ட்ரிக் பைக் மாடல்கள் மணிக்கு 100 கிமீ வேகம் வரை தொடும் திறனை பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, நகர்ப்புற பயன்பாடு மட்டுமின்றி, நெடுஞ்சாலைகளில் பயன்படுத்துவதற்கும் ஏதுவானதாக இருக்கும்.

MOST READ: தமிழக அரசு பஸ்கள் அதிரடியாக மாறுகின்றன.. டிரைவர், கண்டக்டர்களுக்கு சூப்பர் உத்தரவு.. என்ன தெரியுமா?

அதிரடியாக 6 எலெக்ட்ரிக் பைக்குகளை அறிமுகப்படுத்தும் போலரிட்டி!

இந்த பைக்குகள் ஒற்றை இருக்கை அமைப்புடன் வர இருக்கின்றன. இந்த பைக்குகளில் மோனோ ஷாக் அப்சார்பர் பயன்படுத்தப்படு இருப்பதுடன், அட்ஜெஸ்ட் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கும்.

MOST READ: ஆட்டோ டிரைவர்களை வேட்டையாட அதிகாரிகள் மாறுவேடம்... மக்களின் உச்சகட்ட மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்

அதிரடியாக 6 எலெக்ட்ரிக் பைக்குகளை அறிமுகப்படுத்தும் போலரிட்டி!

இந்த பைக்குகளின் ஃப்ரேமிலேயே லித்தியம் அயான் பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கும். இதன் டர்ன் இண்டிகேட்டர்கள் மிகவும் கச்சிதமாகவும், கேடிஎம் பைக்குகளை நினைவூட்டுவது போலவும் இருக்கிறது.

MOST READ: உங்கள் பாதுகாப்பிற்கான சிறந்த கார் இதுதான்... எமனால் கூட சீண்ட முடியாது...

அதிரடியாக 6 எலெக்ட்ரிக் பைக்குகளை அறிமுகப்படுத்தும் போலரிட்டி!

போலரிட்டி எலெக்ட்ரிக் பைக்குகளுக்கு நேரடி போட்டியாளர்கள் இப்போது இல்லை. இந்த பைக்குகள் கான்செப்ட்டிலிருந்து தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த பைக்குகளுக்கு ரூ.1001 முன்பணத்துடன் ஆன்லைனில் முன்பதிவு ஏற்கப்படுகிறது. முன்பணத்தை திரும்ப பெறும் வாய்ப்பும் உள்ளது.

Most Read Articles

மேலும்... #போலரிட்டி
English summary
Pune based electric bike maker, Polarity will unveil six models this month.
Story first published: Tuesday, August 13, 2019, 19:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X