ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக்கிற்கு அக்டோபர் வரை புக்கிங் முடிந்தது!

இந்திய இருசக்கர வாகன சந்தையில் ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் மாடல்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன. இந்த எலெக்ட்ரிக் பைக் மாடல் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்ப பெற்றுள்ளன.

ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக்கிற்கு அக்டோபர் வரை புக்கிங் முடிந்தது!

கடந்த மாதம் 28ந் தேதி ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன. ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 என்ற இரண்டு மாடல்களில் இந்த எலெக்ட்ரிக் பைக்குகள் சந்தைக்கு வந்தன.

ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக்கிற்கு அக்டோபர் வரை புக்கிங் முடிந்தது!

இந்த பைக்கை புதுமையான முறையில் மாதத் தவணையில் மட்டுமே வாங்கும் திட்டத்துடன் ரிவோல்ட் நிறுவனம் அறிமுகம் செய்தது. ஆர்வி300 மாடல் ரூ.2,999 மாதத் தவணையிலும், ஆர்வி400 பைக் ரூ.3,499 மற்றும் ரூ.3,999 ஆகிய மாத் தவணை முறையிலும் 37 மாதங்களில் திருப்பி செலுத்தும் கால அளவுடன் அறிமுகம் செய்யப்பட்டன.

ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக்கிற்கு அக்டோபர் வரை புக்கிங் முடிந்தது!

இதனால், இந்த பைக்குகளுக்கு எதிர்பாராத வகையில் முன்பதிவு குவிந்து வருகிறது. முதல்கட்டமாக டெல்லி மற்றும் புனே நகரங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த இரு நகரங்களிலும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்திற்கான முன்பதிவு முடிந்துவிட்டதாக ரிவோல்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக்கிற்கு அக்டோபர் வரை புக்கிங் முடிந்தது!

வரும் நவம்பர் மாதத்திற்கு இப்போது முன்பதிவு ஏற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வாரத்திற்குள் இரண்டு மாதங்களுக்கான முன்பதிவை ரிவோல்ட் ஆர்வி பைக்குகள் பெற்றுள்ளன. மிக ஸ்டைலான டிசைனில், அதிக செயல்திறன் மிக்க இந்த பைக் இளைஞர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக்கிற்கு அக்டோபர் வரை புக்கிங் முடிந்தது!

இந்த பைக்கில் இருக்கும் மின் மோட்டார் 170 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்ததும் திறன் கொண்டது. இதன் 3kW லித்தியம் அயான் பேட்டரி அதிகபட்சமாக 156 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். இதன் பேட்டரியை கழற்றி மாட்டும் வசதி உள்ளது.

ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக்கிற்கு அக்டோபர் வரை புக்கிங் முடிந்தது!

பேட்டரியில் முழுமையாக சார்ஜ் ஏற்றினால், 156 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று அராய் அமைப்பு சான்ற அளித்துள்ளது. சாதாரண 15A சாதாரண சார்ஜர் மூலமாக, மின்கலத்தில் மின்சாரத்தை முழுமையாக நிரப்புவதற்கு 4 மணிநேரம் பிடிக்கும்.

MOST READ: மாதத்தவணையில் ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்... சென்ற வாரத்தின் டாப் - 10 செய்திகள்!

ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக்கிற்கு அக்டோபர் வரை புக்கிங் முடிந்தது!

இதற்கு போர்ட்டபிள் சார்ஜரும் வழங்கப்படுகிறது. அவசத்திற்கு குறைந்த தூரம் பயணிக்க இது உதவும். இதன் பேட்டரியை இந்த எலெக்ட்ரிக் பைக் மணிக்கு 85 கிமீ வேகம் வரை செல்லும் திறன் வாய்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

MOST READ: உங்கள் வாகனத்தின் டயர் 1 லட்சம் கிமீ உழைக்கும்... இந்த ரகசியத்தை உங்களிடம் யாரும் சொல்ல மாட்டாங்க

ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக்கிற்கு அக்டோபர் வரை புக்கிங் முடிந்தது!

எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்ட புரொஜெக்டர் ஹெட்லைட், பகல்நேர விளக்குகள், டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், புஷ் பட்டன் ஸ்டார்ட் வசதியும், 4ஜி எல்டி சிம் கார்டும் உள்ளன. இதில், செயற்கையாக சைலென்சர் ஒலி எழுப்பும் வசதியும் உள்ளது.

MOST READ: ரூ. 1,200-க்கு கிடைக்க உள்ள கிளாசிக் 500: ராயல் என்பீல்டு அதிரடி... எப்படி தெரியுமா...?

ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக்கிற்கு அக்டோபர் வரை புக்கிங் முடிந்தது!

இந்த பைக்கிற்கான விசேஷமான மொபைல்போன் அப்ளிகேஷனும் வழங்கப்படுகிறது. இதன்மூலமாக, பல்வேறு தகவல்களையும், கட்டுப்பாட்டு வசதிகளையும் பெற முடியும். ஜியோ ஃபென்சிங், நேவிகேஷன், பேட்டரியில் சார்ஜ் அளவு உள்ளிட்ட ஏராளமான தகவல்களை பெறுவதுடன், ரிமோட் முறையில் இதன் மின் மோட்டாரை ஆன் செய்வதற்கும், ஆஃப் செய்வதற்கும் இயலும்.

ரிவோல்ட் ஆர்வி எலெக்ட்ரிக் பைக்கிற்கு அக்டோபர் வரை புக்கிங் முடிந்தது!

இதுபோன்று ஏராளமான வசதிகளையும், சிறப்பு தொழில்நுட்ப அம்சங்களையும் இந்த எலெக்ட்ரிக் பைக் பெற்றிருக்கிறது. இந்த பைக்கிற்கு சிறப்பான வாரண்டியும் வழங்கப்படுவது வாடிக்கையாளர்களுக்கு அதிக நம்பிக்கையை தந்துள்ளது. முடிந்து போய் இருப்பது ரிவோல்ட் இன்டெல்லிகார்ப் நிறுவனத்திற்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது. விரைவில் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை ஆகிய நகரங்களிலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

Most Read Articles

மேலும்... #ரிவோல்ட்
English summary
Revolt has announced the bookings for RV electric motorcycles sold out till October 2019
Story first published: Monday, September 2, 2019, 12:39 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X