ரிவோல்ட் ஆர்வி400 Vs ஆர்வி300: வித்தியாசம் என்ன..? எது பெஸ்ட்...?

ரிவோல்ட் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள இரு மாடல் எலெக்ட்ரிக் பைக்குகளில் எது சிறந்த மாடல் என்பதை இந்த பதிவில் காணலாம்.

ரிவோல்ட் ஆர்வி400 Vs ஆர்வி300: வித்தியாசம் என்ன..? எது பெஸ்ட்...?

ரிவோல்ட் மோட்டார்ஸ் நிறுவனம், அதன் புத்தம் புதிய இரு மாடல் எலெக்ட்ரிக் பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ரிவோல்ட் ஆர்வி400 இந்த மாடல்களைதான் அது களமிறக்கியுள்ளது.

இந்த இரு மோட்டார்சைக்கிள்களிலும் இந்திய இருசக்கர வாகனச் சந்தை இதுவரை காணாத தொழில்நுட்பத்தைப் பெற்று அறிமுகமாகியுள்ளது. அந்தவகையில், செயற்கை நுண்ணறிவு (ஆட்டோ இன்டலிஜென்ஸ்) என்ற அம்சம் இதில் வழங்கப்பட்டுள்ளது.

ரிவோல்ட் ஆர்வி400 Vs ஆர்வி300: வித்தியாசம் என்ன..? எது பெஸ்ட்...?

இந்த இரு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்களும் தற்போது தலைநகர் டெல்லி மற்றும் புனே ஆகிய இரு மாநிலங்களில் மட்டும் விற்பனைக்குக் கிடைக்கின்றன. தொடர்ந்து நாட்டின் மற்ற முக்கிய நகரங்களில் அறிமுகம் செய்யும் பணியில் ரிவோல்ட் ஈடுபட்டு வருகின்றது.

ரிவோல்ட் ஆர்வி400 Vs ஆர்வி300: வித்தியாசம் என்ன..? எது பெஸ்ட்...?

இந்த பைக்குகளுக்கான புக்கிங், அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளம் மற்றும் அமேசான் ஆன்லைன் வர்த்த தளத்தில் நடைபெற்று வருகிsன்றது. இதற்கு முன்தொகையாக ரூ. 1000 வசூலிக்கப்படுகின்று. இத்துடன், இந்த எலெக்ட்ரிக் பைக்குகளுக்கான புக்கிங் ஆஃப்லைன் முறையில் டீலர்களிடமும் நடைபெற்று வருகின்றது.

ரிவோல்ட் ஆர்வி400 Vs ஆர்வி300: வித்தியாசம் என்ன..? எது பெஸ்ட்...?

தற்போது முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்குகள் டெலிவரி செய்யப்பட இருப்பதாக அந்நிர்வாகம் கூறியுள்ளது.

ரிவோல்ட் ஆர்வி400 Vs ஆர்வி300: வித்தியாசம் என்ன..? எது பெஸ்ட்...?

ரிவோல்ட் அறிமுகம் செய்துள்ள இரு எலெக்ட்ரிக் பைக்குகளும் பார்ப்பதற்கு ட்வின் மாடலைப் போன்று காட்சியளித்தாலும், அவற்றிற்கு இடையே பல வித்தியாசங்கள் காணப்படுகின்றன.

வித்தியாசங்கள் சில காணப்பட்டாலும், இரு எலெக்ட்ரிக் பைக்குகளிலும் ஒற்றுமையான சில அம்சங்களும் இருக்கின்றன. ஆகையால், இவற்றை முதலில் பார்த்துவிடலாம்.

ரிவோல்ட் ஆர்வி400 Vs ஆர்வி300: வித்தியாசம் என்ன..? எது பெஸ்ட்...?

ரிவோல்ட் ஆர்வி 300 மற்றும் ஆர்வி 400 ஆகிய எலெக்ட்ரிக் பைக்குகளில், ஒரே மாதிரியான எல்இடி தரத்திலான ஹெட்லேம்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், வால் பகுதி மின் விளக்கு, டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், இன்வெர்டட் முன்பக்க ஃபோர்க், மோனோசாக் சஸ்பென்ஷன் மற்றும் டிஸ்க் பிரேக்கு உள்ளிட்டவையும் ஒரே மாதிரியானதாக இருக்கின்றது.

