500சிசி பைக்குகளின் தயாரிப்பை நிறுத்தவுள்ள ராயல் எண்ட்பீல்டு... இதுதான் காரணம்

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் தனது 500சிசி மோட்டார்சைக்கிள்களின் தயாரிப்பை அடுத்த ஆண்டு முதல் நிறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் இந்த முடிவுக்கு காரணம், ஏப்ரல் 1ஆம் தேதி முதல் பிஎஸ்6 தரத்தில் தான் வாகனங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் ஆணையே.

500சிசி பைக்குகளின் தயாரிப்பை நிறுத்தியது ராயல் எண்ட்பீல்டு... இதுதான் காரணம்

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் தற்சமயம் 500சிசி-ல் தண்டர்பேர்டு, கிளாசிக், புல்லட் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. இந்த தயாரிப்பு நிறுத்தம் குறித்து இந்நிறுவனம் கூறுகையில், பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்தப்பட்ட 500சிசி பைக்குகள் இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்த போவது இல்லை.

500சிசி பைக்குகளின் தயாரிப்பை நிறுத்தியது ராயல் எண்ட்பீல்டு... இதுதான் காரணம்

ஏனெனில் இத்தகைய பைக்குகளை புதிய மாசு உமிழ்வு விதிக்கு உட்பட்ட முறையில் மாற்றுவது மிகவும் செலவு பிடித்த விஷயமாக உள்ளது. இது மட்டுமில்லாமல் 500சிசி பைக்குகள் விற்பனையிலும் பெரிய அளவில் சோபிப்பதில்லை என கூறியுள்ளது. மேலும் ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் அதிகளவிலான தேவையின் காரணமாக தற்போது 350சிசி பைக்குகளை பிஎஸ்6க்கு அப்டேட் செய்யும் வேலையில் தான் தீவிரமாக பணியாற்றி வருகிறதாம்.

500சிசி பைக்குகளின் தயாரிப்பை நிறுத்தியது ராயல் எண்ட்பீல்டு... இதுதான் காரணம்

500சிசி பைக் மட்டுமின்றி விற்பனையாகி வரும் 350சிசி மற்றும் 500சிசி பைக்குகளின் புஷ்-ராட் கட்டமைப்பு கொண்ட வெர்சன்களின் தயாரிப்புகளும் நிறுத்தப்பட உள்ளதாக ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் கூறியுள்ளது. இந்த வெர்சன் பைக்குகளை தவிர்த்து உள்ள மற்ற அனைத்து 350சிசி வேரியண்ட்களும் புதிய என்ஜின் அமைப்பை பெறவுள்ளன.

500சிசி பைக்குகளின் தயாரிப்பை நிறுத்தியது ராயல் எண்ட்பீல்டு... இதுதான் காரணம்

2009ஆம் ஆண்டில் சந்தையில் ஏற்பட்ட 500சிசி பைக்குகளின் தேவையால் ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் முதன்முறையாக 500சிசி ஏவிஎல் என்ஜினை கொண்ட பைக்குகளை அறிமுகப்படுத்தியது. இந்த 500சிசி பைக்குகளின் விற்பனை 12,216 யூனிட்கள் விற்பனையான 2013ஆம் ஆண்டை விட இந்த ஆண்டில் வெறும் மூன்று மடங்கு தான் பெருகி 36,093 யூனிட்டாக உள்ளது.

500சிசி பைக்குகளின் தயாரிப்பை நிறுத்தியது ராயல் எண்ட்பீல்டு... இதுதான் காரணம்

அதுவே 350சிசி பைக்குகளின் விற்பனையை பார்த்தால் 2013ல் 1.08 லட்சமாக இருந்த எண்ணிக்கை இந்த வருடத்தில் சுமார் 7 மடங்கு அதிகரித்து 7.64 லட்சமாக உள்ளது. 350சிசி பைக்குகள் கிட்டத்தட்ட 500சிசி மோட்டார்சைக்கிளின் தோற்றத்தையும் அவற்றை விட குறைவான விலையிலும் உள்ளதால் இதன்பின் 500சிசி பைக்குகளுக்கு தேவை ஏற்பட்டாலும் தயாரிப்பு மறுபடியும் தொடங்கப்படாது என்றே தெரிகிறது. இரண்டிற்கும் இடையேயுள்ள தொழிற்நுட்ப வேறுபாடுகளை தவிர்க்க ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் ஏதாவது ஒரு திட்டத்தை வைத்திருக்கும்.

