பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்தியது ரெட்பஸ்!

பெங்களூர் உள்பட மூன்று நகரங்களில் பைக் ஷேரிங் திட்டத்திற்காக புதிய மொபைல்போன் செயலியை ரெட்பஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

ஆன்லைன் மூலமாக பஸ் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வசதியை ரெட்பஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிலையில், வர்த்தக விரிவாக்கத்தின் பைக் பூல் எனப்படும் புதிய திட்டத்திற்கான ஸ்மார்ட்ஃபோன் செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது.

பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்திய ரெட்பஸ்!

தினசரி அலுவலகத்திற்கு பைக்கில் செல்வோர், மற்றொருவரை கட்டணம் பெற்றுக் கொண்டு அழைத்துச் செல்லும் விதத்தில் இந்த திட்டத்தை ரெட்பஸ் அறிமுகப்படுத்தி உள்ளது. நீங்கள் அலுவலகம் செல்லும் வழியிலேயே செல்லும் மற்றொருவரை கட்டணத்துடன் அழைத்துச் செல்வதற்கான வாய்ப்பை இந்த ஸ்மார்ட்ஃபோன் செயலி மூலமாக பெற முடியும்.

பைக் பூலிங் என்ற இந்த வசதிக்கான பிரத்யேக செயலி rPool என்ற பெயரில் அறிமுகப்படுத்தி உள்ளது ரெட்பஸ் நிறுவனம். பைக்கில் பிறரை கட்டணத்துடன் அழைத்துச் செல்பவரை Ride Givers என்ற பெயரிலும், பிறரது பைக்கில் கட்டணத்தை செலுத்தி செல்ல விரும்புவோரை Ride Takers என்று இந்த செயலியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பைக் பூலிங் திட்டத்தின் கீழ் ஒரு கிலோமீட்டருக்கு ஒரு ரூபாய் முதல் 4 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் 10 பயணங்களுக்கு இரட்டிப்பு கட்டணத்தை பெறும் வாய்ப்பையும் இந்த ஆர்-பூல் என்ற செயலி அளிக்கும்.

மேலும், அறிமுகச் சலுகையாக முதல் 5 ஆண்டுகளுக்கான 500 பயணங்களுக்கு ரெட்பஸ் நிறுவனம் சார்பில் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது என்று ரெட்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பைக் ஷேரிங் திட்டத்தை அறிமுகப்படுத்திய ரெட்பஸ்!

இந்த புதிய ஆர்-பூல் மொபைல் செயலியில் பதிவு செய்து கொள்பவர்களின் தனிப்பட்ட விபரங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்படுவதால், இது மிகவும் பாதுகாப்பான பயணத்தை இருவருக்கும் வழங்கும் என்று ரெட்பஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த செயலி மூலமாக நகர்ப்புறத்தில் போக்குவரத்து நெரிசல், எரிபொருள் விரயம் ஆகியவற்றை தவிர்க்க வாய்ப்பு ஏற்படும் என்று ரெட்பஸ் தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக பெங்களூர், ஹைதராபாத் மற்றும் புனே ஆகிய நகரங்களில் இந்த புதிய ஆர்-பூல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே சில நிறுவனங்கள் பைக் பூலிங் மற்றும் கார் பூலிங் சேவைகளை அறிமுகம் செய்தன. ஆனால், பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் அரசு விதிகள் காரணமாக, அவை வெற்றி பெறவில்லை. இந்த நிலையில், ரெட்பஸ் நிறுவனத்தின் இந்த புதிய திட்டம் எவ்விதமான பயன்களை வழங்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Most Read Articles
English summary
RedBus has launched bike pool service through mobile app in Bangalore, Hyderabad and Pune.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X