அனைத்தும் ஒரே மாதிரியானதாக இருக்க இதில் என்ன வித்தியாசம் இருக்க முடியும் என்று தானே கேட்கிறீர்கள். அதைத்தான் கீழே காண இருக்கின்றோம்.

ரிவோல்ட் ஆர்வி400 Vs ஆர்வி300: வித்தியாசம் என்ன..? எது பெஸ்ட்...?

தோற்ற வித்தியாசம்:

இரு மின் மோட்டார்சைக்கிள்களும் கிட்டதட்ட காட்சி தோற்றத்தில் ஒரே மாதிரியானதாக இருக்கின்றன. இருப்பினும், கணிசமான மாறுபாட்டை அவை பெற்றிருக்கின்றன.

அந்தவகையில், செதுக்கப்பட்ட மற்றும் ஸ்போர்ட்டி டிசைன் இரு மாடல்களுக்கும் இடையே உள்ள வித்தியாசமாக இருக்கினறது.

ரிவோல்ட் ஆர்வி400 Vs ஆர்வி300: வித்தியாசம் என்ன..? எது பெஸ்ட்...?

அந்தவகையில், ஆர்வி 300 எலெக்ட்ரிக் பைக்கில் சற்று மாறுபட்ட தோற்றமாக கிராஃபிக்ஸ், பிரேண்ட் லோகோ இடம்பெற்றிருக்கும் இடம் மற்றும் நிறத் தேர்வு உள்ளிட்டவை வித்தியாசமானதாக இருக்கின்றன. அவை, இரு மாடல்களுக்குமான வித்தியாசத்தை வழங்குகின்றன.

இதில், ஆர்வி 300 மாடல் நியான் கருப்பு மற்றும் ஸ்மோக்கி க்ரே ஆகிய நிறங்களில் கிடைக்கின்றது. அதேபோன்று, ஆர்வி400 ரிபெல் சிவப்பு மற்றும் காஸ்மிக் பிளாக் ஆகிய நிறங்களில் கிடைக்கின்றது.

ரிவோல்ட் ஆர்வி400 Vs ஆர்வி300: வித்தியாசம் என்ன..? எது பெஸ்ட்...?

பேட்டரி மற்றும் ரேஞ்ச்:

உடல் தோற்றத்தில் எப்படி கணிசமான மாறுபாட்டை அவை பெற்றிருக்கின்றனவோ, அதேபோன்று பேட்டரி திறன் மற்றும் ரேஞ்ச் உள்ளிட்டவற்றிலும் வித்தியாசத்தைக் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில், ஆர்வி300 எலெக்ட்ரிக் பைக் சிறிய ரேஞ்சைக் கொண்ட பேட்டரி பேக்கைப் பெற்றதாக இருக்கின்றது. அதன் திறன் 60v/2.7kW ஆக இருக்கின்றது. அதேபோன்று, ஆர்வி400 72v/3.24kW ஆக இருக்கின்றது.

ரிவோல்ட் ஆர்வி400 Vs ஆர்வி300: வித்தியாசம் என்ன..? எது பெஸ்ட்...?

ஆகையால், ஆர்வி300 எலெக்ட்ரிக் பைக்கைக் காட்டிலும், ஆர்வி400 மாடல் அதிக தூரம் செல்லும் திறனைக் கொண்டுள்ளது. ஆர்வி 300 மாடல் ஒரு முழுமையான சார்ஜில் 180 கிமீ தூரம் வரை செல்ல உதவும். மேலும், இதில் ஈகோ, நார்மல் மற்றும் ஸ்போர்ட் உள்ளிட்ட மோட்கள் காணப்படுகின்றது.

ரிவோல்ட் ஆர்வி400 Vs ஆர்வி300: வித்தியாசம் என்ன..? எது பெஸ்ட்...?

இதில், ஈகோ மோட் மணிக்கு 25 கிமீ வேகத்தில் மட்டுமே செல்லும். மேலும், இந்த மோடில் பயணித்தால் 180 கிமீ வரை பயணிக்க முடியும். அதேபோன்று, சாதாரண மோடில் பயணிக்கும்போது மணிக்கு 45 கிமீ வேகத்தில் செல்ல முடியும். இதனைப் பயன்படுத்தினால் 110 கிமீ தூரம் வரை செல்ல முடியும்.

