புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மாடல்கள் அறிமுகம்!

கூடுதல் பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மோட்டார்சைக்கிள் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மாடல்கள் அறிமுகம்!

கடந்த 1ந் தேதி முதல் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் புதிய இருசக்கர வாகனங்களில் சிபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொடுப்பது கட்டாயமாக்கப்பட்டது. அதாவது, 125 சிசி திறன் வரை கொண்ட இருசக்கர வாகனங்களில் சிபிஎஸ் பிரேக்கும், அதற்கு மேலான சிசி திறன் கொண்ட இருசக்கர வாகனங்களில் ஏபிஎஸ் பிரேக்கும் கட்டாயமாகியது.

புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மாடல்கள் அறிமுகம்!

இதன் பொருட்டு, ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புல்லட் 350 மற்றும் புல்லட் 350 ES ஆகிய இரண்டு மாடல்களிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டத்துடன் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. புல்லட் 350 ஏபிஎஸ் மாடலுக்கு ரூ.1.21 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாகவும், புல்லட் 350 ES ABS மாடலுக்கு ரூ.1.35 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையாகவும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மாடல்கள் அறிமுகம்!

இரண்டு மாடல்களிலுமே சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக்தான் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஏபிஎஸ் அல்லாத பழைய மாடல்களைவிட ரூ.3,500 கூடுதல் விலையில் இந்த இரு புதிய மாடல்களும் வந்துள்ளன.

புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மாடல்கள் அறிமுகம்!

மேலும், திடீரென பிரேக் பிடிக்கும்போது பின்புற சக்கரங்கள் மேல் எழும்பாத வகையில் ரியர் லிஃப்ட் புரோடெக்ஷன் தொழில்நுட்ப வசதியும் கொடுக்கப்பட்டுளஐ்ளன. ஆனால், இதற்கு கூடுதல் விலை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று தெரிகிறது.

புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மாடல்கள் அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக்கில் முன்புறத்தில் சிங்கிள் 280 மிமீ விட்டமுடைய டிஸ்க் பிரேக்கும், பின்சக்கரத்தில் 153 மிமீ டிரம் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால், புல்லட் 350 ES மாடலில் இருசக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன.

புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மாடல்கள் அறிமுகம்!

புதிய புல்லட் 350 மோட்டார்சைக்கிள்களில் இருக்கும் 346சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் அதிகபட்சமாக 19.8 பிஎச்பி பவரையும், 28 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மாடல்கள் அறிமுகம்!

புல்லட் 350 மோட்டார்சைக்கிள் ஏபிஎஸ் பிரேக் சிஸ்டத்துடன் வந்திருப்பதால், ஏனைய அனைத்து ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள்களும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் கொண்டதாக வந்துவிட்டன.

புதிய பாதுகாப்பு தொழில்நுட்பங்களுடன் புதிய ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மாடல்கள் அறிமுகம்!

புல்லட் 350 மோட்டார்சைக்கிள்தான் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் குறைவான விலை மாடலாக விற்பனையில் உள்ளது. இதனால், வாடிக்கையாளர் மத்தியில் தனி இடத்தை தக்க வைத்து வருகின்றன. எனினும், விற்பனையில் ராயல் என்ஃபீல்டு 350 கிளாசிக் மாடல்கள்தான் பெரும் பங்களிப்பை வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Royal Enfield has launched the Bullet 350 and Bullet 350 ES with ABS in the Indian market. The Royal Enfield Bullet 350 ABS is priced at Rs 1.21 lakh while the Royal Enfield Bullet 350 ES ABS is offered at a price point of Rs 1.35 lakh. Both prices are ex-showroom (Delhi).
Story first published: Thursday, April 4, 2019, 12:53 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X