முதல்முறையாக கேமிராவின் கண்களில் சிக்கிய மலிவு விலை புல்லட்... புக்கிங் பற்றிய சிறப்பு தகவல்!

விற்பனை வீழ்ச்சியைச் சமாளிக்க ராயல் என்பீல்டு களமிறக்க இருக்கும் குறைந்த விலை புல்லட் மாடல் ஸ்பை செய்யப்பட்டுள்ளது. இத்துடன், இந்த பைக்கிற்கான புக்கிங்குறித்த தகவலும் கசிந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

முதல்முறையாக கேமிராவின் கண்களில் சிக்கிய மலிவு விலை புல்லட்... புக்கிங் பற்றிய சிறப்பு தகவல்!

ராயல் என்பீல்டு நிறுவனம், இந்தியாவின் புகழ்வாய்ந்த இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருக்கின்றது. இந்நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்கும் இந்திய இளைஞர்கள் மத்தியில் எப்போதும் நல்ல வரவேற்பு நிலவி வருகின்றது.

ஆனால், அண்மைக் காலங்களாக இந்நிறுவனத்தின் விற்பனை விகிதம் தொடர்ச்சியாக சரிவைக் கண்டு வருகின்றது.

முதல்முறையாக கேமிராவின் கண்களில் சிக்கிய மலிவு விலை புல்லட்... புக்கிங் பற்றிய சிறப்பு தகவல்!

அதேசமயம், இந்த ஒரு நிறுவனம் மட்டும்தான் இந்த சரிவைச் சந்தித்து வருகின்றதா... என கேட்டால், இல்லவே இல்லை எனதான் நாங்கள் கூறுவோம். ஏனென்றால், நாடு முழுவதும் இந்த பிரச்னை நிலவுகின்றது.

முதல்முறையாக கேமிராவின் கண்களில் சிக்கிய மலிவு விலை புல்லட்... புக்கிங் பற்றிய சிறப்பு தகவல்!

மிகவேகமாக வளர்ந்து வரும் சந்தையாகப் பார்க்கப்பட்ட இந்திய வாகன துறை ஒட்டுமொத்தமாக சரிவைச் சந்தித்து வருகின்றது. அதிலும், நடப்பு 2019ம் ஆண்டு தொடங்கியது முதல் வாகனதுறைக்கு மிகப்பெரிய சோதனை காலம் ஆரம்பித்துள்ளது என்றே கூறலாம். அந்த அளவிற்கு கடும் வீழ்ச்சியை வாகன தயாரிப்பு நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.

முதல்முறையாக கேமிராவின் கண்களில் சிக்கிய மலிவு விலை புல்லட்... புக்கிங் பற்றிய சிறப்பு தகவல்!

இதனால், பல நிறுவனங்கள் நிதி நெருக்கடியை சமாளிக்க உற்பத்தி குறைப்பு மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கையில் களமிறங்கியுள்ளன.

தற்போது இந்த வீழ்ச்சியில்தான் ராயல் என்பீல்டு நிறுவனமும் சிக்கி தவித்து வருகின்றது. அந்தவகையில், அந்நிறுவனம், முதல் கால் நிதியாண்டில் 19 சதவீத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதன் தாய் நிறுவனமான எய்சர் குழுமமும் 7 சதவீதம் வரை விற்பனை சரிவைச் சந்தித்திருக்கின்றது.

முதல்முறையாக கேமிராவின் கண்களில் சிக்கிய மலிவு விலை புல்லட்... புக்கிங் பற்றிய சிறப்பு தகவல்!

ஆகையால், இந்த வீழ்ச்சியை சமாளிக்க அந்நிறுவனம், புதிதாக ஜே என்னும் பிளாட்பாரத்தை தயார் செய்துள்ளது. இந்த பிளாட்பாரம் மூலம் மலிவு விலை மற்றும் சிறப்பான தரம் கொண்ட பைக்குகளைத் தயாரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

எனவே, புதிய ஜே பிளாட்பாரத்தில் தயாரிக்கப்படும் பைக்குகள், தற்போது விற்பனையில் இருக்கும் மற்ற மாடல்களைக் காட்டிலும் குறைவான விலைக் கொண்டதாக சந்தையில் களமிறக்கப்பட உள்ளன.

முதல்முறையாக கேமிராவின் கண்களில் சிக்கிய மலிவு விலை புல்லட்... புக்கிங் பற்றிய சிறப்பு தகவல்!