ரிவோல்ட் ஆர்வி400 Vs ஆர்வி300: வித்தியாசம் என்ன..? எது பெஸ்ட்...?

இதற்கு அடுத்தபடியாக, ஸ்போர்ட் மோட் உள்ளது. இந்த மோடைப் பயன்படுத்தி செல்லும்போது மணிக்கு அதிகபட்சமாக 85 கிமீ வேகத்தில் செல்ல முடியும். மேலும், இந்த வேகத்தில் சென்றால் அதன் ரேஞ்ச் விகிதம் 80 கிமீட்டராக குறைந்துவிடுகின்றது.

ரிவோல்ட் ஆர்வி400 Vs ஆர்வி300: வித்தியாசம் என்ன..? எது பெஸ்ட்...?

ஆர்வி400 மாடலிலும் இதே மோட்கள்தான் காணப்படுகின்றன. ஆனால், இந்த எலெக்ட்ரிக் பைக்கின் பேட்டரி திறன் சற்று கூடுதலாக இருப்பதால் ஆர்வி300 மாடலைக் காட்டிலும் சற்று அதிகமான ரேஞ்சை வழங்குகின்றது.

ரிவோல்ட் ஆர்வி400 Vs ஆர்வி300: வித்தியாசம் என்ன..? எது பெஸ்ட்...?

அந்தவகையில், ஆர்வி400 மாடலை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், 150 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதனை ஈகோ மோடில் வைத்து பயணிக்கும்போது மணிக்கு 45 கிமீ வேகத்தில் செல்லும்.

அதேசமயம், இதனை சாதாரண மோடில் பயன்படுத்தும்போது 110 கிமீ ரேஞ்சையும், மணிக்கு 65 கிமீ என்ற வேகத்தையும் வழங்குகின்றது. மேலும், ஸ்போர்ட் மோடில் ஆர்வி 300 மாடலைப் போன்றே 80 கிமீ ரேஞ்சையும், 85 கிமீ என்ற வேகத்தையும் வெளிப்படுத்துகின்றது.

ரிவோல்ட் ஆர்வி400 Vs ஆர்வி300: வித்தியாசம் என்ன..? எது பெஸ்ட்...?

ஸ்பெஷிஃபிகேஷன்கள்:

வித்தியாசமான வேகம் மற்றும் ரேஞ்சை பார்க்கையிலேயே நமக்கு தெரிகின்றது, ரிவோல்ட் ஆர்வி300 மற்றும் ஆர்வி400 மாடல்கள் மாறுபட்ட திறன் கொண்ட மின் மோட்டார்களைப் பெற்றிருக்கும் என. அதற்கேற்ப வகையில், ஆர்வி300 மாடலில் 1.5kW மின் மோட்டாரும், ஆர்வி 400 மாடலில் 3kW மின் மோட்டாரும் நிறுவப்பட்டுள்ளது.

ரிவோல்ட் ஆர்வி400 Vs ஆர்வி300: வித்தியாசம் என்ன..? எது பெஸ்ட்...?

ஆனால், இந்த இரு மாடல்களிலும் சஸ்பென்ஷன் அமைப்பு ஒரே மாதிரியானதாக இருக்கின்றது. அந்தவகையில், இரு பைக்குகளின் முன் பக்கத்திலும் யுஎஸ்டி ஃபோர்க்கும், பின்பக்கத்தில் முழுமையாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மோனோஷாக் அப்சார்பரும் நிறுவப்பட்டுள்ளது. இருப்பினும், பிரேக்கிங் வசதியில் இரண்டும் வித்தியாசமானதாக காணப்படுகின்றது.

ரிவோல்ட் ஆர்வி400 Vs ஆர்வி300: வித்தியாசம் என்ன..? எது பெஸ்ட்...?