500சிசி பைக்குகளின் தயாரிப்பை நிறுத்தியது ராயல் எண்ட்பீல்டு... இதுதான் காரணம்

500சிசி பைக்குகளில் விஷேச மாடலாக விளங்கிய கிளாசிக் 500 பெகாசஸ் அறிமுகமான புதியதில் மிகவும் சிறப்பான முறையில் விற்பனையானது. இரண்டாம் உலக போரின்போது அறிமுகப்படுத்தப்பட்ட ராயல் எண்ட்பீல்டு ஃபிளையிங் ஃபிளே பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருந்த இந்த கிளாசிக் 500 பெகாசஸ் பைக், இணைய ஃப்ளாஷ் விற்பனையில் வெறும் 3 நிமிடங்களில் அனைத்தும் விற்பனையாகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இதன் விலை ஆன் ரோடில் ரூ.2.45 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது.

500சிசி பைக்குகளின் தயாரிப்பை நிறுத்தியது ராயல் எண்ட்பீல்டு... இதுதான் காரணம்

500சிசி மோட்டார்சைக்கிள்களால் அப்டேட்டான தற்போதைய தலைமுறை என்ஜின் உடன் வெளியாகி வரும் பைக்குகளுடன் போட்டியிட முடியவில்லை. இதனால் ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் கடந்த 2018-19 பொருளாதார ஆண்டில் மட்டும் சுமார் 12,594 யூனிட் 500சிசி பைக்குகளை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்திருந்தது. இதுவும் 500சிசி பைக்குகளின் தயாரிப்பு நிறுத்தத்திற்கு காரணங்களுள் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

500சிசி பைக்குகளின் தயாரிப்பை நிறுத்தியது ராயல் எண்ட்பீல்டு... இதுதான் காரணம்

இந்நிறுவனத்தில் இருந்து வெற்றிகரமாக விற்பனையாகி வரும் மற்றொரு மாடலான 650சிசி பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்தாலும் இதன் டிசைன் முழுவதும் வெளிநாட்டு சந்தைக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது ஆகும். 500சிசி பைக்குகளின் வெற்றிடத்தை இந்த 650சிசி பைக்குகளின் மூலம் சரிசெய்துவிடலாம் என்று ராயல் எண்ட்பீல்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

500சிசி பைக்குகளின் தயாரிப்பை நிறுத்தியது ராயல் எண்ட்பீல்டு... இதுதான் காரணம்

இதனால் இந்த தயாரிப்பு நிறுத்தத்திற்கு பிறகு 650சிசி பைக்குகளான இண்டர்செப்டர் 650 மற்றும் காண்டினெண்டல் 650 மோட்டார்சைக்கிள்களை வெளிநாட்டு சந்தைக்கென முதன்மை மாடலாக இந்நிறுவனம் மாற்றிவிடும். இந்த இரு பைக்குகளின் விலை 500சிசி பைக்குகளை விட 45,000 ரூபாய் வரையில் அதிகமாக உள்ளது. ஆனால் இந்த பைக்குகளில் 500சிசி பைக்குகளின் தொழிற்நுட்பத்திற்கு ஏற்றாற்போல் மாற்றம் செய்ய வேண்டிய வேலை ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்திற்கு இருக்காது.

500சிசி பைக்குகளின் தயாரிப்பை நிறுத்தியது ராயல் எண்ட்பீல்டு... இதுதான் காரணம்

ராயல் எண்ட்பீல்டு நிறுவனத்தின் இந்த அதிரடி நடவடிக்கை சிறந்த முடிவே. இந்த முடிவை இந்நிறுவனம் எப்போதோ கையில் எடுக்கத்திருக்க வேண்டும். எப்படியிருந்தாலும் அடுத்த ஆண்டில் இருந்து 500சிசி பைக்குகள் இந்தியாவில் எங்கும் விற்பனையாக போவதில்லை என்பது உறுதி.

Most Read Articles
English summary
Royal Enfield’s 500cc Range To Be Discontinued Next Year: Will Not Upgrade To BS-VI Engines
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X