ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்!

ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சியால், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து தூக்கி எறிந்து வருகின்றன. ஆனால் பஜாஜ் நிறுவனம் குடும்பத்தில் ஒருவனாய் ஊழியர்களுக்கு ஆதரவு அளிக்கிறது.

ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்!

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக கடுமையான சரிவை தற்போது சந்தித்து கொண்டுள்ளது. கார், டூவீலர் என அனைத்து வகையான வாகனங்களின் விற்பனையும் கடந்த சில மாதங்களாக வீழ்ச்சியடைந்து கொண்டே வருகிறது. இதனால் அனைத்து முன்னணி நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்!

இந்தியாவில் தற்போது பெரும்பாலான வாகன நிறுவனங்கள் உற்பத்தியை தொடர்ந்து குறைத்து கொண்டே வருகின்றன. மறுபக்கம் ஏராளமான வாகன டீலர்ஷிப்கள் இழுத்து மூடப்பட்டு கொண்டுள்ளன. இதன் காரணமாக பல லட்சக்கணக்கான ஊழியர்களும் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்!

கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை இந்தியாவில் 200க்கும் அதிகமான டீலர்ஷிப்கள் இழுத்து மூடப்பட்டுள்ளதாகவும், ஆட்டோமொபைல் துறை சார்ந்த 3.50 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்களின் வேலை பறிபோயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே நிலை நீடித்தால் இன்னும் அதிகமான ஊழியர்களின் வேலை பறிபோகும் அபாயம் உள்ளது.

ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்!

எனவே மத்திய அரசு உடனடியாக ஆட்டோமொபைல் துறையை சரிவில் இருந்து மீட்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என்பதுதான் ஆட்டோமொபைல் தொழில் துறையினரின் பிரதான கோரிக்கையாக உள்ளது. ஆனால் மத்திய அரசு தற்போது வரை அந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை.

ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்!

எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் ஆதரவு காரணமாகதான் வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்களின் விற்பனை குறைய காரணம் என்பதும் ஆட்டோமொபைல் துறையினரின் கருத்து. எனவே எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் வேகத்தை தற்போதைக்கு குறைத்து கொள்ள மத்திய அரசு முன்வந்துள்ளது.

ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்!

ஆனால் ஆட்டோமொபைல் துறையினரின் ஜிஎஸ்டி குறைப்பு கோரிக்கை நிறைவேறுவது எந்த அளவிற்கு சாத்தியம்? என்பது உறுதியாக தெரியவில்லை. ஏனென்றால் மத்திய அரசு அதில் அவ்வளவு ஆர்வமாக இருப்பது போல் தெரியவில்லை. இந்த சூழலில், ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சி, வேலையிழப்பு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து ராஜிவ் பஜாஜ் தற்போது பேசியுள்ளார்.

ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்!

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ராஜிவ் பஜாஜ், அரசிடம் உதவி கேட்பதற்கு முன்னதாக ஆட்டோமொபைல் துறை முதலில் தனது குறைபாடுகளை உற்று நோக்கி களைய வேண்டும் என தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ''ஏராளமான நிறுவனங்களால் தங்கள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்ய முடியவில்லை.

ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்!

இதற்கான காரணத்தை வெளிப்படையாகவே கூறுகிறேன். அவர்களின் தயாரிப்புகள் சராசரி என்ற அளவில் மட்டுமே உள்ளன. அவ்வளவு சிறப்பாக இல்லை. ஆனால் அவர்களின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை'' என்றார். மார்க்கெட் மந்த நிலை காரணமாக பல்வேறு முன்னணி நிறுவனங்களும் சமீப காலமாக ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றன.

ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்!

இது தொடர்பான செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டேதான் இருக்கின்றன. இதுகுறித்து ராஜிவ் பஜாஜ் கூறுகையில், ''இது மிக கடினமான நேரம் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் 5 சதவீதம் முதல் 7 சதவீதம் வரை விற்பனை சரிவடைவதை நெருக்கடி என அழைக்க முடியாது. உங்களை வேலையில் இருந்து நீக்க போகிறேன் என கூறினால், எனது ஊழியர்கள் என்னை எப்படி நம்புவார்கள்?

ஊழியர்களை தூக்கி எறியும் நிறுவனங்களுக்கு மத்தியில் குடும்பத்தில் ஒருவனாய் நிற்கும் பஜாஜ்... சூப்பர்!

ஊழியர்களின் சம்பளம் என்பது விற்பனையில் வெறும் 4 சதவீதம் மட்டுமே. இந்த சிறிய சேமிப்பிற்காக உங்கள் ஊழியர்களை தூக்கி எறிவது நியாயமானதா? ஊழியர்களின் வாழ்க்கை மற்றும் குடும்பத்துடன் விளையாட நான் விரும்பவில்லை''என்றார். இதனிடையே பண்டிகை காலத்தின்போது விற்பனை மேம்படும் என தான் எதிர்பார்ப்பதாகவும் ராஜிவ் பஜாஜ் தெரிவித்தார்.

Most Read Articles
மேலும்... #bajaj auto
English summary
Rajiv Bajaj Speaks About Job Cuts In Automobile Industry. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X