இனிமேல் வேட்டையே வேற லெவல்தான்: அதிநவீன பைக்குகளை களமிறக்கும் காவல்துறை.. இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா

ரோந்து பணிக்காக மட்டுமில்லாமல் விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை வேட்டையாடுவதற்கும் சேர்த்து அதி நவீன பைக்குகளை காவல்துறையினர் களமிறக்கியுள்ளனர். இந்த பைக்கில் உள்ள சிறப்பம்சம்குறித்த தகவலை இந்த பதவில் காணலாம்.

இனிமேல் வேட்டையே வேற லெவல்தான்: அதிநவீன பைக்குகளை களமிறக்கும் காவல்துறை... இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா...?

அண்மைக் காலங்களாக இந்தியாவில் போக்குவரத்து விதிமீறல் என்பது கட்டுக்கடங்காமல் தலைவிரித்து ஆடிய வண்ணம் உள்ளது. இதனால், ஏற்படும் உயிரிழப்பு மற்றும் விபத்து சம்பவங்கள் நாள்தோறும் புதிய உச்சத்தைத் தொட்டவாறு இருக்கின்றது. இது, போக்குவரத்துத்துறைக்கு தலைவலியை ஏற்படுத்தியதுடன், அதில் தீர்வு காண்பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.

இனிமேல் வேட்டையே வேற லெவல்தான்: அதிநவீன பைக்குகளை களமிறக்கும் காவல்துறை... இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா...?

ஆகையால், போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத நாடாக இந்தியாவை மாற்றும் விதமாக மத்திய அரசு புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை கடந்த 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு கொண்டுவந்தது.

இனிமேல் வேட்டையே வேற லெவல்தான்: அதிநவீன பைக்குகளை களமிறக்கும் காவல்துறை... இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா...?

இந்த சட்டத்தில், இதற்கு முன்பாக விதிக்கப்பட்டு வந்த அபராதத்தைக் காட்டிலும் பத்து மடங்கு உயர்த்தி திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆகையால், ஹெல்மட் இல்லாமல் இரு சக்கர வாகனத்தில் பயணிப்பதற்கு விதிக்கப்பட்டு வந்த ரூ. 100 என்ற அபராதம் தற்போது ரூ. 1,000மாக மாற்றப்பட்டுள்ளது. இதுபோன்ற அனைத்து விதிமீறல்களுக்குமான அபராதமும் 10 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரும் களோபரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இனிமேல் வேட்டையே வேற லெவல்தான்: அதிநவீன பைக்குகளை களமிறக்கும் காவல்துறை... இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா...?

புதிய அபராதம் திட்டத்திற்கு எதிர்ப்பு மற்றும் வரவேற்பு ஒரு சேர நிலவி வருகின்றது. ஏனென்றால், உச்சபட்ச அபராத்தின் காரணமாக சாமானியர்களே பெருமளவில் பாதிப்படைவார்கள் என கூறி ஒரு சில மாநிலங்கள் புதிய அபராதத்தை குறைப்பதற்கான பணியில் களமிறங்கியுள்ளன. ஆனால், போக்குவரத்திற்கு முற்றிப் புள்ளி வைக்க வேண்டும் என்பதே மத்திய மற்றும் மாநில அரசுகளின் திட்டமாகும்.

இனிமேல் வேட்டையே வேற லெவல்தான்: அதிநவீன பைக்குகளை களமிறக்கும் காவல்துறை... இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா...?

இவ்வாறு, நாடு முழுவதும் போக்குவரத்து விதிமீறல்களை முற்றிலுமாக ஒழித்து கட்டுகின்ற வகையிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேலையில், மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் போக்குவரத்து போலீஸாரின் ரோந்து பணிக்காக உயர் தொழில்நுட்பம் கொண்ட மோட்டார்சைக்கிள்கள் களமிறக்கப்பட்டுள்ளன.

இனிமேல் வேட்டையே வேற லெவல்தான்: அதிநவீன பைக்குகளை களமிறக்கும் காவல்துறை... இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா...?

