ராயல் என்ஃபீல்டு தலைமை செயல் அதிகாரியாக வினோத் கே தாசரி நியமனம்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக (CEO) வினோத் கே தாசரி நியமிக்கப்பட்டு இருக்கிறார். அவர் உடனடியாக பொறுப்பு ஏற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு தலைமை செயல் அதிகாரியாக வினோத் கே தாசரி நியமனம்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் பொறுப்புகளை இதுவரை சித்தார்த் லால் வகித்து வந்தார். இந்த நிலையில், நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் நோக்கில், தலைமை செயல் அதிகாரியாக வினோத் கே தாசரி நியமிக்கப்பட்டுள்ளார்.

ராயல் என்ஃபீல்டு தலைமை செயல் அதிகாரியாக வினோத் கே தாசரி நியமனம்!

இதுவரை இந்த பொறுப்பை வகிந்து வந்த சித்தார்த் லால் நிர்வாக இயக்குனராக தொடர்ந்து செயல்பட இருக்கிறார். இங்கிலாந்தில் உள்ள தொழில்நுட்ப பணிகளை கவனிப்பதற்காக அவர் இங்கிலாந்தில் இருக்கிறார். எனினும், வினோத் கே தாசரிக்கு தேவைப்படும் ஆலோசனைகளையும் சித்தார்த் லால் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

ராயல் என்ஃபீல்டு தலைமை செயல் அதிகாரியாக வினோத் கே தாசரி நியமனம்!

ஆட்டோமொபைல் துறையில் வினோத் கே தாசரி சிறந்த அனுபவம் வாய்ந்தவர். முன்னதாக அவர் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பு வகிந்து வந்தார்.

ராயல் என்ஃபீல்டு தலைமை செயல் அதிகாரியாக வினோத் கே தாசரி நியமனம்!

மேலும், 2013 முதல் 2015 வரையில் இந்திய ஆட்டோமொபைல் ஆராய்ச்சி மையத்தின்(அராய்) தலைவராகவும், 2015 முதல் 2017 வரை இந்திய வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பான சியாம் அமைப்பின் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர்.

ராயல் என்ஃபீல்டு தலைமை செயல் அதிகாரியாக வினோத் கே தாசரி நியமனம்!

புதிய தயாரிப்புகள் மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் களமிறங்குவதற்கான முக்கிய திட்டங்களை செயல்படுத்த ராயல் என்ஃபீல்டு திட்டமிட்டுள்ளது. இதற்காக, பொறுப்புகளை பகிர்ந்து கொள்ளும் விதத்தில் சித்தார்த் லால் மற்றும் நிறுவனத்தின் உயர்மட்ட குழு புதிய தலைமை செயல் அதிகாரியை நியமிக்க முடிவு செய்ததாக அந்நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராயல் என்ஃபீல்டு தலைமை செயல் அதிகாரியாக வினோத் கே தாசரி நியமனம்!

அமெரிக்க பல்கலைகழகங்களில் பட்டப்படிப்புகளை முடித்தவர். கடந்த 1988ம் ஆண்டு அமெரிக்காவின் லூயிஸ்வில்லே பல்கலைகழகத்தில் இளங்கலை பொறியியல் பட்டமும், சிகாகோவில் உள்ள மெக்கார்மிக் பொறியியல் பல்கலையில் முதுகலை பொறியியல் பட்டமும், இல்லினாய்ஸ் பகுதியில் உள்ள கெலாக் நிர்வாக பல்கலைகழகத்தில் எம்பிஏ பட்டமும் முடித்தவர் வினோத் கே தாசரி.

ராயல் என்ஃபீல்டு தலைமை செயல் அதிகாரியாக வினோத் கே தாசரி நியமனம்!

இதனிடையே, நடப்பு நிதி ஆண்டிற்காக ரூ.700 கோடியை ராயல் என்ஃபீல்டு முதலீடு செய்ய இருக்கிறது. பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மோட்டார்சைக்கிள்களை மேம்படுத்துவதற்கும், ஆலை விரிவாக்கப் பணிகளுக்கும் இந்த முதலீடு பயன்படுத்தப்படும்.

Most Read Articles
English summary
Royal Enfield has appointed Vinod K Dasari as the new CEO of the company. Dasari will take over the role from Siddhartha Lal with immediate effect.
Story first published: Thursday, April 4, 2019, 16:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X