அவ்வாறு, ஆர்வி 300 எலெக்ட்ரிக் பைக்கில் 240 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக் முன்பக்கத்திலும், 180மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக் பின்பக்கத்திலும் காணப்படுகின்றது. அதேபோல, ஆர்வி400 மாடலிலும் 240 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக்குகளே காணப்படுகின்றன. ஆனால், ஆர்வி300 மாடலைப்போன்று அல்லாமல், இரு புறத்திலும் 240 மிமீ அளவுள்ள டிஸ்க் பிரேக் இடம்பெற்றிருக்கின்றது. இத்துடன், சிபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கூடுதலாக கொடுக்கப்பட்டுள்ளது.

ரிவோல்ட் ஆர்வி400 Vs ஆர்வி300: வித்தியாசம் என்ன..? எது பெஸ்ட்...?

தொடர்ந்து, எடையிலும் சற்று வித்தியாசம் கொண்டதாக ரிவோல்ட் எலெக்ட்ரிக் பைக்குகள் இருக்கின்றன. அந்தவகையில், ஆர்வி 400 மாடலைக் காட்டிலும் 7கிலோ குறைவானதாக ஆர்வி 300 இருக்கின்றது. ஆர்வி 400 எடை 108 கிலோவாக உள்ளது.

ரிவோல்ட் ஆர்வி400 Vs ஆர்வி300: வித்தியாசம் என்ன..? எது பெஸ்ட்...?

இதேபோல, வீல் பேஸ் மற்றும் கிரவுண்ட் கிளியரன்ஸும் மாறுபட்டதாக இருக்கின்றது. அவ்வாறு, ஆர்வி 300 மாடல் எலெக்ட்ரிக் பைக்கின் வீல் பேஸ் 1320 மிமீட்டராகவும், 225மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆர்வி400 பைக்கின் வீல் பேஸ் 1350 ஆகவும், கிரவுணட் கிளியரன்ஸ் 215 மிமீட்டராகவும் இருக்கின்றது. இதன் இருக்கை உயரம் 814 மிமீட்டராக உள்ளது.

ரிவோல்ட் ஆர்வி400 Vs ஆர்வி300: வித்தியாசம் என்ன..? எது பெஸ்ட்...?

விலை:

ரிவோல்ட் மோட்டார்ஸ், இரு மின் மோட்டார் சைக்கிள்களுக்கும் தனித்துவமான மற்றும் முற்றிலும் வித்தியாசமான கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அவ்வாறு, ஆர்வி300 மற்றும் ஆர்வி400 மோட்டார் சைக்கிள்களுக்கு இஎம்ஐ முறையிலான மாதாந்திர கட்டணத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ரிவோல்ட் ஆர்வி400 Vs ஆர்வி300: வித்தியாசம் என்ன..? எது பெஸ்ட்...?

ஆர்வி300 பைக்கிற்கு ரூ.2,999 மாதத் தவணையும், ஆர்வி400 பேஸ் மாடலுக்கு ரூ.3,499 மாதத் தவணையும், பிரிமீயம் மாடலுக்கு ரூ.3,999 மாதத் தவணையிலும் கிடைக்கின்றன. இந்த தவனை முறையில் 37 மாதங்களில் திருப்பி செலுத்தும் கால அவகாசம் கொடுக்கப்படுகின்றது. அதாவது, முன்பணம் இல்லாமல், இலவச பதிவு, இன்சூரன்ஸ் உள்ளிடவற்றுடன் இந்த மின்சார பைக்குகள் கிடைக்க இருக்கின்றன.

ரிவோல்ட் ஆர்வி400 Vs ஆர்வி300: வித்தியாசம் என்ன..? எது பெஸ்ட்...?

மேற்கூறிய தகவல் அனைத்தையும் பார்க்கையிலேயே உங்களுக்கு புரிந்திருக்கும் என நாங்கள் நம்புகின்றோம். இதில் ஆர்வி 400 மாடல்தான் சிறந்தது என கண்டுபிடித்திருப்பீர்கள். எங்களின் அறிவுறுத்தலும் அதேதான். ஏனென்றால், இந்த மாடல், அதிக தூர பயணம், வேகம் உள்ளிட்டவற்றில் மிகச் சிறப்பானதாக காட்சியளிக்கின்றது. ஆகையால், விலைக்கேற்ற மாடலாக அது இருக்கும்.

Most Read Articles
English summary
Revolt RV400 Vs RV300: What Is The Difference?. Read In Tamil.
Story first published: Saturday, August 31, 2019, 18:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X