ஏப்ரல் 1க்கு முன்னதாகவே பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள்...

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் அடுத்த தலைமுறைக்கான சிங்கிள்-சிலிண்டர் மோட்டார்சைக்கிள்களை தீவிரமாக சோதனையில் ஈடுப்படுத்தி வருகிறது. இதனால் இந்த பைக்குகளின் அறிமுகத்தை விரைவில் எதிர்பார்க்கலாம். அதாவது 2020 ஏப்ரல் 1ஆம் தேதிக்கு முன்பாகவே இந்த பைக்குகளின் தயாரிப்புகள் அனைத்தும் நிறைவடைந்துவிடும் என கூறப்படுகிறது.

ஏப்ரல் 1க்கு முன்னதாகவே பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள்...

குறிப்பிட்ட நேரத்திற்குள் புதிய சிங்கிள்-சிலிண்டர் ஃப்ளாட்ஃபாரம் தயாராகாவிட்டாலும், ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் பிஎஸ்6 தரத்திற்கு பைக்குகளை அப்டேட் செய்யும் வேலையில் இறங்கிவிடும்.

ஏப்ரல் 1க்கு முன்னதாகவே பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள்...

இந்நிறுவனத்தின் புதிய தலைமுறை பைக்குகள் அடுத்த ஆண்டு முதல்-கால்பகுதியில் தான் தயாராக இருக்கும். ஏனெனில் தற்சமயம் பிஎஸ்4 பைக்குகள் தான் பிஎஸ்6-க்கு மேம்படுத்தப்பட்டு வருவதாக ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 1க்கு முன்னதாகவே பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள்...

மேலும் ராயல் எண்ட்பீல்டு 350சிசி பைக்குகள் ஃப்யூல்-இன்ஜெக்‌ஷன் தரத்திற்கும் அப்டேட் செய்யப்பட்டு வருகின்றன. இந்த அப்டேட்டால் இவற்றின் விலை சிறிது அதிகரிக்கப்படவுள்ளது. தற்போதைய 350சிசி பைக்குகள் ரூ.1.2 லட்சத்தில் இருந்து ரூ.1.64 லட்சம் வரை எக்ஸ்ஷோரூமில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஏப்ரல் 1க்கு முன்னதாகவே பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள்...

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தில் இருந்து 350சிசி பைக்குகளாக சந்தையில் புல்லட், கிளாசிக், தண்டர்பேர்டு, ட்ரைல்ஸ் மற்றும் தண்டர்பேர்டு எக்ஸ் உள்ளிட்ட மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

ஏப்ரல் 1க்கு முன்னதாகவே பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள்...

இவ்வாறு புதிய தலைமுறைக்கு ராயல் எண்ட்பீல்டு பைக்குகள் மாற்றப்படவுள்ளதால் பைக்குகளில் வித்தியாசமான சேசிஸ் டிசைன், சிறந்த தொழிற்நுட்பம் மற்றும் மேம்படுத்தப்பட்ட ரைடிங் பயணம் உள்ளிட்டவை கொண்டுவரப்படவுள்ளன. இந்த மேம்பாடுகளுடன் பிஎஸ்6 தரத்திற்கு பைக்குகள் மாற்றப்படவுள்ளதால், தற்போதைய மாடல்களில் உள்ள புஷ்-ராட் சிஸ்டம் பொருத்தப்படுவது நிறுத்தப்படவுள்ளது.

ஏப்ரல் 1க்கு முன்னதாகவே பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள்...

இத்தகைய அப்டேட்கள் குறித்து ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் கூறுகையில், எங்களது நிறுவனம் பிஎஸ்6 பைக்குகளை அரசாங்கம் நிர்ணயித்துள்ள காலக்கெடுவுக்குள் அறிமுகப்படுத்த அனைத்து விதத்திலும் தயாராக உள்ளது. பிஎஸ்6 பைக்குகளின் அறிமுகம் குறித்த அறிவிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும் என கூறியுள்ளது.

ஏப்ரல் 1க்கு முன்னதாகவே பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள்...

புதிய தலைமுறைக்காக பைக்குகளில் எந்தெந்த தொழிற்நுட்பங்களை ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் பொருத்தவுள்ளது என்பது குறித்த தகவல் தெரியவரவில்லை. இருப்பினும் இந்த புதிய தலைமுறை பைக்குகளை புதிய ஃப்ளாட்ஃபாரத்தின் மூலமாக தான் இந்நிறுவனம் சோதனையிடும் என்பது உறுதி.

ஏப்ரல் 1க்கு முன்னதாகவே பிஎஸ்6 தரத்திற்கு மாற்றப்படும் ராயல் எண்ட்பீல்டு பைக்குகள்...

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தில் இருந்து எந்தவொரு பைக்கும் ஐக்மா 2019 கண்காட்சியில் பங்கேற்கவில்லை. இதனால் இந்நிறுவனத்தின் புதிய பைக்குகளின் அறிமுகம் எதுவும் சில மாதங்களுக்கு இல்லை என்பது தெளிவாகிறது.

Most Read Articles
English summary
Royal Enfield’s 350cc Line Up To Get BS6 Compliant Engines Before 1 April Deadline
Story first published: Wednesday, December 4, 2019, 11:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X