ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கிற்கான மாதத் தவணை பற்றிய சந்தேகங்களுக்கான பதில்கள்!

அண்மையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் பைக் மாடல்களும் வாடிக்கையாளர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளன. இந்த நிலையில், புதுமையான முறையில் இந்த இரண்டு எலெக்ட்ரிக் பைக் மாடல்களும் மாதத் தவணைத் திட்டத்தின் அடிப்படையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இந்த மாதத் தவணைத் திட்டம் குறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கிற்கான மாதத் தவணை பற்றிய சந்தேகங்களுக்கான பதில்கள்!

ரிவோல்ட் மை பிளான் திட்டம்

குர்கானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ரிவோல்ட் இன்டெலிகார்ப் நிறுவனம் ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 என்ற இருவிதமான திறன் கொண்ட எலெக்ட்ரிக் பைக் மாடல்களை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. இதில், ஆர்வி400 மாடல் பேஸ் மற்றும் பிரிமீயம் என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் வந்துள்ளது. இந்த நிலையில், இந்த பைக்குகல் MyRevoltPlan என்ற மாதத் தவணை திட்டத்தின் மூலமாக வாங்க முடியும்.

Model Price Pan India Tenure
Revolt RV300 Rs 2999 / Per Month 37 Months
Revolt RV400 Rs 3499 / Per Month 37 Months
Revolt RV400 Premium Rs 3999 / Per Month 37 Months
ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கிற்கான மாதத் தவணை பற்றிய சந்தேகங்களுக்கான பதில்கள்!

ஆர்வி300 மாடல் மாதத் தவணை

ரிவோல்ட் மை பிளான் மாதத் தவணைத் திட்டத்தின் கீழ் ரிவோல்ட் ஆர்வி300 எலெக்ட்ரிக் பைக்கிற்கு ரூ.2,999 மாதத் தவணை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 37 மாதங்களில் திருப்பி செலுத்தும் கால அளவுடன் வந்துள்ளது. இதன்படி, இந்த பைக்கிற்கு மொத்தமாக ரூ.1,10,963 விலையாக கொடுக்க வேண்டும்.

ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கிற்கான மாதத் தவணை பற்றிய சந்தேகங்களுக்கான பதில்கள்!

கூடுதல் சேவைகள்

இதில் பைக்கின் விலை மட்டுமின்றி, சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு, வரம்பில்லாத கிலோமீட்டர் தூரத்திற்கான பராமரிப்பு திட்டங்கள், இன்ஸ்யூரன்ஸ், 5 ஆண்டுகளுக்கான வாரண்டி ஆகியவையும் அடங்குகிறது. ஆனால், இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் சாதனத்திற்கு நேரடி இணைய வசதியை அளிக்கும் 4ஜி சிம் கார்டு வேண்டுவோர் ரூ.5,000 முதல் மாத மாதத் தவணையுடன் செலுத்த வேண்டும்.

ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கிற்கான மாதத் தவணை பற்றிய சந்தேகங்களுக்கான பதில்கள்!

ஆர்வி 400 பைக்கிற்கான திட்டங்கள்

ஆர்வி 400 பைக்கிற்கு இரண்டு விதமான தவணத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. பேஸ் வேரியண்ட்டிற்கு மாதத் தவணையாக ரூ.3,499 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவும் 37 மாதங்களில் திருப்பி செலுத்தும் கால அளவு கொண்டுள்ளது. இந்த திட்டத்தில் 4ஜி சிம் கார்டு வேண்டுவோர் முதல் மாதத் தவணையுடன் ரூ.5,000 கூடுதலாக செலுத்த வேண்டும்.

ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கிற்கான மாதத் தவணை பற்றிய சந்தேகங்களுக்கான பதில்கள்!

கூடுதல் சேவைகள்

இதன்படி, ஆர்வி400 பேஸ் வேரியண்ட் பைக்கிற்கு ரூ.1,29,463 மொத்த விலையாக இருக்கும். இந்த மாதத் தவணையில் வரம்பில்லா அளவுக்கு சார்ஜ் நிரப்பப்பட்ட பேட்டரியை மாற்றிக் கொள்ளும் வாய்ப்பு, வரம்பில்லாத அளவுக்கு பராமரிப்பு திட்டங்கள், இன்ஸ்யூரன்ஸ் மற்றும் 5 ஆண்டுகள் வாரண்டியும் வழங்கப்படுகிறது.

ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கிற்கான மாதத் தவணை பற்றிய சந்தேகங்களுக்கான பதில்கள்!

ஆர்வி 400 பிரிமீயம் வேரியண்ட்

ஆர்வி400 பிரிமீயம் வேரியண்ட்டிற்கு ரூ.3,999 மாதத் தவணையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றை 37 மாதங்களில் திருப்பி செலுத்தும் கால அளவு கொடுக்கப்படுகிறது. இதன்படி, ரூ.1,47,963 விலையாக நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இதில், சார்ஜ் நிரப்பிய பேட்டரியை மாற்றிக் கொள்ளும் திட்டம், கட்டணமில்லா பராமரிப்பு, இன்ஸ்யூரன்ஸ் மற்றம் 5 ஆண்டுகள் வாரண்டியும் வழங்கப்படுகிறது.

MOST READ: வசமாக சிக்கிய டிஎஸ்பி... ஸ்பாட்டிலேயே சூப்பரான தண்டனை கிடைத்தது... என்னவென்று தெரியுமா?

ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கிற்கான மாதத் தவணை பற்றிய சந்தேகங்களுக்கான பதில்கள்!

பிரிமீயம் வேரியண்ட்

ரூ.3,999 மாதத் தவணைத் திட்டத்தில் கூடுதலாக ஆர்வி400 பைக்கிற்கு கூடுதல் வாரண்டி, டயர்களை இலவசமாக மாற்றிக் கொள்ளும் திட்டம், மூன்று ஆண்டுகளுக்கு 4ஜி இணைய சேவைக்கான கட்டணமும் அடங்கும். இந்த வேரியண்ட்டில் இம்மொலைசர், ரிமோட் கீ, புஷ் பட்டன் ஸ்டார்ட், சவுண்ட் சிமுலேட்டர் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளது.

MOST READ: மிக கடுமையான எதிர்ப்புகளை மீறி அதிரடியான முடிவை எடுக்கிறது மத்திய அரசு? என்னவென்று தெரியுமா?

ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கிற்கான மாதத் தவணை பற்றிய சந்தேகங்களுக்கான பதில்கள்!

சென்னைக்கு எப்போது?

முதல்கட்டமாக டெல்லி, புனே ஆகிய நகரங்களில் மட்டுமே விற்பனைக்கு வந்துதள்ளது. சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட இதர முக்கிய நகரங்களில் ஓரிரு மாதங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

MOST READ: ரொம்ப அதிர்ஷ்டசாலியா இருப்பார் போல... தமிழக இளைஞருக்கு எவ்வளவு அபராதம் தெரியுமா? ஷாக் ஆயிடாதீங்க

ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கிற்கான மாதத் தவணை பற்றிய சந்தேகங்களுக்கான பதில்கள்!

முன்பதிவு

ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்குகளை ரிவோல்ட் நிறுவனத்தின் இணையதளம் வாயிலாகவே முன்பதிவு செய்ய இயலும். செப்டம்பர் மற்றும் அக்டோபர் ஆகிய இரண்டு மாதங்களுக்கும் முன்பதிவு முடிந்துவிட்டது. ரிவோல்ட் நிறுவனம் பெயருக்கு ஏற்றாற்போல் புரட்சிகரமான மாதத் தவணை திட்டத்தின் கீழ் வர்த்தகத்தை துவங்கி இருக்கிது. இது வாடிக்கையாளர்களின் கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

Most Read Articles

மேலும்... #ரிவோல்ட்
English summary
Gurugram based Revolt Intellicorp launched two electric motorcycles in the Indian market — the Revolt RV 400, and the Revolt RV 300, and in order to boost sales the company is now offering the motorcycles with monthly payment plans called 'MyRevoltPlan'.
Story first published: Thursday, September 5, 2019, 14:55 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more