ராயல் என்பீல்ட் பைக்கை விட பவர் குறைவானது ஜாவா பைக்...? - வீடியோ!

ராயல் என்பீல்ட் பைக்கை விட ஜாவா பைக்கின் பவர் குறைவானது என சமீபத்தில் ஜாவா பைக்கை பரிசோதித்த இளைஞர் ஒருவர் அவரது யுடியூப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இதுகுறித்த தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்.

ராயல் என்பீல்ட் பைக்கை விட பவர் குறைவானது ஜாவா பைக்...? - வீடியோ!

பாரம்பரியம் மாறாத தோற்றத்தில், நவீன தொழில்நுட்பத்துடன் புதிய தலைமுறை மோட்டார்சைக்கிளை ஜாவா நிறுவனம் கடந்த வருடம் நவம்பர் மாதம் 15ம் தேதி அறிமுகம் செய்தது. ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு போட்டியாக களமிறக்கப்பட்ட இந்த மோட்டார்சைக்கிளை அதன் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் வரவேற்று, புக் செய்து வருகின்றனர்.

ராயல் என்பீல்ட் பைக்கை விட பவர் குறைவானது ஜாவா பைக்...? - வீடியோ!

மஹிந்திரா குழுமத்தின் கிளாசிக் லெஜண்ட்ஸ் நிறுவனத்தின்கீழ், ஜாவாவின் புத்தம் புதிய மூன்று மாடல் மோட்டார்சைக்கிள்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, ஜாவா, ஜாவா 42 மற்றும் ஜாவா பெராக் ஆகிய மாடல்கள் அறிமுகமாகி உள்ளது. இதில், ஜாவா பெராக் மாடலின் விற்பனை குறித்த தகவல் முழுமையாக வெளியிடப்படவில்லை. ஆனால், இது 2019ம் ஆண்டின் முடிவிற்குள் விற்பனைக்கு வரும் என ஜாவா மோட்டார்சைக்கிள் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட் செய்துள்ளது.

ராயல் என்பீல்ட் பைக்கை விட பவர் குறைவானது ஜாவா பைக்...? - வீடியோ!

ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிளுக்கான புக்கிங் ஏற்கனவே தொடங்கப்பட்ட நிலையில், அனைத்து யூனிட்களுக்குமான புக்கிங் முடிந்துவிட்டதாக ஜாவா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2019ம் ஆண்டு செப்டம்பர் வரை இவ்விரு மோட்டார் சைக்கிளுக்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் அந்த நிறுவனம் அறிவித்தது.

ராயல் என்பீல்ட் பைக்கை விட பவர் குறைவானது ஜாவா பைக்...? - வீடியோ!

ஜாவா மற்றும் ஜாவா 42 மோட்டார்சைக்கிள்கள் உருவத்தில் வேற்றுமைக் கொண்டிருந்தாலும், அதன் எஞ்ஜின்கள் ஒரே மாதிரியாக அமைக்கப்பட்டுள்ளன. அவ்வாறு 293சிசி சிங்கிள் சிலிண்டர் அமைப்புடைய லிக்யூடு கூல்டு DOHC எஞ்ஜின் இந்த மோட்டார் சைக்கிள்களில் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க்யூ திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்ஜின் பாரத் ஸ்டேஜ்-6 மாசு உமிழ்வு கட்டுப்பாட்டிற்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் முக்கிய அம்சாமாக இரட்டை குழல் கொண்ட லைசென்சர் இடம்பெற்றுள்ளது.

ராயல் என்பீல்ட் பைக்கை விட பவர் குறைவானது ஜாவா பைக்...? - வீடியோ!

ராயல் என்பீல்டின் கிளாசிக் 350 மாடலுக்கு போட்டியாக உறுவாக்கப்பட்ட இந்த இரண்டு மாடலும் அதற்கு கடுமையன போட்டியைக் கொடுத்துவருகிறது. மேலும், ஜாவாவின் வருகை தனிகாட்டு ராஜாவாக இருந்த ராயல் என்பீல்டின் விற்பனைக்கு பெருமளிவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் ராயல் என்பீல்டின் ஜனவரி மாத விற்பனை கணிசமாக சரிந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

ராயல் என்பீல்ட் பைக்கை விட பவர் குறைவானது ஜாவா பைக்...? - வீடியோ!

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கிள் 346சிசி சிங்கிள் சிலிண்டர் அமைப்புடைய ஏர்-கூல்டு எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 19.5பிஎச்பி ஆற்றலில் 5,250 ஆர்பிஎம்-யையும் மற்றும் 28என்எம் டார்கில் 4,000 ஆர்பிம்-யையும் வெளிப்படுத்தும்.

ராயல் என்பீல்ட் பைக்கை விட பவர் குறைவானது ஜாவா பைக்...? - வீடியோ!

இந்நிலையில், ஜாவா மோட்டார்சைக்கிளை டெஸ்ட் ரைட் செய்த, ராயல் என்பீல்டின் உரிமையாளர் ஒருவர் தனது ராயல் என்பீல்டு கிளாசிக் 350 பைக்கை விட ஜாவா பைக்கின் பவர் குறைவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோவை ரெவ்இட் ரிஷி என்ற யுடியூப் சேனலிலும் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ராயல் என்பீல்ட் பைக்கை விட பவர் குறைவானது ஜாவா பைக்...? - வீடியோ!

அந்த வீடியோவில் வாகன ஓட்டி தனது சொந்த கருத்தாக கூறியிருப்பது, "கடந்த மூன்று வருடங்களாக ராயல் என்பீல்டின் கிளாசிக் 350 பைக்கை இயக்கி வருகிறேன். இது அதிக சக்தியைக் கொண்ட பவரான பைக்காக உள்ளது. அதேபோல் ஜாவா பைக்கை அதன் ஷோ-ரூமிற்கு சென்று டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்தேன். கிளாசிக்கைவிட பவர் அதிகமாக இருப்பதை என்னால் உணர முடியவில்லை. ஆனால், ஜாவாவின் விற்பனை நிலையங்களில் ஜாவா பைக்குகள் ராயல் என்பீல்ட் பைக்கைக் காட்டிலும் அதிக சக்தி வாய்ந்தவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இரண்டு பைக்குகளிலுமே ஒரே சிசி-யைக் கொண்ட எஞ்ஜின்கள் தான் பொருத்தப்பட்டுள்ளன.

ஜாவா பைக்கை பரிசோதித்து பார்த்ததில் என்னால் பெரிதாக எதையும் உணரமுடியவில்லை. அனைத்து ராயல் என்பீல்டின் பைக்குகளிலும் சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் டார்க் பவரானது ஆர்பிஎம் எண்ணிக்கையை குறைக்கிறது. இதுவே வாகன ஓட்டிகள் இந்த மோட்டார் சைக்கிள் அதிக சக்தி வாயந்ததாக உணர வைக்கின்றது. அதேபோன்று, ஜாவா பைக்கில் பொருத்தப்பட்டுள்ள எஞ்ஜினானது யூஸர் பிரண்ட்ளியாக இருக்கிறது. ஆனால், ராயல் என்பீல்டு பைக்கிற்கு இணையான சக்தியை அது வெளிப்படுத்தவில்லை" என்று தெரிவித்திருந்தார்.

Most Read Articles
English summary
Royal Enfield Biker Says Jawa Bikes Power Lower Than The Classic 350. Read In Tamil.
Story first published: Friday, March 1, 2019, 18:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X