விற்பனையில் சக்கைபோடு போடும் ராயல் எண்ட்பீல்டு 650சிசி பைக்குகள்...

ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தங்களது முதல் 650சிசி மோட்டார்சைக்கிள்களை இந்திய மார்கெட்டில் அறிமுகம் செய்தது. அப்போதிலிருந்து சென்னையில் உள்ள ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் பெரியளவிலான விற்பனையை பதிவு செய்து வருகி்றது.

விற்பனையில் சக்கைபோடு போடும் ராயல் எண்ட்பீல்டு 650சிசி பைக்குகள்...

சென்னை ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் மட்டும் கடந்த 2019 செப்டம்பரில் 1,856 இண்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் 650 என்கிற 650-ட்வின்ஸ் பைக்குகளை விற்பனை செய்திருந்தது. தற்போது வரை இந்திய மார்கெட்டில் சிறந்த முறையில் விற்பனையாகி வரும் இந்த 650 சிசி ட்வின்ஸ் பைக்குகள் அவற்றின் போட்டி பைக்குகள் அனைத்தையும் விற்பனையில் முந்தியுள்ளது.

விற்பனையில் சக்கைபோடு போடும் ராயல் எண்ட்பீல்டு 650சிசி பைக்குகள்...

அதாவது 650-ட்வின்ஸ் பைக்குகளின் போட்டி பைக்குகளான கேடிஎம் ட்யூக் 390, பஜாஜ் டாமினர் 400, கவாஸாகி நிஞ்சா 300 மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 போன்றவை அனைத்தும் விற்பனையில் ராயல் எண்ட்பீல்டின் 650சிசி பைக்குகளுக்கு அடுத்து தான் உள்ளன.

கேடிஎம் ட்யூக் மற்றும் ஆர்சி 390 பைக்குகள் இரண்டும் சேர்த்து 398 யூனிட்டுகள் என்ற விற்பனையை கடந்த செப்டம்பரில் பதிவு செய்திருந்தன. அதேபோல் பஜாஜ் டாமினர் 400 பைக் 828 யூனிட்களும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்ஆர்310 பைக் 300 யூனிட்களும் அதே மாதத்தில் விற்பனையாகி இருந்தன.

விற்பனையில் சக்கைபோடு போடும் ராயல் எண்ட்பீல்டு 650சிசி பைக்குகள்...

இதே பிரிவில் உள்ள மற்ற மோட்டார்சைக்கிள்களான கவாஸாகி நிஞ்சா 300, ஹோண்டா சிபி300ஆர் மற்றும் யமஹா ஒய்எஃப்இசட்-ஆர்3 போன்றவை மிக குறைந்த விற்பனை யூனிட்களாக முறையே 119, 96, 32 பெற்றிருந்தன.

இதுமட்டுமன்றி ராயல் எண்ட்பீல்டு 650-ட்வின்ஸ் பைக்குகள் மிடில்-வெயிட் மோட்டார்சைக்கிள்களின் பிரிவிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த பிரிவில் ஹார்லி-டேவிட்சன் ஸ்ட்ரீட் ராட் மற்றும் ஸ்ட்ரீட் 750 போன்ற பைக்குகளுடன் கடுமையாக இந்த 650சிசி பைக்குகள் போட்டியிட்டு வருகின்றன.

விற்பனையில் சக்கைபோடு போடும் ராயல் எண்ட்பீல்டு 650சிசி பைக்குகள்...

இண்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் 650 என இரண்டு பைக்குகளுக்கும் ராயல் எண்ட்பீல்டு நிறுவனம் ஒரே 649சிசி இணையான-ட்வின் சிலிண்டர் லிக்யூடு கூல்டு என்ஜினை பொருத்தியுள்ளது. இந்த என்ஜின் 6 வேக நிலைகளை வழங்கக்கூடிய கியர்பாக்ஸுடன் 48 பிஎச்பி பவரையும் 52 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது.

விற்பனையில் சக்கைபோடு போடும் ராயல் எண்ட்பீல்டு 650சிசி பைக்குகள்...

மேலும் இந்த இரு பைக்குகளிலும் ஏராளமான நவீன தொழிற்நுட்ப அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. விலையும் கவர்ச்சிகரமாக குறைவாக உள்ளது. இவையே இந்திய சந்தையில் இந்த பைக்குகளின் தொடர் ஆதிக்கத்திற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. சென்னை தயாரிக்கப்படும் இந்த 650சிசி பைக்குகளில் ஹெட்லைட்ஸ் உள்பட சில அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்த விரிவான தகவல்கள் கீழேயுள்ள லிங்கில் உள்ளன.

விற்பனையில் சக்கைபோடு போடும் ராயல் எண்ட்பீல்டு 650சிசி பைக்குகள்...

கிளாசிக் ரெட்ரோ-டிசைன், பயணம் செய்வதற்கு ஏற்ற உடல் அமைப்பு, ஸ்லீப்பர் க்ளட்ச், ட்யூல்-சேனல் ஏபிஎஸ், பைரெல்லி போர்த்தப்பட்ட சக்கரங்கள், தேவைக்கு ஏற்றாற்போல் சரி செய்யும் விதத்திலான பின்புற சஸ்பென்ஷன் மற்றும் முன்புற சக்கரத்தில் 43 மிமீ டெலிஸ்கோப் ஃபோர்க்ஸ் மற்றும் மேலும் பல அம்சங்கள் ராயல் எண்ட்பீல்டு 650-ட்வின்ஸ் பைக்குகளில் உள்ளன.

விற்பனையில் சக்கைபோடு போடும் ராயல் எண்ட்பீல்டு 650சிசி பைக்குகள்...

ராயல் எண்ட்பீல்டு 650-ட்வின்ஸ் பைக்குகள் தான் தற்சமயம் இந்திய மார்கெட்டில் சிறந்த முறையில் விற்பனையாகும் ப்ரீமியம் மோட்டார்சைக்கிள்களாக உள்ளன. வடிவமைக்கப்பட்டுள்ள தொழிற்நுட்பத்திற்கு ஏற்ற விலையும் இல்லாமல் மிக குறைவாக ரூ.2.5 லட்சத்தில் இந்திய எக்ஸ்ஷோரூம்களில் இந்த ட்வின்ஸ் பைக்குகள் விற்கப்படுவதால், தனது 650சிசி பிரிவில் மட்டமல்லாமல் 300-400சிசி பிரிவிலும் ஹையர் மிடில்-வெயிட் கொண்ட பைக்குகளின் பிரிவிலும் ஆதிக்கத்தை தொடர்ந்து வருகின்றன.

Most Read Articles
English summary
Royal Enfield 650-Twin Sales: Becomes The Best-Selling Premium Motorcycles In The Country
Story first published: Monday, November 4, 2019, 18:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X