ஹேர் ஸ்டைலை மாற்றுவதைப் போல் தனது உருவத்தை மாற்றிக் கொண்ட பஜாஜ் பல்சர் 180 - வீடியோ!

பஜாஜ் நிறுவனத்தின் பல்சர் 180 பைக் ஹாட் கஃபே ரேஸர் பைக்காக மாறியுள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

ஹேர் ஸ்டைலை மாற்றுவதைப் போல் தனது ஸ்டைலை மாற்றிக் கொண்ட பஜாஜ் பல்சர் 180 - வீடியோ!

வெளிநாடுகளில் காணப்படும் கலாச்சாரமான வாகன மாடிஃபிகேஷன், அண்மைக் காலங்களாக இந்தியாவிலும் பெருகி வருகின்றது. அந்தவகையில், நாள்தோறும் இந்தியாவில் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.

அவ்வாறு, சமீபத்தில்கூட ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ரெட்ரோ கிளாசிக் ரகத்திலான கான்டினென்டல் ஜிடி 650 பைக், கஃபே ரேசர் ஸ்டைலில் மாடிஃபை செய்ததுகுறித்த தகவலைப் பார்த்தோம்.

ஹேர் ஸ்டைலை மாற்றுவதைப் போல் தனது ஸ்டைலை மாற்றிக் கொண்ட பஜாஜ் பல்சர் 180 - வீடியோ!

இந்நிலையில், பஜாஜ் நிறுவனத்தின் புகழ்வாய்ந்த பைக்குகளில் ஒன்றான பல்சர் பைக்கும், அத்தகையிலான மாடிஃபிகேஷனுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோவினை புல்லட் சிங் போய்சர் என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.

ஹேர் ஸ்டைலை மாற்றுவதைப் போல் தனது ஸ்டைலை மாற்றிக் கொண்ட பஜாஜ் பல்சர் 180 - வீடியோ!

தற்போது, கஃபே ரேஸர் தோற்றத்தில் காட்சியளிக்கும் இந்த பல்சர் பைக், 180 மாடலாகும். ஆனால், இந்த பைக்கைப் பார்க்கும்போது, அது பல்சர் 180 போன்றே தெரியவில்லை. ஏனென்றால், அந்த பைக் அதன் ஒரிஜினல் பாகங்கள் பலவற்றை இழந்து, ஆஃப்டர் மார்க்கெட் உதிரிபாகங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஹேர் ஸ்டைலை மாற்றுவதைப் போல் தனது ஸ்டைலை மாற்றிக் கொண்ட பஜாஜ் பல்சர் 180 - வீடியோ!

அதேசமயம், அதன் எஞ்ஜின் மற்றும் டேங்கில் ஒட்டப்பட்ட பஜாஜ் லோகோ மட்டுமே அந்த பைக்கை, பஜாஜ் நிறுவனத்தின் பைக் என்பதைக் காட்டிக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ள. மேலும், இதைத் தவிர மற்ற அனைத்து மாடல்களும் முழுமையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

ஹேர் ஸ்டைலை மாற்றுவதைப் போல் தனது ஸ்டைலை மாற்றிக் கொண்ட பஜாஜ் பல்சர் 180 - வீடியோ!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

அதேபோன்று, தனது உண்மையான பாகங்களை இழந்த இந்த பல்சர் 180 பைக், வேறு புகழ்வாய்ந்த பைக்குகளின் பாகங்களைப் பெற்றதன் காரணமாகவே கஃபே ரேசர் லுக்கில் காட்சியளிக்கின்றது. அந்தவகையில், இந்த பல்சர் 180 பைக்கிற்கு கேடிஎம் ட்யூக், ராயல் என்பீல்டு தண்டர்பேர்டு, ஹோண்டா சிபிஇசட், யமஹா ஆர்எக்ஸ்100 மற்றும் யமஹா எஃப்இசட் ஆகிய பைக்குகளின் பாகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஹேர் ஸ்டைலை மாற்றுவதைப் போல் தனது ஸ்டைலை மாற்றிக் கொண்ட பஜாஜ் பல்சர் 180 - வீடியோ!

இத்துடன், பைக்கின் பிரத்யேக லுக்கிற்காக சிவுப்பு நிறம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், கருப்பு நிறத்திலான டிகேல்கள் அதன் பெட்ரோல் உள்ளிட்ட பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளது.

ஹேர் ஸ்டைலை மாற்றுவதைப் போல் தனது ஸ்டைலை மாற்றிக் கொண்ட பஜாஜ் பல்சர் 180 - வீடியோ!

