அது எப்படி எலக்ட்ரிக் பைக்கில் சைலென்சர் சத்தம் வரும்...? சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் ரிவோல்ட்..!

ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம், அதன் எலக்ட்ரிக் பைக்கில், ஆர்டிஃபிஷியல் சைலென்சர் சத்தத்தை பொருத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

அது எப்படி எலக்ட்ரிக் பைக்கில் சைலென்சர் சத்தம் வரும்...? சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் ரிவோல்ட்...!

திரைப்பட நடிகையான அசினின் கணவரும், மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் இணை நிறுவனருமான ராகுல் ஷர்மா, ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் எனும் மின்வாகன உற்பத்தி நிறுவனத்தை அண்மையில் தொடங்கினார். மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட்போன், தொடர் விற்பனைச் சரிவைக் கண்டு வந்ததன் காரணமாக, இந்த புதிய தொழிலை அவர் துவங்கியுள்ளார்.

அது எப்படி எலக்ட்ரிக் பைக்கில் சைலென்சர் சத்தம் வரும்...? சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் ரிவோல்ட்...!

இந்நிறுவனத்தின் முதல் மாடல் எலக்ட்ரிக் பைக் வருகின்ற 8ம் தேதி, தலைநகர் டெல்லியில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்கின் விற்பனைக்கு அராய் (ARAI) அமைப்பிடம் கிடைத்த ஒப்புதலை அடுத்து அந்நிறுவனம், இந்த நடவடிக்கையில், இறங்கியுள்ளது.

அது எப்படி எலக்ட்ரிக் பைக்கில் சைலென்சர் சத்தம் வரும்...? சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் ரிவோல்ட்...!

மைக்ரோமேக்ஸ் நிறுவனம், மலிவான விலையில் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்களை விற்பனைச் செய்து வந்தது, நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அதுபோலவே, தற்போது, ராகுல் ஷர்மா, மூலம் துவங்கப்பட்டிருக்கும் இந்த ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனம், பல்வேறு நவீன வசதிகளைக் கொண்ட மலிவு விலை எலக்ட்ரிக் பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது எப்படி எலக்ட்ரிக் பைக்கில் சைலென்சர் சத்தம் வரும்...? சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் ரிவோல்ட்...!

இந்நிலையில், பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்கில், புதிய சிறப்பம்சமாக, செயற்கையாக சைலென்சர் சத்தத்தை வெளிப்படுத்தும் திறன் வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை ஆட்டோகார் இந்திய இணையதளம் வெளியிட்டுள்ளது. அதேசமயம், இதுகுறித்த வீடியோ ஒன்றை இன்டெல்லிகார்ப் நிறுவனம், அதன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதனை கீழே காணலாம்.

பொதுவாக இருசக்கர வாகன ஓட்டிகள் பலர், அதிலிருந்து வெளியேறும் சைலென்சர் சப்தத்திற்கு அடிமையாக இருக்கின்றனர். இதன்காரணமாகவே, சிலர் தங்களது வாகனங்களில் அதிக சத்தத்தை வெளிப்படுத்தும் சைலென்சர்களை, மாடிஃபை செய்து கொள்கின்றனர். ஆனால், இந்த சைலென்சர் அம்சமானது, எலக்ட்ரிக் வாகனங்களில் பெரும் குறையாகவே இருந்து வருகின்றது.

அது எப்படி எலக்ட்ரிக் பைக்கில் சைலென்சர் சத்தம் வரும்...? சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் ரிவோல்ட்...!

ஆகையால், இதனைத் தீர்த்து வைக்கும் விதமாக, ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்கில் செயற்கையாக சைலென்சர் சப்தத்தை வெளிப்படுத்தும் ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனை, நமது தேவைக்கேற்ப ஸ்மார்ட் போன் மூலம் ஆன் அல்லது ஆஃப் செய்துகொள்ளலாம். அதேபோன்று, இதன் சப்தத்தை நமது விருப்பத்திற்கேற்பாற்போல மாற்றிக் கொள்ளும் வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது.

அது எப்படி எலக்ட்ரிக் பைக்கில் சைலென்சர் சத்தம் வரும்...? சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் ரிவோல்ட்...!

இதுமட்டுமின்றி, ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக்கில் பல்வேறு சிறப்பம்சங்கள் இடம்பெற உள்ளன. அந்தவகையில், செயற்கை நுண்ணறிவு, 4ஜி சிம் கார்டு பொருத்தப்பட்ட இன்ஃபோடெயிண்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இதில் பொருத்தப்பட உள்ளன. அதேசமயம், இந்த எலக்ட்ரிக் பைக் பாதுகாப்பிற்கும் சிறந்தது என கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும்வகையில், ரிவோல்ட் எலக்ட்ரிக் பைக், 10.2 டிகிரி சாய்வான கோணத்தில் வைத்து இயக்கப்பட்டது.

அது எப்படி எலக்ட்ரிக் பைக்கில் சைலென்சர் சத்தம் வரும்...? சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் ரிவோல்ட்...!

அதில், எலக்ட்ரிக் பைக் அதன் நிலைத் தன்மையில் எந்தவொரு மாற்றமுமின்றி, பயணத்தைத் தொடர்ந்து சென்றது. ஆகையால், இந்த பைக்கில் வளைந்து நெளிந்து செல்ல ஏதுவாக, கிராவிட்டி அமைப்பு வழங்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், நெய்ல் பெனரேஷன், ஷாக் அப்சார்பேஷன், வாட்டர் ப்ரூஃப் டெஸ்ட் உள்ளிட்ட பல்வேறு பரீட்சைகளுக்கு இந்த எலக்ட்ரிக் உட்படுத்தப்பட்டுள்ளது.

அது எப்படி எலக்ட்ரிக் பைக்கில் சைலென்சர் சத்தம் வரும்...? சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் ரிவோல்ட்...!

ரிவோல்ட் பிராண்டில் முதற்கட்டமாக மூன்று மாடல் எலக்ட்ரிக் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதில், ஹை எண்ட் வேரியண்ட், ஒரு முழுமையான சார்ஜில் 150 கிமீ தூரம் செல்லும் வகையில் பேட்டரி பேக் வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஆரம்பநிலை எலக்ட்ரிக் பைக் 85 கிமீ தூரம் வரை செல்லும் வகையிலான பேட்டரி பேக்கினைப் பெற்றிருக்கின்றது.

Most Read Articles
English summary
Revolt Electric Bike Will Get Artificial Exhaust Sound. Read In Tamil.
Story first published: Saturday, June 15, 2019, 19:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X