இந்த பைக்குகள் முக்கியமாக ரோந்து பணிக்காக பயன்படுத்தப்பட உள்ளது. அதுமட்டுமின்றி போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மற்றும் முறைகேட்டில் ஈடுபடும் வாகனங்களை பின்தொடர்ந்து சென்று பிடிக்கவும் பயன்படுத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இனிமேல் வேட்டையே வேற லெவல்தான்: அதிநவீன பைக்குகளை களமிறக்கும் காவல்துறை... இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா...?

அதற்கேற்ப வகையில், போலீஸாரின் அதிரடி நடவடிக்கைக்கு தேவையான அனைத்து உபகரணங்களும் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளன. டேஷ்போர்டு கேமரா, கண்கானிப்பு அமைப்பு, சைரன் மற்றும் ஃபிளாஷ் மின் விளக்கு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

இனிமேல் வேட்டையே வேற லெவல்தான்: அதிநவீன பைக்குகளை களமிறக்கும் காவல்துறை... இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா...?

இத்துடன், போலீஸாருக்கு உதவுகின்ற மற்ற தொழில்நுட்பங்களும் இந்த பைக்குகளில் இருப்பதாக கூறப்படுகின்றது. இதில், மிக முக்கியமாக வாகனங்கள் குறித்த தகவலை அறிந்து கொள்ளக்கூடிய சிஸ்டம் இந்த பைக்கில் நிறுவப்பட்டுள்ளது.

இது, முறைகேட்டில் ஈடுபடும் வாகன ஓட்டிகளின் முழுவிபரத்தையும் அறிந்து கொள்ள உதவும். மேலும், ஜாமர்கள், போக்குவரத்து உபகரணங்கள் மற்றும் பிற தனிப்பட்ட பொருட்களை சேகரித்து வைப்பதற்கான இடம் ஆகியவை இந்த காணப்படுகின்றது.

இனிமேல் வேட்டையே வேற லெவல்தான்: அதிநவீன பைக்குகளை களமிறக்கும் காவல்துறை... இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா...?

இதுகுறித்து புனே நகரத்தின் காவல்துறை ஆணையர் கே. வெங்கடேசம் கூறியதாவது, "அதிகரித்து வரும் விபத்துகளை தவிர்க்க தனிப்பட்ட உபகரணங்கள் தேவைப்படுகின்றது. இதன் ஒரு பங்காகவே போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கண்கானிப்பதற்கான, உயர் தொழில்நுட்பம் அடங்கிய பைக்குகள் வழங்கப்பட்டுள்ளன" என்றார்.

இனிமேல் வேட்டையே வேற லெவல்தான்: அதிநவீன பைக்குகளை களமிறக்கும் காவல்துறை... இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா...?

மேலும் பேசிய அவர், "இந்த மோட்டார்சைக்கிளைப் பெற்ற பின்னர் எங்களுடைய பொறுப்பு மேலும் அதிகரித்துள்ளது. போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளைக் குறைக்க கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. முந்தைய காலங்களில் இவ்வாறு உழைத்ததன் காரணமாக, 2018ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் விபத்துகள் 33 சதவீதம் குறைந்துள்ளன. இது மேலும் குறையும் " என தெரிவித்தார்.

இனிமேல் வேட்டையே வேற லெவல்தான்: அதிநவீன பைக்குகளை களமிறக்கும் காவல்துறை... இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா...?

தற்போது புனே நகர போலீஸாரின் பயன்பாட்டிற்காக 80 மோட்டார்சைக்கிள்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை அந்நகரத்தின் மேயர் முக்தா திலாக் மற்றும் பிஎஸ்சிடிசிஎல் சிஇஓ ராஜேந்திர ஜக்தப் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இத்துடன் மேலும் கூடுதலாக 60 மோட்டார்சைக்கிள்களை இதேபோன்று பயன்பாட்டிற்கு கொண்டுவர இருப்பதாக அவர் தெரிவித்தார்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Pune Traffic Police Gets High-Tech Motorcycles. Read In Tamil.
Story first published: Thursday, September 19, 2019, 13:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X