இந்நிலையில், புல்லட் வரிசையில் தயாரிக்கப்பட்ட விலை குறைவான புல்லட் 350எக்ஸ் மாடல் ஸ்பை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த புகைப்படத்தை ஆட்டோகார் இந்தியா ஆங்கில செய்தி தளம் வெளியிட்டுள்ளது.

மேலும், பைக்கிற்கான புக்கிங்கும் தொடங்கியிருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கான முன் தொகைகுறித்த விவரம் தெரியவில்லை.

முதல்முறையாக கேமிராவின் கண்களில் சிக்கிய மலிவு விலை புல்லட்... புக்கிங் பற்றிய சிறப்பு தகவல்!

இந்த புதிய மலிவு விலை புல்லட் பைக்கின் புகைப்படம், அந்த பைக்கின்மீது விலை குறைப்பிற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையை வெளிப்படுத்தும் வகையில் காட்சியை நமக்கு வழங்குகின்றது.

அந்தவகையில், விலை குறைப்பு நடவடிக்கைக்காக ஷைனி குரோம் ட்ரீட்மெண்ட், அடர்த்தியான வண்ணம் மற்றும் எஞ்ஜின் கூறுகளுக்கு வழங்கப்படும் கருப்பு நிறம் உள்ளிட்டவை நீக்கம் செய்யப்பட்டுள்ளதை அந்த புகைப்படங்கள் காண்பிக்கின்றன.

முதல்முறையாக கேமிராவின் கண்களில் சிக்கிய மலிவு விலை புல்லட்... புக்கிங் பற்றிய சிறப்பு தகவல்!

இந்த பைக்குறித்த முழுமையான தகவல் இன்னும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆகையால், இதில் கூடுதலாக மேலும் சில அம்சங்கள் குறைக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகின்றது. இதுபோன்ற நடவடிக்கையினாலேயே இந்த பைக் குறைந்த விலையில் களமிறக்கப்பட உள்ளது.

முதல்முறையாக கேமிராவின் கண்களில் சிக்கிய மலிவு விலை புல்லட்... புக்கிங் பற்றிய சிறப்பு தகவல்!

இந்த பைக்கில் 350 சிசி திறன் கொண்ட எஞ்ஜின் எதிர்பார்க்கப்படுகின்றது. அது அதிகபட்சமாக 20.07 பிஎஸ் மற்றும் 28 என்எம் டார்க்கை வெளிப்படுத்தும் திறனைக் கொண்டது. இத்துடன், இந்த எஞ்ஜினில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மோட்டார் பிஎஸ்-4 தரத்தில் இருக்கலாம் என கூறப்படுகின்றது. அதேசமயம், ராயல் என்பீல்டு நிறுவனம், அதனை பிஎஸ்-6 தரத்திற்கு உயரத்தவும் முயற்சி மேற்கொண்டு வருகின்றது.

முதல்முறையாக கேமிராவின் கண்களில் சிக்கிய மலிவு விலை புல்லட்... புக்கிங் பற்றிய சிறப்பு தகவல்!

இந்த மாசு உமிழ்வு தரத்திலான எஞ்ஜின் 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முன்னரே களமிறக்கப்படலாம் என கூறப்படுகின்றது.

புல்லட் 350 மலிவு விலையில் களமிறங்க உள்ளநிலையில், புல்லட் 500 மாடலும் அதேபோன்று குறைவான விலையில் களமிறக்கப்படுமா என்பது தெரியவில்லை. அதேசமயம், 350 எக்ஸ் மாடலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

முதல்முறையாக கேமிராவின் கண்களில் சிக்கிய மலிவு விலை புல்லட்... புக்கிங் பற்றிய சிறப்பு தகவல்!

ஆனால், இது தற்போது விற்பனையில் இருக்கும் மாடல்களைக் காட்டிலும் ரூ. 10 ஆயிரம் முதல் ரூ. 15 ஆயிரம் வரை குறைவான விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகையால், இந்த வேரியண்ட் டிவிஎஸ் அப்பாச்சி, ஆர்டிஆர் 200 மற்றும் பஜாஜ் பல்சர் 200என்எஸ் உள்ளிட்ட பைக்குகளுக்கு போட்டியாக இருக்கும்.

images are representation purpose only

Most Read Articles
English summary
Royal Enfield Bullet 350 X Cheaper Variant. Read In Tamil.
Story first published: Friday, August 9, 2019, 12:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X