இனி ஒரே பேமண்ட்டில் ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கை வாங்கலாம் - விபரம் உள்ளே!

ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக்குகளை மாதத் தவணை மட்டுமின்றி, ஒரே தொகையாக கொடுத்து வாங்கும் வகையில் எக்ஸ்ஷோரூம் விலை அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

 ஒரே பேமண்ட்டில் ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கை வாங்கலாம்!

ரிவோல்ட் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ரிவோல்ட் ஆர்வி300 என்ற மாடல் ஒரு வேரியண்ட்டிலும், ஆர்வி400 என்ற மாடல் ஸ்டான்டர்டு மற்றும் பிரிமீயம் என இரண்டு வேரியண்ட்டுகளிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டன.

 ஒரே பேமண்ட்டில் ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கை வாங்கலாம்!

ரிவோல்ட் ஆர்வி300 பைக் ரூ.2,999 மாதத் தவணையிலும், ரிவோல்ட் ஆர்வி300 ஸ்டான்டர்டு வேரியண்ட்டானது ரூ.3,499 மாதத் தவணையிலும், ரிவோல்ட் ஆர்வி400 பிரிமீயம் வேரியண்ட்டானது ரூ.3,999 விலையிலும் 37 மாதங்களில் திருப்பி செலுத்தும் கால அளவுடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

 ஒரே பேமண்ட்டில் ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கை வாங்கலாம்!

இந்த மாதத் தவணையில் இந்த எலெக்ட்ரிக் பைக்கிற்கான பராமரிப்பு செலவுகள், இன்ஸ்யூரன்ஸ், பதிவுக் கட்டணம் உள்ளிட்டவை அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டதால், வாடிக்கையாளர்கள் போட்டா போட்டி முன்பதிவு செய்தனர்.

 ஒரே பேமண்ட்டில் ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கை வாங்கலாம்!

முதல் கட்டமாக டெல்லி உள்ளடக்கிய வட மத்திய பிராந்திய பகுதிகளில் உள்ள நகரங்களில் விற்பனைக்கு வந்த நிலையில், புனே நகரில் புதிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நாட்டின் பிற முக்கிய நகரங்களில் விரைவில் ஷோரூம்கள் திறக்கப்பட இருக்கின்றன.

 ஒரே பேமண்ட்டில் ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கை வாங்கலாம்!

இந்த நிலையில், மாதத் தவணை இல்லாமல் நேரடியாக ஒரே தொகையாக செலுத்தி ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்குகளை வாங்குவதற்கான வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ரிவோல்ட் ஆர்வி300 பைக் ரூ.84,999 எக்ஸ்ஷோரூம் விலையிலும், ஆர்வி400 பிரிமீயம் வேரியண்ட் ரூ.98,999 எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 ஒரே பேமண்ட்டில் ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கை வாங்கலாம்!

இதில், இன்ஸ்யூரன்ஸ், வாகனப் பதிவு கட்டணம், 4ஜி இன்டர்நெட் கட்டணம் ரூ.5,000 ஆகியவற்றை தனியாக செலுத்த வேண்டி இருக்கும். அடக்க விலை என்பது கூடுதலாக இருக்கும். ஆர்வி400 ஸ்டான்டர்டு வேரியண்ட்டிற்கு விலை அறிவிக்கப்படவில்லை. மாதத் தவணை திட்டத்தில் மட்டுமே கிடைக்கும்.

MOST READ: 4 மீட்டரில் ஒரு 7 சீட்டர் 'மேஜிக்'... புதிய ரெனோ ட்ரைபர் ஃபர்ஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!

 ஒரே பேமண்ட்டில் ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கை வாங்கலாம்!

ரிவோல்ட் ஆர்வி300 எலெக்ட்ரிக் பைக்கில் 1.5 kW திறன் வாய்ந்த எலெக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடல் 65 கிமீ வேகம் வரை செல்லும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் ஈக்கோ மோடில் வைத்து ஓட்டும்போது 180 கிமீ தூரம் வரை பயணிக்குமாம். சாதாரண மோடில் 110 கிமீ தூரமும், ஸ்போர்ட் மோடில் வைத்து ஓட்டும்போது 80 கிமீ தூரமும் பயணிப்பதற்கான சார்ஜை வழங்கும்.

MOST READ:பெனெல்லி லியோன்சினோ 250 பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

 ஒரே பேமண்ட்டில் ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கை வாங்கலாம்!

ரிவோல்ட் ஆர்வி400 எலெக்ட்ரிக் பைக் மாடலில் 3.24 kW திறன் வாய்ந்த லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த மாடலானது மணிக்கு 85 கிமீ வேகம் வரை செல்லும். பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 156 கிமீ தூரம் வரை பயணிக்கும். இதன் பேட்டரியை தனியாக கழற்றி மாட்டும் வசதியையும் அளிக்கிறது.

MOST READ: டீலர்ஷிப்பின் பெயரில் மோசடி... வாடிக்கையாளர்களை எச்சரிக்கைப்படுத்திய ஜாவா மோட்டார்ஸ்!

 ஒரே பேமண்ட்டில் ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்கை வாங்கலாம்!

முதல் லாட்டில் அறிவிக்கப்பட்ட அனைத்து ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 பைக்குகளுக்கான முன்பதிவு முடிந்து விற்று தீர்ந்துவிட்டன. அடுத்து நவம்பர்- டிசம்பர் காலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 பைக்குகளுக்கு தற்போது முன்பதிவு ஏற்கப்படுகிறது.

Via- Rushlane

Most Read Articles

மேலும்... #ரிவோல்ட்
English summary
Revolt has revealed one time payment option for RV300 electric bike and RV400 Premium variants.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X