நேரடி இன்டர்நெட் வசதியுடன் புதிய ரிவோல்ட் ஆர்400 மின்சார பைக் அறிமுகம்!

செயற்கை நுண்ணறிவு திறனுடன் கூடிய இந்தியாவின் முதல் மின்சார பைக் மாடலை ரிவோல்ட் நிறுவனம் இன்று அறிமுகம் செய்தது. ரிவோல்ட் ஆர்வி400 என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த பைக்கின் சிறப்பம்சங்களை இந்த செய்தியில் காணலாம்.

நேரடி இன்டர்நெட் வசதியுடன் புதிய ரிவோல்ட் ஆர்400 மின்சார பைக் அறிமுகம்!

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனரும், நடிகை அசினின் கணவருமான ராகுல் ஷர்மா துவங்கியிருக்கும் மின்சார பைக் நிறுவனம்தான் ரிவோல்ட் இன்டெலிகார்ப். இந்த நிறுவனத்தின் முதல் மின்சார பைக் மாடல் அறிமுக விழா சற்றுமுன் டெல்லியில் நடந்ததது.

நேரடி இன்டர்நெட் வசதியுடன் புதிய ரிவோல்ட் ஆர்400 மின்சார பைக் அறிமுகம்!

இதில், ரிவோல்ட் ஆர்வி400 என்ற பெயரில் முதல் பைக் மாடலை ரிவோல்ட் இன்டெலிகார்ப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய மின்சார பைக், தோற்றத்தில் கேடிஎம் ட்யூக் வரிசை பைக்குகளை நினைவூட்டுகிறது. எனினும், சில மாற்றங்களுடன் தனித்துவப்படுத்தப்பட்டு இருக்கிறது.

நேரடி இன்டர்நெட் வசதியுடன் புதிய ரிவோல்ட் ஆர்400 மின்சார பைக் அறிமுகம்!

புதிய ரிவோல்ட் ஆர்வி400 பைக்கில் எல்இடி விளக்குகள், முழுவதுமான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பொருத்ப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் 4ஜி சிம்கார்டு மூலமாக நேரடியாக இணைய வசதியை பெறும் வசதி உள்ளது. தவிரவும், புளூடூத் மூலமாக ஸ்மார்ட்போனுடன் இணைத்துக் கொள்ள முடியும்.

நேரடி இன்டர்நெட் வசதியுடன் புதிய ரிவோல்ட் ஆர்400 மின்சார பைக் அறிமுகம்!

பைக்கை ஸ்மார்ட்போன் செயலி மூலமாகவும், வாய்ஸ் கமாண்ட் முறையிலும் ஸ்டார்ட் செய்ய முடியும். இந்த பைக்கில் 4 விதமான புகைப்போக்கி சப்தங்களில் ஒன்றை உரிமையாளர் தேர்வு செய்து ஓட்ட முடியும். மேலும், பல விதமான புகைப்போக்கி சப்தங்களையும் விரைவில் பெறுவதற்கான அட்டேட் கொடுக்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரடி இன்டர்நெட் வசதியுடன் புதிய ரிவோல்ட் ஆர்400 மின்சார பைக் அறிமுகம்!

இந்த பைக்கில் இருக்கும் பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 156 கிமீ தூரம் பயணிக்க முடியும் என்று அராய் சான்று அளித்துள்ளது. பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 4 மணிநேரம் பிடிக்குமாம்.

நேரடி இன்டர்நெட் வசதியுடன் புதிய ரிவோல்ட் ஆர்400 மின்சார பைக் அறிமுகம்!

பேட்டரியை எளிதாக கழற்றி எடுத்துச் சென்று சார்ஜ் ஏற்ற முடியும். மேலும், ஸ்மார்ட்போன் செயலி மூலமாக, சார்ஜ் ஏற்றப்பட்ட நிலையில் பேட்டரியை பெறும் திட்டத்தையும் ரிவோல்ட் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த பைக் மணிக்கு 85 கிமீ வேகம் வரை செல்லும் திறன் பெற்றிருக்கிறது.

நேரடி இன்டர்நெட் வசதியுடன் புதிய ரிவோல்ட் ஆர்400 மின்சார பைக் அறிமுகம்!

இந்த பைக்கின் முழுமையான தொழில்நுட்ப விபரங்கள் இன்று வெளியிடப்படவில்லை. இதன் பெயரில் 400 என்று இருந்தாலும், இது கேடிஎம் 390 பைக்குகளுக்கு ஒப்பானதாக இருக்காது. இது 125 சிசி திறன் கொண்ட பெட்ரோல் பைக்குகளுக்கு இணையான திறனை பெற்றிருக்கும் என்று தெரிகிறது.

நேரடி இன்டர்நெட் வசதியுடன் புதிய ரிவோல்ட் ஆர்400 மின்சார பைக் அறிமுகம்!

இந்த பைக்கின் முன்புறத்தில் அப்சைடு டவுன் ஃபோர்க்குகளும், பின்புறத்தில் மோனோஷாக் அப்சார்பரும் உள்ளன. டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. சப் ஃப்ரேமும் கொடுக்கப்பட்டு இருப்பது முக்கிய விஷயமாக கூறலாம்.

நேரடி இன்டர்நெட் வசதியுடன் புதிய ரிவோல்ட் ஆர்400 மின்சார பைக் அறிமுகம்!

புதிய ரிவோல்ட் ஆர்வி400 மின்சார பைக்கின் விலை விபரம் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 25ந் தேதி முதல் ரிவோல்ட் இணையதளத்திலோ அல்லது அமேஸான் தளத்தின் மூலமாக ரூ.1,000 முன்பணம் செலுத்தி முன்பதிவு செய்துகொள்ள முடியும். அடுத்த மாதம் டெலிவிரியும் துவங்கப்பட இருக்கிறது.

நேரடி இன்டர்நெட் வசதியுடன் புதிய ரிவோல்ட் ஆர்400 மின்சார பைக் அறிமுகம்!

முதலாவதாக டெல்லியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. அடுத்த 4 மாதங்களில் சென்னை, பெங்களூர், மும்பை, புனே மற்றும் ஆமதாபாத் உள்ளிட்ட நகரங்களில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. ஃபேம்-2 திட்டத்தின் கீழ் மானியம் போக ரூ.1 லட்சம் ஆன்ரோடு விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ரிவோல்ட்
English summary
Revolt Intellicorp has finally unveiled today, India's first AI enabled electric bike, RV 400. Here are the most important things of Revolt RV 400. Read in Tamil.
Story first published: Tuesday, June 18, 2019, 15:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X