முன்னதாக நாம் கூறியதைப்போன்று, ஆர்எக்ஸ் 100 மாடல் பைக்கின் ஹெட்லேம்ப்தான், தற்போது மாடிஃபை செய்யப்பட்டுள்ள பல்சர் 180 மாடலுக்கு கொடுக்கப்பட்டுள்ளது. இது புரொஜக்டர் தரத்திலான எல்இடி மின் விளக்காகும். அதேபோன்று, பைக்கின் முன்பக்கத்தில் காணப்படும் ஃபோர்க் யமஹா எஃப்இசட் மாடலில் இருந்து பெறப்பட்டுள்ளது. அதேசமயம், முன்பக்க வீல் மற்றும் பின் பக்க வீல் ஆகிய இருவீல்களும் எஃப்இசட் பைக்கிலிருந்தே பெறப்பட்டுள்ளது.

ஹேர் ஸ்டைலை மாற்றுவதைப் போல் தனது ஸ்டைலை மாற்றிக் கொண்ட பஜாஜ் பல்சர் 180 - வீடியோ!

ஆனால், இந்த பைக்கின் முன்பக்கத்தில் காணப்படும் ஃபெண்டர் கஸ்டமைஸ் செய்யப்பட்டதாக இருக்கின்றது. இருப்பினும், அதில் பொருத்தப்பட்டுள்ள இன்டிகேட்டர்கள் கேடிஎம் ட்யூக் பைக்குடையதாக இருக்கின்றது. இத்துடன், ஆஃப்டர் மார்க்கெட் க்ளிப்-ஆன்-ஹேண்டில்பார்கள் ரைடரின் சிறப்பான ஹேண்டிலிங்கிற்காக இணைக்கப்பட்டுள்ளது.

ஹேர் ஸ்டைலை மாற்றுவதைப் போல் தனது ஸ்டைலை மாற்றிக் கொண்ட பஜாஜ் பல்சர் 180 - வீடியோ!

மேலும், இந்த ஹேண்டில்பாரில் மாடர்ன் அனலாக்-டிஜிட்டல் மீட்டர்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த பைக்கின் பெட்ரோல் ஹோண்டா சிபிஇசட் மாடலில் இருப்பதைப்போன்று காட்சியளிக்கின்றது. அதேசமயம், அது சற்று நீளமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி, இந்த பைக்கின் ஃபிரேமும் கஸ்டமைஸ் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு, கஃபே ரேசர் லுக்கிற்கு ஏற்பாற்போல, அந்த ஃபிரேம்கள் நீளம் குறைவானதாக தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த ஃபிரேமின் பின்பகுதியில்தான் ரியர் லைட் பொருத்தப்பட்டுள்ளது.

ஹேர் ஸ்டைலை மாற்றுவதைப் போல் தனது ஸ்டைலை மாற்றிக் கொண்ட பஜாஜ் பல்சர் 180 - வீடியோ!

மேலும், பஜாஜ் பல்சர் பைக்கின் எஞ்ஜினை நிலை நிறுத்துவதற்கு ஏற்பவும் இந்த ஃபிரேம் தயார் செய்யப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த ஃபிரேம் பைக்கிற்கு குறைவான கட்டுமஸ்து தோற்றத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹேர் ஸ்டைலை மாற்றுவதைப் போல் தனது ஸ்டைலை மாற்றிக் கொண்ட பஜாஜ் பல்சர் 180 - வீடியோ!

இத்துடன், பைக்கின் சிறப்பான பெர்ஃபார்மன்ஸுக்காக, ஆஃப்டர் மார்க்கெட் மோனோசாக் வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்பான நடவடிக்கையால், இந்த பைக் ரைடிங் அம்சமானது, சிறப்பானதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், தோற்றமும் மிகவும் பிரம்மிப்பளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஹேர் ஸ்டைலை மாற்றுவதைப் போல் தனது ஸ்டைலை மாற்றிக் கொண்ட பஜாஜ் பல்சர் 180 - வீடியோ!

இந்த மாடிஃபிகேஷனுக்காக, அதன் உரிமையாளர் ரூ. 50 முதல் 55 ஆயிரம் வரை செலவு செய்திருப்பாதக கூறப்படுகின்றது.

இந்தியாவில் வாகனங்களை மாடிஃபை செய்து இயக்குவது, சட்டத்திற்கு புரம்பான விஷயமாகப் பார்க்கப்படுகின்றது. இருப்பினும், இந்தியர்கள் பலர் ஆஃப்டர் மார்க்கெட்டில் விற்கும் உதிரிபாகங்களைக் கொண்டு, தங்களின் வாகனங்களை மாடிஃபை செய்து பயன்படுத்தி வருகின்றனர்.

Most Read Articles
English summary
Bajaj Pulsar 180 Modified Into A HOT Cafe Racer - Video. Read In Tamil.
Story first published: Thursday, July 25, 2019, 15:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X